சாவு

55. பிறந்த மனிதன் ஏன் சாக வேண்டும்?

இறைவன் ஆதியில் மனிதனைப் படைத்தபோது அவனுக்கு சுபாவத்துக்கு மேலான சில சிறந்த வரங்களைக் கொடுத்திருந்தார் அவற்றுள் ஒன்று சாகாமை. அந்த வரங்களை அவன் இறைவனது கட்டளையை அனுசரித்தால் அப்படியே அனுபவித்து இருக்கலாம் இறைவனும் அவ னுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்திருந்தார். அவரது அந்த எச்சரிக்கையை மீறி அவன் நடந்தால் அவன் சாவான் என் றும் சொல்லியிருந்தார். ஆனால் ஆதிமனிதனோ அதைப் பொருட்படுத்தாது, தேவ கட்டளையை மீறினதின் விளை வாக அவனுக்கு சாவு ஏற்பட்டது. எனவே, பிறப்புள்ள மனிதனுக்கு இறப்புண்டு என்பது தெய்வ நியதியாகிவிட் டது. இதிலிருந்து ஒருவரும் தப்பிவிட முடியாது.

56. எப்போது சாவு வரும்?

சாவு திருடனைப்போல் வரும் என்பது வேத வாக்கு. அதனால் யாருக்கு எப்போது சாவு வரும் என்று உறுதி யாகக் கூற முடியாது. எந்த விதமான சூழ் நிலை சாவுக்கு ஏற்றது அல்லது ஏற்காதது என்று திட்டவட்டமாகவும் சொல்ல முடியாது. ஏனெனில்:

(1) வயதில் முதிர்ந்தோர் இறத்தல் இயல்பு எனி னும், எந்த வயதிலும், நிலையிலும் மரணம் வருதலைக் காண் கிறோம். பாலர், வாலர். விருத்தர் என்னும் வேறுபாடு சாவுக்கு இல்லை என்பதே நமது வாழ்வில் நாம் காணும் உண்மை .

(2) உடல் நிலை :- நோயுற்றோர், மரணத்துக்காக காத்திருக்கையில், நல்லுடல் பெற்றோர் திடீரென இவ்வுலக வாழ்வை நீத்து மறைந்துவிடுதலும் உண்டு நெருப்பு. வெள்ளம், சண்டை, எதிர்பாராத ஆபத்து. விஷப்பூச்சி களின் கடி ஆகியவற்றால் மரிப்பதும் சகஜமாயிருக்கிறது.

(3) ஆன்ம நிலை :- மனிதனின் கடைசிக் கதியான கடவுளை அடையும் நிலையில் இருப்பவர்கள் தான் இறத்தல் நல்லது. ஆனால் பொறுமையும், சகிப்புத்தன்மையும் நிறைந்துள்ள இறைவன், வாழ்நாளில் மனிதனுக்கு அநேக தவணை கள் கொடுத்து, தன்னைத்தானே சீர்திருத்திக்கொள் ளும் வாய்ப்பைத் தருகின்றார். இது உண்மையே எனினும் நீதியின் திட்டப்படி, ஒருவனுடைய ஆன்ம நிலை சரியான நிலையில் அமையும் வரை அவர் காத்திருப்பதாகத் தோன்ற வில்லை. பாவிகளையும், புண்ணியவான்களையும் பாரபட்ச மின்றி, குறித்த நேரத்தில் அழைக்கச் சித்தமாகிறார்.

(3) சமூகத் தேவை :- சமூக முன்னேற்றத்துக் காக ஒரு சிலருக்கு சிறந்த முறையில் சாமர்த்தியம், திறமை, முதலியவற்றைக் கொடுத்து அவர்களைப் பயன்படுத்திக் கொள்வது போல் தோன்றிடினும், அவர்களைக் குறிப்பிட்ட ஒரு சிலருக்காகவோ, அல்லது சமூகத்துக்கடுத்த அவசியத் துக்காகவோ தேவைப்படுவார் என்னும் காரணத்துடன் யாரையும் விட்டு வைப்பதில்லை. வல்லவரின் கையில் வந்த புல்லும் நல்லதோர் ஆயுதமாகும். எனவே. ஒருவர் போனால் இன்னொருவர் அந்த இடத்தை நிரப்புவார். ஆகையால் நேரம் வந்தபோது ஆன்மாவைப் பிரித்துவிடு கிறார்.

ஆகவே, எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவன் குறிப்பிட்ட வேளையில்தான் மரிப்பான் அல்லது மரிக்க மாட்டான் என்று சொல்ல முடியாது.

57. மரணத்துக்கு எவ்விதம் தயாராகலாம்?

மரணம் எந்த நேரத்திலும் வரலாம்; அதுவும் திடீ ரென திருடனைப்போல், நினையாத நேரத்தில் வரலாம். ஆன தால் அதற்கு எப்போதும் தயாராக இருப்பவனே புத்திசாலி.

