163. பாவம் ஆவதென்ன?
தேவ கட்டளைகளை மீறுகிறது பாவம்.
164. எத்தனை வகைப்பாவம் உண்டு?
ஜென்மப் பாவம், கர்மப்பாவம் ஆகிய இரண்டுவகைப் பாவமுண்டு,
165. ஜென்மப் பாவம் ஆவதென்ன?
ஆதித்தாய் ஆதித்தகப்பனாலே உண்டாகி நம் மோடு கூட பிறக்கிற பாவம்.
166. மனிதர் யாவரும் ஜென்மப் பாவத்தோடுதானோ உற்பவிக்கிறார்கள்?
ஆம். மாசில்லாமல் உற்பவித்த புனித கன்னிமரியாயி தவிர மற்ற எல்லோரும் ஜென்மப் பாவத்தோடுதான் உற்பவிக்கிறார்கள்.
167. கர்மப்பாவம் ஆவதென்ன?
அவரவர் புத்திவிவரம் அறிந்த பிற்பாடு, மனது, பொருந்திச் செய்கிற பாவம்.
168. புத்திவிவரம் என்பதென்ன?
மனச்சாட்சி அறிய இன்னது நல்லதென்றும், இன்னது கெட்டதென்றும் கண்டுபிடிக்கிறதே புத்தி விவரம்.
169.கர்மப் பாவம் எத்தனை வகை உண்டு?
சாவான பாவம், அற்பப்பாவம் ஆகிய இரண்டு வகையுண்டு.
170.சாவான பாவம் ஆவதென்ன?
தேவ இஷ்டபிரசாதத்தைப் போக்கடித்து, நம்மை நரகத்துக்குப் பாத்திரவான்கள் ஆக்குகிற பாவம்.
171. ஒரு குற்றம் சாவான பாவம் என்று எதினாலே அறியலாம்?
முழு அறிவோடும், முழு சம்மதத்தோடும். கனமான விஷயத்தில் குற்றம் செய்திருந்தால் அது சாவான பாவமென்று அறியலாம்,
172. அற்பப்பாவம் ஆவதென்ன?
நம்மில் தேவசிநேக அக்கினியின் வேகத்தை குறைத்து, சாவான பாவத்துக்கு வழியுமாகி நம்மை உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் பாத்திரவான்களாக்குகிற பாவம்.
173. தலையான பாவங்கள் எத்தனை?
ஏழு
174. ஏழும் சொல்லு
1-வது - ஆங்காரம்.
2-வது - கோபம்.
3-வது - மோகம்.
4-வது - லோபித்தனம்.
5-வது - போசனப்ரியம்.
6-வது - காய்மகாரம்.
7-வது - சோம்பல்.
175. தலையான பாவங்களுக்கு விரோமான புண்ணியங்கள் எத்தனை?
ஏழு
176. ஏழும் சொல்லு
1-வது - தாழ்ச்சி .
2-வது - பொறுமை,
3-வது - கற்பு.
4-வது - உதாரம்.
5-வது - மட்டசனம்.
6-வது - பிறர்சினேகம்.
7-வது - சுறுசுறுப்பு.