1263 ம் ஆண்டு ப்ரேகு (Praque) நாட்டைச் சேர்ந்த பீட்டர்(Peter) உரோமிற்கு திருப்பயணம் சென்றபோது போல்ஸினா வில் (Bolseno) நிற்கிறார். அவர் ஒரு பக்திமிக்க குரு என்று சொல்லப்படுகிறார், இருந்தபோதிலும் அப்பத்தின் மாற்றத்தில் அவருக்கு ஐயம் இருந்தது.
பரிசுத்த கிறிஸ்ற்றினா கல்லறையில் அவர் திருப்பலி நிறைவேற்றும் போது, வார்த்தையளவில் மட்டும் (உருக்கமில்லாமல்) எழுந்தேற்ற வார்த்தைகளைச் சொன்னபொழுது அப்பம் கொடூரமாக இரத்தம் வடிக்க ஆரம்பித்தது. உடனே ப்ரேகுவை சார்ந்த அந்த பீட்டர் அந்த அப்பத்தை பொதிந்து உடனடியாக அருகிலிருந்த பேரூர்(town) அர்வியட்டோ (Orvieto)ல் இருந்த பாப்பானவர் நான்காம் அர்பனிடம் (Urban) எடுத்து சென்றார்.
பரிசுத்த தந்தை, மெய்யாகவே நற்கருணை புதுமை நடந்திருந்தது என்று முடிவு செய்தார். இந்த புதுமையை சிறப்பிக்கும் வகையில் அவர் ஒரு புதிய திருநாளை ஏற்படுத்தி கிறிஸ்துவின் திருவுடல் திருநாள் (Corpus Christi) என்று அழைத்தார். இது இன்று வரை இருக்கிறது.