மாதா யார்?

மாதா பிறக்குமுன்னே கடவுள் அவர்களுக்கு ஓர் அந்தஸ்தைக் கொடுத்தார். அது ஆதி. 3:15 தொ.நூல்) இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கடவுளின் சார்பாகப் பசாசை சாத்தானை எதிர்க்கும் கடவுளின் தளபதியாக மாதா நியமிக்கப்பட்டார்கள்; இயேசுவின் தாயாக மாதா முன்குறிக்கப்பட்டார்கள்.

பசாசின் தலையை நசுக்கும் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதே அவர்கள் பணி. பசாசுக்கு அவர்கள் மீதும், அவர்கள் பிள்ளைகள் மீதும் பகை திருவெளி. 12:17). பசாசை எதிர்க்கும் பெண் அவர்களே என்பதைக் குறிக்கும்படியாகவே.

ஆண்டவர் இயேசு கானாவூர்த் திருமணத்திலும், சிலுவையடியிலும் தன் தாயைப் பெண்ணே என்று அழைத்தார். அவமதிக்க அல்ல! கலா. 4:5-லும் மீட்புத் திட்டத்தின் பெண் இவர்களே எனக் குறிக்கப்படுகிறது. உலகின் நிறைவான ஒரே பெண் மாதாதான். எனவேதான் மாதா முதன்முதலில் நேரடியாக அறிமுகமாகும் போது பிதா அவர்களை அருள் நிறைந்தவளே வாழ்க என்று வாழ்த்தினார் லூக்.1:28).

கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரபூர்வ வேதாகமமான வுல்காத்தா வமாழிபெயர்ப்பு, அருள் நிறைந்தவளே வாழ்க என்றே வாழ்த்துகிறது. ஏனெனில் அவர்களிடம் பாவம் என்பதே இல்லை . அவர்கள் நம்மை விட அருள் மிகப் பெற்றவர்கள் மட்டுமல்ல! அவர்களே அருள் நிறைந்தவர்கள். அவர்கள் மட்டுமே அருள் நிறைந்தவர்கள்.

பரிசுத்த ஆவியாம் தேவனும் அவர்களைப் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே லூக். 1:41, 42) என்றார். பரிசுத்த ஆவியே இதைக் கூறுவதால், உலகத் தோற்றம் முதல் இறுதி வரையிலான எல்லாப் பெண்களிலும் இவர்களே சிறந்தவர்கள். ஆண்களில் சிறந்தவர் இயேசுவே).

கடவுளின் ஏற்பாட்டின்படி சாத்தானின் தலையை நசுக்கி இறைவனின் வெற்றிக்கான பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டியவர்கள் மாதாவே! ஏனெனில் ஆதியில் கடவுளுக்கு மேலாகத் தன்னை உயர்த்தப் பார்த்து லூசிபரும் (இசை. 14:12-15), ஏவாளும் (தொ. நூல் 3:5-7) கடவுளுக்கு ஏற்படுத்திய அவமானத்தைத் துடைத்தவர்களும், பரிகாரம் செய்தவர்களும் மாதாவே.

பிதாவின் மகளாக, சுதனின் தாயாக, பரிசுத்த ஆவி யின் பத்தினியாக அவர்கள் உயர்த்தப்பட்ட போதும், நான் கடவுளின் அடிமை என்று சொல்லி கடவுளுக்கு ஆறுதல் தந்த படைப்பு மாதாவே. எனவேதான் பசாசை வெல்லும் அதிகாரத்தை மாதாவுக்கு அளித்துத் தனது படையின் தளபதி ஆக்கினார் தொ.நூல் 3:15 மற்றும் திருவெளி. 12:17).

இந்த யுத்தத்தில் மாதாவின் பிள்ளைகளும், போர்வீரர்களுமாகிய நாம் அந்த அன்னைக்குச் செய்ய வேண்டிய உதவி அந்த அன்னைக்கு கடவுள் அளித் துள்ள ஆற்றலும், சக்தியுமாய் இருக்கின்றதும், பிதா வாலும், பரிசுத்த ஆவியாலும் இயற்றப்பட்டதுமான அருள்நிறை மந்திரங்களின் தொகுப்பான ஜெபமாலையை நம் குடும்பங்களில் ஜெபிப்பதுவே ஆகும். ஜெபமாலை சமாதானத்தைத் தரும் என்றார்கள் மாதா.