அருள் நிறை மந்திரத்தின் அழகு

மாதாவுக்குக் கடவுள் அளிக்கும் ஆற்றலும் சக்தியும் இச்செபத்தில் அடங்கியுள்ளது.

பரலோக மந்திரம் சுதனாகிய கடவுளால் கற்பிக்கப்பட்டது போலவே, அருள்நிறை மந்திரம் பிதாவாலும் லூக். 1:26-28) பரிசுத்த ஆவியாலும் (லூக். 1:41-42) கற்பிக்கப்பட்டது.

மாதாவை அனைவரும் போற்ற வேண்டும் என்ற கடவுளின் விருப்பத்தை நிறை வேற்றும் ஜெபம் (லூக்.1:48இன் பிற்பகுதி).

உண்மையில் அது மாதாவைப் புகழ்வதை விட கடவுளை அதிகம் புகழும் ஜெபம்! உதாரணமாக, அருள் நிறைந்த மரியாயே வாழ்க! (ஏனெனில்) கர்த்தர் உம்முடனே! பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவள் நீரே! (ஏனெனில்) உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே! அர்ச்சியசிஷ்ட மரியாயே (ஏனெனில்) நீர் சர்வேசுர னுடைய மாதா! என்று மாதாவைப் புகழ்வது போல் துவக்கி , உண்மையில் கடவுளை முன்னிலைப் படுத்துகின்ற ஜெபம்!

குடும்ப ஜெபமாலைக்கு நேரம் ஒதுக்காத குடும்பம் தன்னை அறியாமலேயே பசாசுக்கு அடிமையாகிப் போகும்!

பசாசைக் கண்டு பிடிக்க பிதா கொடுத்த அடையாளம் ஒன்றே! அவனுக்கு மாதா மீது பகை தொ.நூல். 3:15) ஒன்று கடவுளின் தளபதி (மாதா) அந்தக் குடும்பத்தில் இருக்க வேண்டும். இல்லையேல் எதிரி (பசாசு) அங்கிருக்கும்!

முடிவு எடுக்க வேண்டியது நாம்தாம்! அருள் நிறை மந்திரங்களால் அழகு செய்யப்படாத ஜெபமாலை வெறும் பாசிமணி மாலையே !