செயல் அல்லது கிரிகை

48. நினைவு, வாக்கு மாத்திரமின்றி, கிரிகையிலும் நமது அன்பைக் காட்டி, கடவுளைச் சேவிப்பது எங்ஙனம்? 

மனிதனுடைய உடலுறுப்புகளின் அசைவுகளைக் கிரிகை கள் அல்லது செயல்கள் என்று சொல்லலாம். நா அசைவு என்னும் பேச்சைப்பற்றி முன்னே பார்த்தோம். மற்ற கிரிகைகளில் சில, அவனது சுய அறிவு சுய மனதுடன் செய்யக் கூடியவை (உ-ம்) கையில் எழுதுகோலை எடுத்து ஒரு கடிதம் எழுதுவது. இன்னும் சில சுய மனதும், அறி வும் ஈடுபடாமலே நிகழ்வன (உ-ம்) இருதயத் துடிப்பு. இரத்த ஓட்டம் முதலியன. இதைத் தவிர இன்னும் வேறு விதமான கிரிகைகளும் உண்டு.

(1) சுய அறிவுடன் மட்டும். சுயமனிதன் ஒன்றிப் பின்றி நடைபெறுவது. (உ-ம்) கால் அடியெடுத்து வைத்து நடப்பது இத்தகைய கிரிகைகளையும் நினைவுபடுத் திக்கொண்டு அதை மனதார கடவுளுக்காக என்று செய்யும் போது அது ஒரு சிறந்த புண்ணியக் கிரிகையாக மாறு கிறது.

(2) சுய அறிவும், மனதும் உள்ள ஒரு விருப்பமான கிரிகை (உ-ம்) சுவையுள்ள பொருளை ருசித்துப் புசிப்பது, இதுவும், தனது விருப்பத்துக்காக என்று மட்டுமில்லாமல், இறைவனின் நன்மைத்தனத்தை நினைவு கூர்ந்து, அவரது சிநேகத்துக்காக என்று செய்தால் ஒரு புண்ணியக் கிரிகை யாகும்.

(3) சுய அறிவும், மனதும் பொருந்திய ஒரு வெறுப் பான கிரிகை (உ-ம்) உடல் வருந்த மண் சுமப்பது, இந்த விதமான செயல்களை, மக்கள் கடவுளுக்கு விரோதமாகச் செய்யும் மாபாதங்களுக்கு ஈடுசெய்யும் பரிகாரக் கருத்துடன் முறையிடாது, தொடர்ந்து செய்வது சிறந்த புண்ணிய மாகும். இத்தகைய புண்ணியக் கிரிகைகளினால் நாம் கடவு ளுக்குத் திருப்திகரமான முறையில் சேவை செய்யலாம்.

49. கடவுள் சேவைக்காக என்று அர்ப்பணம் செய்யும் கிரிகைகளில் வேறுபாடுகள் உண்டா ? 

ஆம்; உண்டு. அவை பல வகைப்படும்.

(a) எளிதானது அல்லது கடினமானது. அதாவது; தனது சொந்தப் பலத்தைக்கொண்டு எளிதாகச் செய்யக் கூடியது (உ-ம்) 16 வயது பையன் ஒரு மைல் நடப்பது அல்லது தன் பலத்தையெல்லாம் கூட்டி பிரயாசையுடன் அதிக வேலை செய்வது. (உ-ம்) அதே பையன் விடாது தொடர்ந்து 20 மைல் நடப்பது.

(b) மனதுக்குப் பிடித்தது அல்லது பிடிக்காதது. அதாவது, ஒருவன் விருப்பத்தோடு ஆவலாகச் செய்யக் கூடியது. (உ-ம்) மாணவன் பந்து விளையாடுவது. அல் லது வெறுப்போடு முறையிட்டுக்கொண்டும், முனகிக் கொண்டும். செய்வது. (உ-ம்) குப்பைக் கூளங்களைக் கூட்டிச் சுத்தம் செய்தல்

(c) கொடுக்கப்பட்டது அல்லது தெரிந்து கொள்ளப் பட்டது. (உ-ம்) ஆசிரியர் மாணவனுக்கு வீட்டுப் பாட மாகக் கொடுக்கப்பட்ட பயிற்சிகள் அல்லது தன் விருப்பப் படி தெரிந்து கொண்ட ஓய்வு நேரப் போக்குக்கான வேலைகள் (உ-ம்) தபால் தலைகள் சேகரித்தல், நூல் பின்னுதல் முதலியன.