கடவுளும் நாமும் - மனிதன்

2. மனிதன் என்றால் யார்?

நமது உடலைமட்டும் தனியாகப் பிரித்து அதை மனிதன் என்று சொல்ல முடியாது. ஏனெனில், உயிருடன் சேர்ந்து இயங்காத உடல் பிணமாகும். அதுபோலவே, உயிரை மட்டும் தனியாகப் பிரித்து அதை மனிதன் என்று கூறமுடி யாது ஏனெனில், உடலற்ற உயிர். உருவமற்ற அருவ மாகும் (அரூபி) எனவே, உடலயும் ஆன்மாவையும் உடையவனே மனிதன் எனப்படுவான். இவற்றுள் சில உறுப்புகள் குறைந்திருந்தாலும் மனிதன் மனிதனே! எடுத்துக்காட்டாக ஒருவனுக்கு கை, கால், மூக்கு, கண் முதலியவை குறைந்திருப்பினும் அவன் மனிதன் தான். ஏனெனில், மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமான உறுப்புகள் அவனுக்கு இருக்கின்றன

3. மனிதனை மனிதனாக்குகின்றவை யாவை?

உடலும், ஆன்மாவுமே மனிதனை மனிதனாக்குபவை. மற்ற உயிர் பொருட்கள் உடலுடன் இயங்குவன ஆயினும், அவற்றிற்கு ஆன்மாவும், பகுத்தறிவும் இல்லாத காரணத் தால் அவை மனிதனல்ல மேலும் மனிதனுக்குப் புறத்தே யுள்ள நிலம், வீடு ஆஸ்தி, சுற்றத்தார், உடுக்கும் உடை, அணியும் ஆபரணங்கள், உபயோகிக்கும் பாத்திரங்கள் முதலியன. ஒரு மனிதன், மனிதனாயிருப்பதற்கு அத்தியா வசியமானவையல்ல. ஆனால் இவை அவனது தனிப்பட்ட அல்லது சமூக வாழ்க்கைத்தரத்துக்கு ஏற்பக் கருவிகளாக அமைவனவைதவிர, வேறில்லை. எனவேதான் அவன் தன் கடைசி கதியாகிய வீடுபேற்றையடையும் முயற்யில், மேற் கூறிய பொருட்கள் ஓரளவு அவனுக்குத் தேவைப்படலாமே தவிர, அத்தியாவசியமானவையல்ல. அவன் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து மனிதத் தன்மையை நிலைநாட்ட உதவுகின்றன இவையும் ஓரளவு அவசியமே.

4. மனிதனின் துவக்கம் யாது?

மனிதனின் துவக்கம் என்பது பற்றி கூறவேண்டுமாகில் அவனது ஆன்மாவின் துவக்கம். உடலின் துவக்கம் ஆகியவற்றைத் தனித்தனியே ஆராய்ந்து பார்க்கவேண்டும். மனிதனைத் தவிர வேறுபட்டுள்ள தாவர உலகம். ஏனைய உயிருலகம் முதலியவற்றைக் கடவுள் உண்டாக்கிய போதே அவற்றின் இனப்பெருக்கத்தை உண்டாக்கும் சக்தியை. அற்புதமான விதமாக அவற்றுக்கு அளித்துள்ளார்.

அந்த முறையில் இம்மியும் தவறாது இன்றளவும் நடந்து வருவதை நாம் அறிவோம். இந்தப் புதிய படைப்புகளின் உயிரையோ. உடலையோ உண்டாக்குவதில் கடவுள் நேரடியாகப்பங்கு பெறுவதில்லை எனினும் அவரது தெய்வீகப் பராமரிப்பு அவைகளுக்கு உண்டு. இதுபற்றியே "கருப்பையின் முட்டைக்கும், கல்லினுள் தேரைக்கும், விருப்புற்று அமுதளிப்பவர் இறைவன்" - என்னும் முதுமொழி நம்மவரிடையே வழங்கி வருகிறது. தத்துவ ஞானிகள் கண்டுரைக்கும் உண்மையும் இதுவேயாகும்.

எடுத்துக்காட்டாக ஒரு மாமரம், தன்னையொத்த மாமரத்தைத் தனது வித்தினால் உண்டாக்கும் சக்தி பெற்றுள்ளது. இவ்வாறே ஒவ்வொரு விலங்கும். பறவையும் தனது இனப்பெருக்கம் செய்யும் சக்தியால், அவற்றின் பரம்பரை அழியாது காத்து வருகிறது. இவை பிறந்து, வளர்ந்து, இனத்தைப் பெருக்கி, முதிர்ந்து, மடிந்து. அழிந்து போகின்றன.

