பச்சாதாபத்தின் பேரில்.

269. பச்சாதாபம் ஆவதென்ன?

ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு செய்த பாவங்களை எல்லாம் விமோசனமாக்குகிற தேவதிரவிய அனுமானம். 


270. பச்சாதாபம் என்கிற தேவதிரவிய அனுமானத்தை எப்போது பெற்றுக் கொள்கிறோம்? 

நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யும் போது தான்,


271. பாவசங்கீர்த்தனம் செய்ய எத்தனை காரியங்கள் வேண்டும்? 

ஐந்து காரியங்கள் வேண்டும்.


272. அந்த ஐந்து காரியங்களையும் சொல்லு;

1-வது - தான் செய்த பாவங்களை நினைக்கிறது. 
2-வது - தான் செய்த பாவங்களுக்காக மனஸ்தாபப்படுகிறது. 
3-வது - இனிமேல் ஒருக்காலும் ஒருபாவத்தையும் செய்வதில்லை என்று கெட்டியான மனதோடு பிரதிக்கினை செய்கிறது. 
4-வது - தன் பாவங்களை எல்லாம் ஒன்றும் ஒளியாமல் குருவுடனே சொல்கிறது. 
5-வது - குரு கட்டளையிட்ட அபராதத்தைத் தீர்க்கிறது.


273, தான் செய்த பாவங்களை நினைக்கிறதென்றால் என்ன?

மனசாட்சியறியத் தான் செய்தபாவம் இன்னதென்றும். எத்தனை என்றும், தனக்குள் ஆலோசித்து ஞாபகப்படுத்திக் கொள்ளுவது தான்