வாக்கு

45. வாக்கு அல்லது பேச்சினால் நம் கடவுளை சேவிப்பது எங்ஙனம்?

இதய நிறைவில் வாய் பேசும்'' - என்பது மூதுரை. இறைவனின் இயல்பு. குண நலன்கள், அருட்செயல்களை நாம் அறிந்த பின், இதை மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறி, அவர்களும் இறைவனது மகிமை, பெருமைகளை அறியும் படியும், அதன் வழியாக. அவரை நேசிக்கும்படியும் செய்ய வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும். தனி மனிதனிடமோ, பலபேர் கூடியிருக்கும் கூட்டத்திலோ, தாம் இறைவனைப்பற்றிய உண்மையை எடுத்துரைக்கத் தயாராக இருக்கவேண்டும்.

46. இத்தகைய பிரசாரம் செய்பவர்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் யாவை? 

(a) உண்மை : உண்மையை, உள்ளபடியே வேண் டிய அளவில் உண்மையாகக் கூறுவது அச்சத்தினால் உண்மையை மறைத்தோ, அல்லது நமது பேச்சைக் கவர்ச்சிகரமாக்க வரம்பு கடந்து இல்லாதவற்றைக் கூட்டியோ, மிகைப்படுத்தியோ பேசுவது பொய். இந்நிலை யில், பிற்பாடு வெளிப்படுமாகில் நம்மை ஒருவரும் நம்ப மாட்டார்கள்.

(b) மன உறுதி : இறைவனைப்பற்றிய உண்மைகளை கூறுவதில் தயக்கம் இருக்கக்கூடாது. உண்மை எப்போ தும் வெற்றி கொள்ளும் ' இறைவன் என்னோடு இருக்கை யில் என்னை எதிர்ப்பவன் யார்?'' என்னும் திடமான மனதுடன் எடுத்துச் சொல்லவேண்டும். இடம், காலம், சூழ்நிலை முதலிய சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி விவேகத் துடன் இருக்கவேண்டியது உண்மையே; ஆனால் கோழைத் தனமின்றி நமது கொள்கையை நிறுவவேண்டும்.

(c) அமைதி :- இறைவனைப்பற்றிய உண்மைகளைப் பிரச்சாரம் செய்யும் போது, சுய நலத்தைப் பாராட்டக் கூடாது. ஆனபடியால், நம்மிடம் ஆத்திரமோ, பட படப்போ இருக்கக்கூடாது நமது பேச்சில் சில கொள்கை களைத் தாக்கிப் பேச நேரிடலாம். அப்போது. அந்தக் கொள்கைகளைப்பற்றிய நமது கருத்து வேறுபாட்டைக் காட்டலாமே தவிர, அக்கொள்கைகளைப் பின்பற்றுவோர் மீது கோபப்படலாகாது. ஏனெனில், சில சமயங்களில் அறியாமையே அபத்தத்தின் காரணமாயிருக்கிறது. அமைதியுடன் எடுத்துரைக்கும், இடித்துரைகள், கேட்போர் மனதில் தாக்கி, எளிதாக உண்மையை உணரச் செய்வதை நமது அனுபவத்தில் காணலாம்.

(d) பணிவு :- நாம் எடுத்துரைக்கும் உண்மைகள் நமக்கு மட்டுமே தெளிவாகவும், திருத்தமாகவும், விளங்கு வதாகவும், மற்றவர்கள் எல்லோரும் பேதைகள் என்னும் கர்வ மனப்பான்மை கொள்ளலாகாது. உண்மை அனை வருக்கும் பொதுவானது. சகல மக்களும் உண்மையை அறிவதற்கு உரிமை உள்ளவர்கள் என்றும், பிறருக்கு உண்மையை விளக்கி கூறும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தது பெரும் பேறென்றும் கருதி, தாழ்மையுடனும், பணிவுடனும் பேச வேண்டும். 47. உண்மையைப் பிரச்சாரம் செய்வதில், பேச்சைத்தவிர, வேறு வழிவகை எதுவும் உண்டா ? அச்சுப் பிரசுரங்களைக் கையாளுவது மற்றொரு நல்ல முறையாகும். பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி உண்மைகளை விளக்கலாம். புத்தகங்களை நாமாகவோ அல்லது மற்றவர்களின் உதவியினாலோ, வெளியிட்டு உதவலாம் வெளியீடுகளை நாமும் வாங்கி வாசித்து, மற்றவர்களும் வாசித்தறிய வழி செய்யலாம். ஆனால் ஒன்று: பேச்சுப் பிரச்சாரத்தில் அனுசரிக்க வேண்டிய நன் முறைகளை எழுத்துப் பிரச்சாரத்திலும் கைக்கொள்ள வேண்டும்.