தனி யுத்தம்

1. தனி யுத்தம் என்றால் என்ன?

தனி யுத்தம் அல்லது தனிப்போர் என்பது இருவர் தங்கள் உயிருக்காவது அவயவங்களுக்காவது சேதம் வரும்படி சண்டை செய்யும் கருத்தோடு, காலம், இடம், வகை முதலிய சந்தர்ப்பங்களைத் திட்டப்படுத்திக்கொண்டு தங்களுக்குள் செய்யும் யுத்த மாகும்.


2. தனி யுத்தம் செய்யலாமா?

எந்தக் காரணத்தை முன்னிட்டும் தங்கள் சுய அதிகாரத் தினால் தனி யுத்தம் செய்யவே கூடாது. செய்தால், கனமான பாவ மாகும்.  ஏனெனில், தனி யுத்தம் செய்கிறவன்:

(1) இதனால் தனக்கு அல்லது பிறனுக்கு மரணம் நேரிடக் காரணமாயிருக்கிறான்.

(2) தன்னை அல்லது பிறனை நரக ஆபத்துக்கு உள்ளாக்கு கிறான்.

(3) மேலும் தனி யுத்தம் செய்கிறவர்களும், அதற்கு உதவி புரிகிறவர்களும், திருச்சபையின் சாபத்துக்குள்ளாவார்கள்.  அதில் பட்ட காயங்களினிமித்தம் சாகிறவனுக்குக் கிறீஸ்தவர்களுக்குரிய அடக்கம் கொடுக்கக்கூடாது. (தி.ச. 1240).


3. தமது சுய அதிகாரத்தினால் என்று சொல்லுவானேன்?

சில சமயங்களிலே பொது நன்மையினிமித்தம், உதாரணமாக: இரண்டு தேசங்களுக்குள் நடக்கும் சண்டையை முடிக்கிறதற்காக, மேல் அதிகாரிகளின் உத்தரவு பெற்று, தனி யுத்தம் செய்யலாம்.  இப்படியே தாவீது கோலியாத்தோடு தனி யுத்தம் செய்தாரென்று வேதாகமத்தில் வாசித்துப் பார்க்கலாம் (1அரசர். 17).