சுவாமி மத்தேயோக்ராலி!

சுவாமி மத்தேயோ க்ரால் சந்தேகமின்றி, உலகின் மிகச் சிறந்த வேத போதகர்களில் ஒருவராக இருந்தார். இவரை விட அதிகக் கருணையும், அதிக அடக்கவொடுக் கமும் கொண்டிருந்தவர்களும், இவரைப் போல் ஞான ரீதியான அநேக வெற்றிகளை அடைந்தவர்களும் வெகு சிலரே இருக்க முடியும். பெரும் பாவிகளைத் தம் குருத்துவ வாழ்வில் எதிர்கொண்டதே இவருடைய பாகமாக இருந்து வந்தது. அவர்களிடமும் கூட இவர் மிகுந்த கருணை யோடும், பரிதாப உணர்வோடும் நடந்து கொண்டார்.

என்றாலும், ஒரு குறிப்பிட்ட காரியத்தைப் பற்றி மிகுந்த துயரத்தோடு அவர் பேசுகிறார். இதை அவருடைய வாயினின்றே நாங்கள் கேட்டோம்: "என் தந்தை ஒரு ப்ரொட்டஸ்டாண்ட் சபையைச் சேர்ந்தவர், நல்லவர், நேர்மையானவர், முகத்தாட்சணியம் பார்க்க மாட்டார். என் தாய் ஒரு கத்தோலிக்கப் பெண்மணி. அவர்கள் தன் குழந்தைகளைக் கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்த் தார்கள். என் தந்தையை ஒரு கத்தோலிக்கராகக் காண வேண்டுமென்பதுதான் அவர்களுடைய வாழ்வின் மிகப் பெரும் ஏக்கமாகவே இருந்து வந்தது.

அவர்கள் எல்லாக் காரியங்களிலும் நல்ல திறமையோடும், விவேகத்தோடும் நடந்து கொள்வார்கள். என் தந்தைக்கு எரிச்சல் மூட்டா மலே, கத்தோலிக்கத் திருச்சபையின் சத்தியங்களை அவர் அறிந்து கொள்ளச் செய்வதற்கு அவர்கள் பல வழிகளைக் கண்டுபிடித்தார்கள் என்றாலும், மனந்திரும்பும்படி அவரைக் கட்டாயப்படுத்துவதை விட, ஜெபத்தையும், தன் சொந்த முன்மாதிரிகையையும் அதிகமாக நம்பி, அவற் றிற்குத் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தார்கள்.

கடைசியில் ஒருவழியாக என் தாயின் நம்பிக்கைகள் நிறைவேறும் நிலை வந்தது. எந்த அளவுக்கென்றால், என் தந்தை எங்களோடு பூசைக்கு வருவதாக வாக்களித்து விட்டார்.

அப்படியே அவர் எங்களோடு பூசைக்கு வரவும் செய்தார். ஆனால் பரிதாபத்திற்குரிய விதத்தில் அன்று பூசை நிறைவேற்றிய குரு , அவசரமாகவும், பக்தியும், வணக்கமும் இன்றி பூசை நிறைவேற்றினார். இதன் காரணமாக என் தந்தை ஏமாற்றமடைந்தவராக வீட்டுக்குத் திரும்பி வந்தார். இனி ஒருபோதும், கத்தோலிக்கராக மாறுவது பற்றித் தாம் யோசித்துப் பார்க்கவே போவ தில்லை என்று அவர் அறிவித்து விட்டார்.

நாங்களும் மிகவும் அதிகமாக ஏமாந்து போனோம். மேற்கொண்டு கத்தோலிக்க விசுவாசத்தைப் பற்றிய எந்த விளக்கத்தையும் கேட்க என் தந்தை மறுத்து விட்டார் என்பது இந்த எங்கள் ஏமாற்றத்தையும், மன வேதனை யையும் அதிகப்படுத்தியது. வருடங்கள் பல கடந்தன. நாங்கள் தொடர்ந்து எங்கள் தந்தைக்காக ஜெபித்து வந்தோம்.

ஒருநாள் மாலை திருப்பாடுகளின் சபையைச் சேர்ந்த வேத போதகக் குரு ஒருவர் எங்களைச் சந்திக்க வந்தார். என் தந்தை தமக்கேயுரிய உபசரிக்கும் குணத் தோடு அவரை வரவேற்று, வீட்டில் தங்கச் செய்தார்.

தேவ பராமரிப்பின் வழிகள் என்றுமே அதிசய மானவைதான். இந்த வேத போதகக் குருவானவரோடு பேசிக் கொண்டிருந்த என் தந்தை தம் இருதயம் தொடப் படுவதாக உணர்ந்தார். பெரும் மாற்றம் வந்தது. இந்த குருவானவர்வைக்கும் பூசையில் பங்கு பெற அவர் மீண்டும் ஒரு முறை சம்மதித்தார்.

திருப்பாடுகள் சபைக் குரு பூசையை மிக எளிமை யாகவும், அதே சமயத்தில் மிகுந்த பக்தியோடும் நிறை வேற்றினார். ஆ. சர்வ வல்லப தேவனுக்கு எப்படி நன்றி சொல்வோம் ! என் தந்தை சிறிது காலத்திலேயே கத்தோலிக்க ஞான உபதேசத்தைக் கற்றுக் கொள்ளத் தொடங்கி, கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்தார். என் தாயின் ஏக்கம் கலந்த ஜெபத்திற்குக் கடவுள் பதிலளித்து விட்டார்!''