இறைவன் நமது தீர்வையாளர்

50. இறைவன் நமது தீர்வையாளர் என்றால் என்ன ?

இறைவன் நம்மை. தனக்காகப் படைத்தவர், நமது வாழ்க்கையை அவருக்காக அர்ப்பணித்து, நமது மனம், வாக்கு, கிரிகை ஆகிய அனைத்தையும் அவருக்காகவே உப யோகப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார். அதே சமயத்தில் நமக்கு மன சுவாதீனத்தைக் கொடுத்து, நன்மை செய்யவும் அல்லது அதை அகற்றி, தீமை செய்யவும் வேண்டிய தீர்மானத்தை நாமே முடிவு கட்டும் சக்தியையும் கொடுத்திருக்கிறார். நாம் இந்த சக்தியைப் பயன்படுத்தி, தீர்மானிக்கும் போது எந்த நிலையில் நாம் இருக்கின்றோமோ அதற்கேற்ற தீர்ப்பை நமக்கு வழங்குவார். அத்தீர்ப்பின் படி, பேரின் பயடைய, மோட்ச வீட்டுக்கோ, அல்லது நித் திய வேதனை அனுபவிக்க நரகத்துக்கோ நாம் போகும்படி இருக்கும். இதைத்தான் தீர்வை என்கிறோம்.

51. இந்தத் தீர்வைரின் தன்மை யாது?

மனிதப் பிறவி எடுத்த அனைவருக்கும் இந்த தீர்வை நடக்கும். பாவி, பரிசுத்தன், ஜாதி, மதம், அந்தஸ்து என் னும் யாதொரு வேறுபாடுமின்றி, சரீரத்தைவிட்டு, ஆன்மா பிரிந்த நேரத்திலேயே, அதே இடத்திலேயே எல்லாவற் றையும் அறிந்த கடவுள், அந்த ஆன்மாவின் நிலையை அதற்கே தெளிவுறக் காட்டித், தனிப்பட்ட முறையில், அதா வது மற்ற பூலோக வாசிகள் ஒருவரும் அறிந்துகொள்ள முடியாத விதத்தில் தீர்ப்பளித்து குறிக்கப்பட்ட இடத்தில் அவ்வான்மாவை அனுப்பிவைப்பார் என்பதாகும். இதைத் தனித் தீர்வை என்றும் சொல்லலாம்.

52. தனித் தீர்வையைத் தவிர, வேறுவிதமான தீர்வையும் உண்டா ?

உண்டு உலக முடிவில், இறைவன் அனைத்துலக மக் களையும் ஒன்று சேர்த்து. சகலருக்கும் முன்பாக. அவ ரவர் செய்த பாவ புண்ணியங்களைப் பகிரங்கமாக அறியும் படிச் செய்து, நல்லவர்களைப் புகழ்ந்து ஆசீர்வதித்து, மோட்சத்துக்கும். கெட்டவர்களைச் சபித்து, நரகத்துக்கும் அனுப்பி வைப்பார். இது அனைவருக்கும் பொதுவாக நடைபெறும். ஆதலால் இதைப் பொதுத் தீர்வை என்று சொல்லலாம்.

53. பொதுத்தீர்வை எப்போது நடக்கும்?

உலக முடிவில் நடக்கும்; அதாவது உலகின் கண் வாழ்ந்த மக்கள் அனைவரும், இன்னும் மற்றுமுள்ள உயிர்ப் பிராணிகள் அனைத்தும் நெருப்பினால் அழிந்து போகும். அதன் பிறகு, உலகத் துவக்க முதல், அழிந்த இறுதி நாள் வரை, பிறந்து இறந்த மக்கள் அனைவரையும், இறைவன் உயிர்ப்பித்துத் தீர்ப்பளிப்பார். நல்லவர்கள் தமது தாழ்ச் சியால் மறைந்து கிடந்த நன்மைத்தனத்தையும், தீயோர் தமது சூழ்ச்சியினால் மறைத்து வைத்திருந்த தீய குணத்தி னால் விளைந்த தீமைகளையும், சகல மக்களுக்கும் தெளிவாகக் காட்டுவார் என்பது தேவ அறிக்கையின் உண்மைகளில் ஒன்று. தனித்தீர்வையில் அளிக்கப்பட்ட இடம், சம்பா வனை முதலியன மாறாவிடினும், இந்தத் தீர்வையில் நல்லோ ரின் மதிப்பு அனைவருக்கும் முன்பாக உயரவும், தீயோரின இழி நிலை அதிக வெறுப்புள்ளதாகவும் வழியுண்டு அதா வது, வஞ்சக உலகில் நல்லோர் அடைந்த தாழ்வுக்கு ஈடு செய்யவும், தீயோர் அடைந்த பெருவாழ்வுக்கு பரிகாரமாக வும். நீதியே வடிவான இறைவனால் ஏற்படுத்தப்பட்ட நியதியே இந்தப் பொதுத் தீர்வை எனலாம். மேலும் நல் லோரை உயர்த்தவும், தீயோரைத் தாழ்த்தவும் இறைவன் கையாளும் நேர்மையான வழி இதுவே என்றும் கூறலாம்

54. தனித்தீர்வை எப்போது நடக்கும் ?

ஒவ்வொரு மனிதனுடைய ஆன்மா எனப்படும் உயிர், அவனுடைய உடலைவிட்டுப் பிரிந்து, அதை உயிரற்ற சவ மாக ஆக்கும் அந்த க்ஷணத்திலே தனித்தீர்வை நடக்கும் உடலை விட்டு உயிர் பிரியும் நிலையையே சாவு அல்லது மரணம் என்கிறோம்.