யார் என் தாய்?

மாற்கு. 3:31-35, லூக். 11:27,28 மற்றும் இதையொத்த பகுதிகளைச் சுட்டிக் காட்டி இயேசு தம் தாயை உதாசீனப்படுத்தியதாகப் போலிப் போதகர்கள் கூறுவது உண்டு.

இவர்கள் உண்மையில் மாதாவை அல்ல, இயேசுவையே பழிக்கிறார்கள்!

ஏனெனில் ''தாய் தந்தையை மதித்து நட" (யாத்.வி. ப.) 20:12) என்ற கட்டளையைக் கொடுத்த இயேசு அதை மீறினார் என்று அர்த்தமாகும்.

ஆக இவர்கள் மாதாவை ஒதுக்க எண்ணி ஏசுவைக் கேவலப்படுத்துகிறார்கள். யார் என் தாய்? என்று ஆண்டவர் ஏன் கேட்டார் என சிந்திப்போமானால் ஓர் ஆழமான உண்மை வெளிப் படும்!

உலகில் எல்லாத் தாய்மாரும் பிள்ளைக்கு மூத்தவர்கள். ஆனால் இயேசுவைப்பொறுத்த மட்டில் கடவுள் என்ற முறையில் அவர் தம் தாய்க்கு மூத்தவர். எல்லாம் அறிந்தவர்!

அப்படிப்பட்டவர் உலகை மீட்கத் தேவையான தன் இரத்தத்தைத் தமக்குக் கொடுக்கக் கூடிய தாயைத் தேர்ந்து கொண்டார் என்றால் அவர் அந்தத் தாயிடம் முதலில் கண்ட மிகப் பெரிய தகுதி, அவர்கள் இறை சித்தத்திற்கு மற்ற எல்லாரையும் விட அதிகம் கீழ்ப்படிபவர்கள் என்பதுதான்.

எனவேதான் கேள்வியைக் கேட்டு பதிலும் அவரே சொல்கிறார்: யார் என் தாய்? இறை வார்த்தையைக் கேட்டுக் கீழ்ப்படிந் தவரே என் தாய் லூக் 1:38 மற்றும் லூக். 1:45) என்று உறுதிப்படுத்துகிறார். மாதாவை உயர்த்துகிறார்!

ஏனெனில் தாய் தந்தையை மதித்து நட என்ற தமது கட்டளையை அவரால் மீற இயலாது!

இயேசுவுக்குத் தந்தை பிதா! தாய் அன்னை மரியாள்!