கிறிஸ்துவின் ஞான சரீரம் என்பது யாது?

சர்வேசுரன், தம் வாழ்வின் நிறைவிலிருந்து நமக்கு வாரி வழங்க ஆசிக்கிறார். மென்மேலும் மனிதத் தன்மைக்கு இயன்ற வரை, தம் வாழ்வில் நாம் பங்குபெற வேண்டும் மென்று விரும்புகிறார்.

இதை நிறைவேற்ற, தம் வல்லமை யால் அவர் தெரிந்து கொண்ட அதிசய அமைப்புதான் கிறிஸ்துவின் ஞான சரீரம் எனப்படும்.

இதன் பொருளை முற்றும் உணருவதற்கு அடியில் வருவனவற்றை ஆழ்ந்து நோக்குதல் அவசியம்.

(1) கடவுளின் வாழ்வு எத்தன்மையது?

(2) அவர் ஏன் தம் நித்திய ஆனந்த வாழ்வில் நமக்குப் பங்கு அருள விரும்புகிறார்?

(3) எவ்வாறு அவருடைய வாழ்வில் நாம் பங்கு அடைய இயலும்?