வெளிப்பாவங்கள்

1. வெளிப்பாவங்களில் சிலவற்றைச் சொல்லு.

ஆகாத பார்வை பார்ப்பது, சிற்றின்ப சம்பாஷணை செய்கிறது, சிற்றின்ப பாட்டு பாடுகிறது, கெட்ட புஸ்தகங்களை வாசிக்கிறது, அவலட்சணமான வேடிக்கை பார்க்கப்போகிறது, அக்கிரமமாகத் தொடுகிறது, கற்புக்கு விரோதமான சகல செயல்களையும் செய் கிறது இவை முதலானவை வெளிப் பாவமாகும்.


2. மேற்சொன்ன வெளிப்பாவங்கள் எப்போதும் சாவான பாவமா?

(1) முழுமனதோடு செய்த கற்புக்கு விரோதமான கிரியை எப்போதும் சாவான பாவம்தான். 

(2) மேற்சொன்ன மற்ற வெளிப்பாவங்களில் கெட்ட சந்தோஷத்தை தேடினால் இதுவும் சாவான பாவமாயிருக்கும். 


3. கெட்ட சந்தோஷத்தைத் தேடாமலும் பாவத்தில் விழ இடங்கொடா மலும், மேலே சொன்ன பாவத்துக்குரிய சமயங்களிலிருப்பது சாவான பாவமாகுமா?

கெட்ட சந்தோஷத்தைத் தேடாததால், சாவான பாவ மாகாது. ஆனால் ஒருவன் காரணமில்லாமல், ஆத்துமத்துக்கு மோசம் வரக்கூடிய சமயங்களில், வேண்டுமென்று இருக்கக் கூடாது. தன் அந்தஸ்தினாலும், பிறர்சிநேகத்தினாலும், வேறு கனமான காரணங்களினிமித்தமும், ஆத்துமத்துக்கு அபாயம் வருவிக்கக் கூடிய காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கும்போது குற்றமில்லை. இப்படியே வைத்தியர்கள் தங்கள் அந்தஸ்தினிமித்தம் தகாத விஷயங்களைப்பற்றி எழுதப்பட்ட சில புஸ்தகங்களை வாசிக்க வேண்டியிருக்கலாம். வியாதிக்காரரை விசாரிப்பவர்களும் ஆபத்தான சமயங்களிலிருக்கிறார்கள். இப்படியிருப்பதானது பாவமாகாததும் தவிர, சுத்தக் கருத்தோடு இந்தக் கடமைகளைச் செய்வார்களாகில், பலன் அடையக்கூடும். ஆனால் இதிலிருந்து வரும் சோதனைகளுக்குச் சம்மதித்து, வழக்கமாய்ப் பாவம் கட்டிக் கொள்கிறவன் இந்த வேலைகளை விட்டுவிடவேண்டும்.


4. தகாத பார்வை பார்க்கிறது எப்போதும் பாவமா?

தற்செயலாய் அவைகள் கண்ணிலே தென்பட்டாலும், அல்லது தக்க காரணத்தினிமித்தம் வேண்டுமென்று பார்த்தாலும் கெட்ட சந்தோஷத்திற்கு இடங்கொடாதவரையில் பாவமாகாது. அதுபோல் கெட்ட சந்தோஷத்தைத் தேடாமலும், அதற்கு இடங் கொடாமலும் தக்க காரணத்தினிமித்தம் தகாத இடத்தைத் தொடுவது பாவமாயிருக்காது.


5. விபசாரக் குற்றம் என்றால் என்ன?

கலியாணமானவர்களோடு மோக பாவத்தை கட்டிக்கொள்ளுவது விபச்சாரக் குற்றமாகும்.