குடும்ப ஜெபமாலை

இயல்பாகவே "இது என் குடும்பம்" என்று பெருமை பாராட்டும் நாம் ஜெபிப்பதில் மட்டும் "ஒரே குடும்பம்" என்ற எண்ணத்துக்குள் வரத் தவறி விடு கிறோம். தனி ஜெபத்தோடு நிறுத்தி விடுகிறோம்.

குடும்ப மாய் ஆண்டவர்முன் கூடி, ''இது உமது குடும்பம்; நீரே எங்கள் அரசர்; மாதா எங்கள் தாய், இக்குடும்பத்தை உமது பொறுப்பில் ஒப்படைக்கிறோம்" என்று அறிக்கையிடும் நேரமே குடும்ப ஜெபமாலை நேரம். பரலோக, அருள்நிறை மந்திரங்கள் ஒருமையில் இல்லாது பன்மையில் அமைக்கப்பட்டிருப்பதைக் கவனிப்போம்.

எங்கள் பிதாவே, எங்கள் அனுதின உணவை, எங்களை சோதனை யில் விழ விடாதேயும், பாவிகளாயிருக்கிற . எங்களுக்காக.... என்று நாம் ஜெபிக்கும்போதே நம் குடும்பத்துக்காக மட்டுமல்ல, உலக முழுமைக்கும் சேர்ந்து ஜெபிக்கிறோம். கத்தோலிக்கர்கள் கடவுளை யும், மாதாவையும் குடும்பமாய் அழைத்து அனைத்து உலகிற்காகவும் பரிந்து பேசுகிற ஜெபம்.

சமையல், படிப்பு, வேலை, தூக்கம் என்று எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்கத் தெரிந்த நமக்கு , குடும்ப ஜெபமாலைக்கு அரை மணி நேரம் ஒதுக்க முடியவில்லை என்றால் நம் குடும்பத்தைக் கடவுள் பொறுப்பில் விட விருப்பமில்லை என்று அர்த்தம். என் குடும்பத்தை நானே கவனித்துக் கொள்வேன் என்று அர்த்தம். இது எவ்வளவு ஆபத்தானது!

மாறாக, குடும்ப ஜெபமாலை ஜெபிக்கும்போது நமது குடும்பத்தையும் உலகம் முழுவதையும் பாது காக்கும் பொறுப்பைக் கடவுளிடமும் மாதாவிடமும் ஒப்படைக்கிறோம். எவ்வளவு ஆசீர்வாதமான நேரம் இது மாதா விரும்பிக் கேட்பது ஜெபமாலை ஜெபமே.

கத்துவதும், கூச்சலிடுவதும் ஜெபமல்ல! அது கடவுளைக் கேலி செய்வதாகும் (1 அர 18:26 - 29; மத். 6:7-8). குடும்ப ஜெபமாலை என்பது பெற்றோர் பிள்ளைகளுக்குக் காட்டும் சிறந்த முன்மாதிரிகை. எதிர் காலத்தில் அவர்களுக்கென குடும்பம் அமையும்போது அவர்கள் குடும்ப ஜெபத்தில் தொடர் இப்போதே அளிக்கப்படும் ஒரு பயிற்சி. கடவுளை, மாதாவை, நம் குடும்பத்தில் அங்கீகரிக்கும் நேரமே குடும்ப ஜெப மாலை நேரம்!

ஒருபோதும் குடும்ப ஜெபமாலை ஜெபிப்பதில் தவறக் கூடாது. குடும்ப ஜெபமாலை, தனி ஜெபமாலை வழியாக பசாசை அழிக்க மாதாவுக்கு நீங்கள் உதவி செய்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

நீங்கள் மாதாவை நேசிக்கிறீர்கள் என்பதற்கு இது அடையாளமாகும்.