(a) தன்னைப் பொறுத்தவரை தயாராக இருக்க வேண்டும். அதாவது. தனது ஐம்புலன்களையும் சரியான விதத்தில் உபயோகித்து, மனம், மொழி. செயல் இவற்றில் தூய்மையாக இருந்து நல்வாழ்வு வாழ முயற்சிக்க வேண்டும்.

(b) பிறரைப் பொறுத்தமட்டில், பிறருக்கு எந்தவிதத் திலேனும் கடனாளியாகவோ, தின்மைசெய்யவோ எண்ணக் கூடாது. நம்மால் இயன்ற அளவில் முயன்று நன்மை செய்துவர வேண்டும்.

(c) கடவுளைப் பொறுத்தவரை :- நமது கதியும், இலட் சியமும் இறைவனேயாதலால், அவரது விருப்பத்தை நிறை வேற்றுவதில் கண்ணுங்கருத்தமாக இருக்க வேண்டும் அவர் வெறுப்பதை நாமும் வெறுத்து இறுதி வரையில் உறுதியுடன் நிலைத்திருக்க வேண்டும். அவருடைய சந்நிதி யில் நாம் என்றும் இருப்பதாக எண்ணி, அவருடன் ஒருமை வாழ்வு கொண்டு நடக்க வேண்டும்.

58. தூய வாழ்க்கையுடையோரின் மரணம் எப்படி இருக்கும்?

'நல்ல ஜீவியம் நல்ல மரணம் - என்பது போல, நமது ஜீவியம் எப்படி இருந்ததோ அப்படியே நமது மரணமும் இருக்கும் ஆன்மாவைப் பொறுத்தவரை நல்ல மரணமா என்று கணிப்பது தான் முறை. ஏனெனில் சரீர உடலைப் பொறுத்தவரை, அதாவது, ஆன்மா பிரியும் போது உடல் எந்த நிலையில் இருக்கிறது என நாம் கவலை கொள்ள வேண் டியதில்லை. கவலைப்பட்டும் பயனில்லை. ஆன்மா பிரியும் வேளையில் ஒருவரது சூழ் நிலையைப் பொறுத்து அவரது உடல் எந்த நிலையிலும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, தொற்று நோயால் பீடிக்கப்பட்டு, அல்லது விபத்தில் அகப் பட்டு உருமாறி பிறரால் கொடூரமாக வதைக்கப்பட்டு, தூக் கில் இடப்பட்டு, அல்லது சடுதி மரணமாக அருகில் ஒருவ ரும் இன்றி. இறந்து கிடக்கலாம். புதைக்க ஆளின்றி அந்தச் சடலம் அங்கேயே பல நாள் கிடந்து நாற்றமெடுக் கலாம். இதுவெல்லாம் கெட்ட மரணத்தின் அறிகுறியல்ல. அழியும் உடல் ஏதேனும் ஒருவிதத்தில் அழிய வேண்டி யிருப்பதால் எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால். மேலே சொன்னபடி மரணத்துக்குத் தன்னை தயா ரித்துக்கொண்டிருந்த அந்த ஆளிடம் அல்லது மனிதனி டம், ஆன்மா பிரியும்போது;

(1) ''ஐயோ! சாகப் போகிறேனே" - என்ற ஏக்கமும் கவலையும் இருக்காது. ஏனெனில் மோட்சம் போகுமுன். வெற்றிகொள்ள வேண்டிய சோதனைகளெல்லாம் முடிந்தது என்று மகிழ்ச்சி கொள்வான்.

(2) பழகிய பொருட்களை விட்டுப்போகிறோமே என் னும் வருத்தம் இருக்காது. ஏனெனில் மறுவுலகுக்கு இவ் வுலகப் பொருட்களால் எத்தகைய பயனுமில்லை என்று அறிந்திருப்பான்.

(3) உற்றார், உறவினர், நண்பர்களை விட்டுப் பிரிகின் றோமே என்ற கவலை இருக்காது. ஏனெனில், அவர்களும் நன் முறையில் வாழ்ந்து, மரிப்பார்களாகில்; ஒரு நாள் மறு படியும் சந்திப்போம் என்னும் உறுதி உண்டு.

(4) மக்களுக்கும், மற்றவர்களுக்கும் உதவாமல் போகி றோமே என்ற ஏக்கம் இருக்காது. ஏனெனில் தனக்கு இருந் ததுபோலவே அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி யாக தேவபராமரிப்பு, நிச்சயமாக இருக்கும் என்று அவ னுக்குத் தெரியும்.

(5) தனது வாழ்நாள் முழுவதும் இறைவனுடன் ஒத் துழைத்து, அவருக்காகவே வாழ்ந்ததைப்பற்றி மன நிறை வும், அமைதியும் இருக்கும்.

(6) தன் வாழ்நாளில் எல்லாம் கடவுளை நம்பி செல விட்டதால், அவரால் இப்போதும் கைவிடப்படாமல், மறு உலகில் தனக்கு நல்லதோர் இடம் இருக்குமென்ற முழு நம் பிக்கையும் இருக்கும்.

