ஞான உபதேசம் - தேவ வரப்பிரசாதத்தின் வழிமுறைகள்

8. கிறீஸ்தவன் தேவ கிருபை அடைவதற்கு உபயோகிக்க வேண்டிய வழிமுறைகள் எவை?

தேவ திரவிய அனுமானங்களைப் பெறுதல், செபம் செய்தல் முதலிய வேத அனுசாரங்களேயாம்.


1. தேவதிரவிய அனுமானம் என்றால் என்ன?

தேவ வரப்பிரசாதத்தை நமக்குக் குறித்துக் காட்டவும், அதை அளிக்கவும் சேசுநாதர் சுவாமியே ஏற்படுத்தியதுமான வெளி அடையாளமாம்.


2. ஜெபம் என்பது எது?

நமது இருதயத்திலுள்ள ஆசைகளைச் சர்வேசுரனுக்குச் சொல்லிக் காட்டும்படி அவரோடுகூட நாம் செய்யும் உரையாடலாகும்.


3. வேத அனுசரிப்பு என்றால் என்ன?

ஞானக் காரியங்களை நடைமுறையில் அனுசரிப்பதாம். உதாரணமாக: தவம், தர்மம் முதலிய வேத ஊழியக் கிரியைகளை அனுசரிப்பது.