புனிதர்களின் வழி ஜெபித்தல்

புனிதர்கள் வழியாக ஜெபித்தல் தேவை யற்றது, பயனற்றது என்று சொல்லி அநேக கத்தோலிக் கர்கள் கூட இன்று புனிதர்களைப் புறக்கணிக்கின் றனர். இயேசு மட்டுமே மத்தியஸ்தர், (1 திமோ. 2:5; எபி. 7:25), புனிதர்கள் ஓய்வெடுக்கிறார்கள்; அவர் களால் ஒன்றும் செய்ய இயலாது என்பது இவர்கள் வாதம்; இது பிரிவினையின் வாசம்!

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கத்தோலிக்கத் திருச்சபை புனிதர்கள் வழியாகத் தான் ஜெபிக்க வேண்டும் என்று ஒருபோதும் கூறியது இல்லை . மாறாக, புனிதர்களின் பரிந்துரை நல்லது என்றுதான் கூறுகிறது. புனிதர்கள் இறுதித் தீர்ப்பு வரை ஓய்வெடுக்கிறார்கள்; மோட்சத்தில் இல்லை என்பது பைபிளுக்கு எதிரான கருத்தாகும்.

ஏனெனில் ஆபிரகாம், மோயீசன், நல்ல கள்ளன், லாசர் ஆகி யோர் மோட்சத்தில் இருக்கிறார்கள்; கடவுளின் பிரசன்னத்தில் இருக்கிறார்கள் லூக். 16:19-31; லூக். 9:29-31; லூக். 23:43). புனித பவுலும், தான் இறந்தால் ஆண்டவரோடு இருப்பேன் பிலிப்.1:23-24) என்கிறார். ஆண்டவரும், என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான் (அரு. 11:25) என்கிறார். எனவே நல்லவர்கள், புனிதர்கள் இறந்தாலும் செத்த வர்கள் அல்ல; உயிருள்ளவர்கள்; அவர்களை இறந்த வர்கள் என்றால் கடவுளையும் இறந்தவர் என்று சொன்ன குற்றத்திற்கு ஆளாக நேரிடும் (மத். 22:31-32).

எனவே, புனிதர்கள், நல்லவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்; மோட்சத்தில் இருக்கிறார்கள். இனி அவர்கள் என்ன செய்வார்கள்? உலகில் வாழும் போதே பரிந்துரை செய்தவர்கள் ஆதி. 18:22 - 32; எண்.21:7, 8; அரு. 2:3). மோட்சத்தில் இன்னும் அதிக மாகப் பரிந்துரை செய்வார்கள் (தொபி. 12:12) அல்லவா?

ஆண்டவர் ஏசு முதன்மைப் பரிந்துரை யாளர்; அவரைப் பின்பற்றிய புனிதர்களும், பின் பற்றும் நாமும் கூட துணைப் பரிந்துரையாளர்கள். ஏனெனில், நம்மை மீட்க சிலுவை சுமக்க வேண்டிய ஆண்டவர், சீரேனே ஊர் சீமோனையும் சிலுவை சுமக்க அனுமதித்தார் (லூக். 23:26).

தன்னைக் கற்பாறை என்றவர் இராயப்பரையும் பாறை (மத். 16:18) என்றார். நானே உலகின் ஒளி என்றவர் நம்மையும் உலகின் ஒளி (மத். 5:14) என்றார். தனது தந்தையான கடவுளை நாமும் 'அப்பா' என்று அழைக்கச் சொன்னார் (மத். 6:9). எனவே அவருக் காக வாழ்வோர் எல்லோருமே அவருடைய மாட்சிமை யில் பங்கு பெற முடியும்; எல்லாம் அவர் வழியாக! எனவே அவரது பரிந்துரைப் பணியிலும் புனிதர்கள் பங்குபெற முடியும்.

''என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்'' என்றதன் மூலம் புனிதர்கள் அவரோடு வாழ்கிறார்கள் என்ற ஏசு, ''என்னில் விசுவாசம் கொள் பவன் நான் செய்பவற்றையும், அதைவிடப் பெரியன் வற்றையும் செய்வான் (அரு (யோவான் 14:12)'' என்கிறார். எனவே, ஆண்டவர் ஏசு விண்ணகத்தில் பரிந்து பேசுவது உண்மை என்றால், புனிதர்களும் பரிந்து பேச முடியும் என்பதும் உண்மைதான்.

இதில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். புனிதர்களின் பரிந்துரை வேண்டாம் என்பவர்கள், இவ்வுலகில் வாழ்கிற , தங்களுக்குப் பிடித்த போதகர்களைத் தங்களுக்காக பரிந்து பேசி ஜெபிக்கக் கேட்டுக் கொள்கிறார்கள்!

தவறும் வாய்ப்புள்ள (1 யோவான் (அரு.)1:8, 10; 1கொரி. 10:12) மனிதர்கள், போதகர்கள், பரிந்து பேச முடியும் என்றால், இனித் தவற முடியாத புனிதர்கள் பரிந்து பேச முடியாது என்பது மூடத் தனமாகும்.

எனவே, ஆண்டவர் ஏசு நமது மெய்யான பரிந்துரையாளர் என்பது எவ்வளவு உண்மையோ, அதைப்போலவே அவரின் வல்லமையால் ..... அவரோடு வாழும் புனிதர்களின் பரிந்துரையும் மேலானது; அவசியமானது ; நமக்கு ஆசீர்வாத மானது!

புனிதர்கள் தேவையில்லை என்பவர்கள் இனி யாரிடமும் ஜெப உதவி கேட்காதிருப்பார்களாக! தங்கள் தேவைகளுக்காகத் தாங்கள் மட்டுமே ஜெபிப்பார்களாக!