[7] உண்மைக்காகவும், உழைப்புக்காகவும், பிறரால் உபத்திரவப்படுத்தப்பட்டிருந்தால், தான் அனுபவித்த துன்பங்களைப் பற்றி மகிழ்ச்சிகொள்வான். ஏனெனில் மோட்சம் செல்லும் பாதை கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதை என்று அவனுக்குத் தெரியும்.

[8] மனித பலவீனத்தால் ஏதோ சில குற்றங்களைக் கட்டிக்கொண்ட தாக நினைவிருப்பினும், அதற்காக மனக் கலக்கமடையாது, மனஸ்தாபப்பட்டு மன்னிப்பு கேட்பதைப் புதுப்பித்துக் கொண்டிருப்பான். ஏனெனில் தன் குற் றத்தை உணர்ந்து அதற்காக மனஸ்தாபப்படும் நேர்மை யான ஆன்மாவை கடவுள் புறக்கணிக்க மாட்டார் என்று அவனுக்குத் தெரியும்.

(9) தனது வாழ் நாள் முழுவதும், தான் இறைவனிட மிருந்து பெற்றுக்கொண்ட நன்மை, உபகாரங்களுக்கெல் லாம், தானே நேராகச் சென்று நன்றி கூறப்போவதற்காக துடித்துக்கொண்டிருப்பான்.

(10) இதுவரை விசுவாசத்தினால் மட்டும் கண்டறிந்த தேவனை, முகமுகமாய்க் கண்டுகளிகூரப்போவதை எண்ணி அருகிலிருப்போரிடம், விரைவில் விடைபெற்றுச் செல்ல துரிதப்பட்டுக் கொண்டிருப்பான்.

59. கெட்ட மரணத்தின் அறிகுறிகள் யாவை?

ஆன்மாவில் ஆபத்தான நிலைமையை. வெளிக்கிரிகை களிலிருந்து நமது அறிவினால் உய்த்துணர்ந்த வரைக்கும் ஒருவனது மரணத்தின் தன்மையை நிர்ணயிக்கலாம். எப்படியெனில்:

[1) சாகப் பயப்படுவான் இவ்வுலக இன்ப சுகங்களை விட்டுப் போக மனமில்லாது தத்தளிப்பான். ஏனெனில் இவ்வுலக இன்பங்களையே அவன் பேரின்பமாக கருதி யிருந்தான்.

(2) இவ்வுலகப் பொருட்களை விட்டுப்போக அஞ்சு வான். ஏனெனில் பிறர் இவற்றை எடுத்து அனுபவிக்கப் போகிறார்களே என்ற பொறாமை இருக்கும்.

(3) தன்னை நம்பி இருப்பவர்களை விட்டுப் பிரிய மனம் சகியாது. ஏனெனில் தேவ பராமரிப்பில் இவனுக்கு நம்பிக்கை கிடையாது. தான் தான் அவர்களைக் காப்பாற்று வதாக அகங்காரம் கொண்டவன்.

[4] நீதியுள்ள கடவுளின் முன் போய் நிற்கப் பயம். ஏனெனில், அவனுக்கு அவர் கொடுக்கப்போகும் தண்டனை யைப் பற்றி ஓரளவு அறிந்திருப்பான்.

(5] மிதமிஞ்சின அவ நம்பிக்கையில் அவதிப்படுவான் ஏனெனில், இறைவனின் இரக்கத்தை அவன் உணர்ந்தவ. னில்லை. ஆதலால் தான் கட்டிக்கொண்ட கணக்கற்ற குற்றங்களுக்கு மன்னிப்பு இல்லையென்று எண்ணுபவன் மன்னிப்பு கிடைக்காது என்று எண்ணி, மனஸ்தாபப்படவு மாட்டான்; மன்னிப்பு கேட்கவுமாட்டான்

(6) தனக்கு தீங்கு செய்தவர்களை நினைத்து பழி வாங்காது போகிறோமே என்று கதறுவான், தீமை செய் தவர்களையும், அதை அனுமதித்த கடவுளையும் நிந்தித்துத் தூஷணிப்பான்.

[7) பகைவர்களுக்கு மன்னிப்பளிக்க மறுப்பான்.

(8) தன்னுடைய ஆன்மா நித்தியத்துக்கும், நீங்காத முடிவற்ற வேதனையை அனுபவிக்கும் என்பதை நினைத்து அவன் பிறந்த இடம், நேரம், பெற்றோர். சூழ் நிலை ஆகிய வற்றைச் சபிப்பான்

60. மரணத்துக்குப் பின் ஆன்மாவின் நிலை யாது?

இறைவனின் சாயலாக உண்டாக்கப்பட்ட ஆன்மா எவ்விதத்திலும் அழியாதது ஆகும் எனவே, கடவுள் கடவுளாக இருக்கும் வரை அதாவது நித்தியத்துக்கும் ஏதோ ஓர் இடத்தில் மோட்சத்திலோ அல்லது நரகத் திலோ இருக்க வேண்டியது தான்!