75. மட்டாயிருத்தல் என்பது "மைய நிலை'' என்னும் பொருள்படும் அல்லவா?
ஆம். மத்தியமே புண்ணியம் என்பது போல மட்டாயிருத்தல் "மைய நிலை என்னும் பொருள்படும்.
76. "மத்திபமே புண்ணியம்" - என்பதன் பொருளென்ன?
அநேக காரியங்களில் எப்பக்கத்திலும் சாராமல் நடு மையமாய் இருப்பதில் தான் புண்ணியம் அடங்கியுள்ளது. எந்தப்பக்கம் சாய்ந்தாலும் பாவமாகிறது. இதைப்பற்றியே மத்திபமே புண்ணியம்" என்னும் பழமொழி வழங்கி வருகிறது.
77. எந்த இரண்டு காரியங்களுக்கு மையமாய் இருப்பதால் விமரிசை என்னும் புண்ணியம் ஏற்படுகிறது?
நாம் எந்தவிதமாய் நடக்கவேண்டும் என்பதைப்பற்றி ஆலோசிக்காமல், அலட்சியமாய் இருத்தல் ஒன்று; அதைப் பற்றி அனாவசியமாய் அதிக நேரம் யோசித்து இறுதியில் ஒன்றும் செய்யாமல் போவது வேறொன்று இந்த இரண்டு விதமான நடத்தைக்கும் இடைப்பட்டது விமரிசை; அல்லது விவேகம் ஆகும்.
78. நீதி என்கிற புண்ணியமும் நடு நிலைமையால் உண்டாவதென்று காட்டக்கூடுமா?
பிறருக்கு அளவுக்கு மீறி கொடுக்காமலும், குறைத்துக் கொடுக்காமலும் இருப்பவே நீதியாகும் குறைத்துக்கொடுத் தால் அவர்களுடைய உரிமையைக் கெடுக்கிறோம். அதிக மாய்க் கொடுக் கம்போது சில சமயங்களில் புண்ணிய மாகலாம். ஆனால் சிலசமயங்களில், அது அவர்களுக்கு அல்லது நமக்கே தீமையாயிருக்கலாம்.
79. இதை சிலஎடுத்துக்காட்டுகளினால் விளக்குக.
பெற்றோர் பிள்ளைகளுக்குப் பணம் அதிகமாகக் கொடுப் பதால், அல்லது அவர்களுக்கு மிதமிஞ்சின வசதிகளைத் தேடுவதால் அவர்களைக் கெடுக்கிறார்கள் பிள்ளைகள் சொலமாய் வளர்ந்து எப்போதும் இன்பத்தை நாடிப் பிற்காலத்தில் ஒன்றுக்கும் உதவாத வீனர்கள் ஆகிவிடுவார்கள் இது பிள்ளைகளுக்கும் தீமையல்லவா? தகுந்த காரண மின்றி தங்களுக்கு உரிமையானது என்று நினைத்துப் பிறர் கேட்பதெல்லாம் அவர்களுக்குக் கொடுப்பதால், அல்லது அவர்களுடைய தவறான கருத்துக்களை ஏற்றுக்கொள்வ தால், அவர்களுக்கு நாம் தீங்கு செய்யக் கூடும்.
80. நடுநிலைமையால் திடம் அல்லது தைரியம் உண்டாவது எப்படி?
துன்பத்துக்குப் பயந்து கோழைத்தனமாய் இருக்கக் கூடும்; அல்லது முரட்டுத்தனமாய் முன்பின் யோசியாமல் துன்பங்களுக்கு நம்மை நாமே ஆளாக்கக் கூடும். கோழைத் தனமாய் நடப்பதற்கும், முரட்டுத்தனமாய் நடப்பதற்கும். நடுநிலைமை" யாயுள்ளது தைரியம்,
81. மட்டாயிருத்தல் நடு நிலைமையால் உண்டாவது எவ்வாறு?
இன்பம் என்றால் எல்லாவிதமான இன்பமும் நல்லது அல்லது கெட்டது என்று சொல்லாமல் இரண்டுக்கும் மத்திமமாயிருப்பது மிதம் அல்லது மட்டாயிருத்தல் ஆகும்.
82. இதை விளக்கிக் கூறுக.
சிலர் எல்லாவற்றையும் தவறான எண்ணத்துடன் கணித்து, தவறாகவே உணர்ந்து, தங்களுக்கு நன்மை செய்யக்கூடிய இன்பத்தையும் நீக்கிவிடுகிறார்கள் வேறு சிலர் இதற்கு மாறாக இன்பம் என்றால் முழுவதும் சுகிக்க லாம் என்று பிறகு உணர்ந்து. தங்கள் கடமையையும் கவ னிக்காமல், இன்பசுகத்தையே நாடி வீனர்களாகக்கூடும்.
83. இந்த நான்கு புண்ணியங்களுக்கும், குணபான்மைக்கும் உள்ள தொடர்பென்ன?
இந்த நான்கு புண்ணியங்களில் இருந்தும் நான்கு கொள்கைகள் உண்டாகின்றன. முக்கியமான பொதுக்கொள்கைகளாகிய வாழ்க்கைச் சட்டத்தை (நினைவு, வாக்கு, கிரிகைகளில் தக்கதைச் செய்து தகாததை நீக்க) அனுசரிப் பதற்கு இந்த நான்கு கொள்கைகளும் உதவியாய் இருக்கின்றன.