இவற்றின் உயிர் இறைவனிடம் போய்ச் சேருவதில்லை ஏனெனில், இவற்றுக்கு மறுவாழ்வு கிடையாது. எனவே, இவைகட்கு சிறந்த முறையில் துவக்கம் எதுவும் இருப்பதாகக்கூற முடியாது. இவற்றின் துவக்கமும் முடிவும் கடவுளின் நித்திய நியதிக்குட்பட்டு விளங்குவன. ஆனால் மனிதனின் இருபகுதிகளான உயிர் அல்லது ஆன்மா உடல் இவற்றின் துவக்கம் வேறுபட்டது.

எடுத்துக்காட்டாக உடலானது பெற்றோரின் ஒத்துழைப்பால் உருவாகி, வாழ்வுக்குப்பின் அழிந்து போகக்கூடியது. உயிர் அல்லது ஆன்மாவோ, இறைவனிடமிருந்து உண்டாகி, உடலுடன் சேர்ந்து குறிப்பிட்ட, காலவரையளவு அதில் தங்கியிருந்து. உடல் மாயும்போது. அதை விட்டுப் பிரிந்து, மறுபடியும் இறைவனிடம் போக வேண்டியது.

எனவே, உடலின் துவக்கம் பெற்றோர். அதாவது ஆண், பெண் உடலுறவில் ஆணின் உயிர்ச் சக்தி அணு, பெண்ணின் உயிர்ச் சக்தி அணுவுடன் சேர்த்து, கருவாகி, உருவாகிப்பிறகு சில மாதங்களுக்குப் பின் குழந்தையாகப் பிறக்கிறது. ஆனால் ஆன்மாவின் துவக்கம் பெற்றோர் அல்ல; கடவுளேயாவர்.

தாயின் உதரத்தில் உயிரணுக்கள் கருவாகும் நிலையில், கடவுள் ஒவ்வொரு கருவுக்கும், புதிது புதிதாக அவ்வப்போது தன் ஆவியின்-தன் உயிரின் தன் சக்தியின், ஒரு பகுதி என்று சொல்லக்கூடிய ஆன்மாவைப் படைத்து அதனுடன் இணைக்கிறார். இவ்வாறு மனிதனின் உற்பவத்தில், தானே நேரடியாகப்பங்கு பெறுகிறார்.

எனவே, மனிதப்படைப்பில், பெற்றோர், கடவுளுடன் ஒத்துழைத்து தம்போன்ற புதிய மனிதப்பிறவியை உலகிற்கு அளிக்கின்றனர் என்பது தெளிவாகிறது. கடவுள் ஆதி மனிதனையும், பெண்ணையும் படைத்தப்பின்'' நீங்கள் பலுகிப் பெருகுங்கள்" என்று ஆசிர்வதித்துவிட்டாலும், அவர்கள் பெருக்கத்தின் ஒவ்வொரு உயிருக்கும் அவரும் ஒத்துழைக்கிறார் என்பதே உண்மை.

ஏனெனில், ஆன்மாவைப் பெற்றோர் கொடுக்க முடியாது. காரணம், ஆன்மா, தெய்வீகச்சாயலில், தெய்வீகக் குணங்களில் பங்கு கொண்டதாக உண்டாக்கப் பட்டிருக்கிறது. எனவே, மனித ஆன்மா என்பது. புத்தியும், அறிவும் மனச்சுதந்திரமும் உடையதாய், தெய்வீகச்சாயலில் உண்டாக்கப்பட்டுள்ள, அழியாத ஒரு சித்துப்பொருள் ஆகும் என்பது தெளிவாகிறது. 

5. மனிதனின் முடிவு யாது?

மனிதனின் இருபெரும் பகுதிகளுக்கு இருவிதமான துவக்கம் இருப்பது போல, அவற்றிற்கு இருவிதமான முடிவு உண்டு. பெற்றோரின் ஒத்துழைப்பால் உண்டான உடலை விட்டு ஆன்மா பிரியும்போது உடல் சவமாகி அழிந்துவிடுகிறது. இறைவனால் படைக்கப்பட்ட ஆன்மாவோ அவரிடமே திரும்பவும் சென்று. அவரால் குறிக்கப்பட்ட இடத்தில் அவரைப் போலவே அழியாது வாழும்.