சேன்றரம், போர்ச்சுக்கல்!

13 ம் நூற்றாண்டின் நடுப்பகுதி!

சேன்றரம் நாட்டை சேர்ந்த ஒரு பெண்மணி தனது கணவன் தனக்கு அவநம்பிக்கையாக இருப்பதாக கருதியதால் துர்மந்திரவாதியின் (குறிசொல்பவன் அல்லது செய்வினை செய்பவன் என்றும் கொள்ளலாம்) ஆலோசனையை நாடினாள்.

அந்த துர்மந்திரவாதி ஒரு நற்கருணையை கேட்டார். அதை கொண்டு வருகையில் அவள் தனது கணவனின் அன்பைப் பெற்று விடுவாள் என்று கூறினான். அந்த பெண்மணி அவளிடம் எதை செய்யக் கேட்கப்பட்டிருக்கிறதோ அது திட்டவட்டமாய் தவறு என்றும் உணர்ந்தாள்.

ஆயினும் அவள் திருப்பலிக்கு சென்று நற்கருணையை பெற்றுக்கொண்டாள், ஆனால் இதயத்தில் பெற்றுக்கொள்ளாமல் வாயிலிருந்து உடனே வெளியே எடுத்து கைக்குட்டையில் பொதிந்து கொண்டாள்.

அந்த அப்பமானது இரத்தம் வடிக்கிறது என்பதை கவனியாமல் அவள் தேவாலயத்தை விட்டு வெளியே விரைந்தாள். இரத்தத்தைப் பார்த்த ஒரு ஊர்வாசி அந்த பெண்தான் காயப்பட்டிருப்பதாக வருந்தி இரத்தம் வடிவதை அவள் கவனத்திற்கு கொண்டு வந்தான்.

அப்பம் தான் இரத்தம் வடிக்க ஆரம்பித்து விட்டதை பார்த்த அவள் அதை வீட்டிற்கு எடுத்து சென்று பேழையில்(trunk) வைத்தாள்.

அந்த இராவில் அவளும் அவளது கணவனும் பேழையிலிரிந்து வெளிவந்த பிரகாசமான ஒளிக்கதிர்களால் எழுந்தார்கள். பிற மக்களும் அவ்வீட்டிற்கு வந்த இந்த வினோதத்தைக் கண்டார்கள்.

அந்த பங்கு குரு அந்த அப்பத்தை ஆலயத்திற்கு மீண்டும் எடுத்துச்சென்று நற்கருணை பேழையில் ஒரு மெழுகு கலனில் வைத்தார்.

மறுமுறை அவர் பேழையை திறக்கும் போது அந்த மெழுகு கலன் உடைந்து படிகச் சிமிழால் தாங்கப்பட்டிருந்தது.