பாவசங்கீர்த்தனம்

கத்தோலிக்கத்தின் மாபெரும் வல்லமையும், பெருமையும் பாவசங்கீர்த்தனமே. திருச்சபை கடவுளின் அதிகாரத்தைத் தன்னுள் கொண்டிருக்கிறது என்பதன் அடையாளமே அது.

ஏனெனில் கடவுளான இயேசுவைப் பற்றி யூதர்கள் மிகவும் இடறலுக்கு உள்ளானது, அவர் பாவங்களை மன்னித்த போதுதான். இன்று திருச்சபையைக் குறித்து அநேகர் இடறல்படுவதும் இந்தப் பாவ மன்னிப்பைக் குறித்து தான் (மாற். 2:6-12).

பாவமன்னிப்புக்காகப் புனிதத் தலங்களுக்கு யாத்திரை செய்யச் சொல்லவில்லை நம் கடவுள். புனித நதிகளில் நீராடச் சொல்லவில்லை . மாறாகப் பாவங்கள் எவ்வாறு மன்னிக்கப்படும் என்பதை ஒற்றை வரியில் சொல்லிச் சென்று விட்டார்.

சீடர்களை நோக்கி, எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப் பெறும். எவர் களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ அவை மன்னிப்பின்றி விடப்படும் (அருளப்பர் (யோவான்) 20:23) என்றார்.

இது இயேசுவின் கட்டளை. அதோடு நாம் வெறுப்பவர் களை, நமக்கு எதிரானவர்களை, நாம் மன்னிக்க வேண்டும் என்பதும் அவசியம் (மத். 6:12-15; கொலோ . 3:13). இதுவும் ஆண்டவரின் கட்டளை. இரண்டில் ஒன்றைக் கூட விட்டுவிடக் கூடாது.

எனவே குருக்களிடம் பாவமன்னிப்பு பெற வேண்டும் என்பது அவசியம். இதை மறப்போரும், மறுப்போரும் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள் கிறார்கள்.

உதாரணமாக தாசில்தாருக்கு அரசாங்கம் ஒரு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறது என்றால், அந்தக் காரியத்திற்கு தாசில்தாரை அணுகித்தான் நாம் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எனக்கு முதலமைச்சரைத் தெரியும்; எனவே தாசில்தாரிடம் ஆக வேண்டிய காரியத்திற்கு முதலமைச்சரிடம்தான் நான் போவேன் என்றால் அரசாங்கம் அதை அனுமதிப் பதில்லை.

எனவே பாவங்களுக்கு மன்னிப்புத் தர கடவுள் யாருக்கு அதிகாரம் கொடுத்துள்ளாரோ அவரிடம் தான் செல்ல வேண்டும். இந்த அதிகாரத்தைப் பெற்றவர்கள் கத்தோலிக்கக் குருக்கள் மட்டுமே.

அன்று யூதர்களுக்கு ஆண்டவர் இயேசுவின் பாவ மன்னிப்பு அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லை. இன்று பலருக்கு ஆண்டவர் குருக்களுக்குக் கொடுத்த பாவ மன்னிப்பு அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மன மில்லை.

நாம் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கடவுளின் திட்டங்கள் மாறுவ தில்லை. இதனால்தான் உலகம் காப்பாற்றப்பட கடவுள் கொடுத்த முதல் வெள்ளி, முதல் சனி பக்தி முயற்சிகளில் பாவசங்கீர்த்தனம் ஒரு கட்டளையாக்கப் பட்டிருக்கிறது.

இன்னும் ஒன்றையும் நாம் மறக்கக் கூடாது. குருக்கள் அழைக்கப்பட்டிருப்பது திருப்பலி, பாவசங்கீர்த்தனம் ஆகியவைகளை நிறைவேற்றுவதற்குத்தானே தவிர வேறு எதற்கும் அல்ல. இதற்குத் தடையாய் இருக்கும் படிப்பு முதலிய எதையும் உதறித் தள்ளும் ஞானத்தைக் குருக்கள் பெற்றுக்கொள்ள இறைவனிடம் வேண்டுவோமாக.