சர்வேசுரனுடைய விசேஷ உத்தரவால் சில வியாதியை அல்லது தீமையைப் போக்க வரம் பெற்றிருக்கும் அர்ச்சியசிஷ்டவர்கள்

16. சர்வேசுரனுடைய விசேஷ உத்தரவால் சில வியாதியை அல்லது தீமையைப் போக்க வரம் பெற்றிருக்கும் அர்ச்சியசிஷ்டவர்களில் சிலரைச் சொல்லு.

காய்ச்சலுக்கு--அர்ச். அந்தோனீனுஸ், மே, 10.

தலைவலிக்கு--அர்ச். கத்தரீனம்மாள், ஏப்ரல், 30; அர்ச். பெர்நார்து, ஆகஸ்ட் 20; அர்ச். தியோனிசியார், அக்டோபர் 9.

கொள்ளை நோய்க்கு-- அர்ச். ஆரோக்கியநாதர், ஆகஸ்டு 16.

பாரிச வாய்வுக்கு-- அர்ச். ஃப்ரெட்ரிக், ஜூலை 18.

குழப்பத்திற்கு--  அர்ச். கிறீஸ்டோபர், ஜூலை 25.

அவதூறுக்கு-- அர்ச். நிக்கோலாஸ், டிசம்பர் 6.

நெருப்புக்கு-- அர்ச். பெரிய அந்தோனியார், ஜனவரி 17. அர்ச். ஆகத்தம்மாள், பிப்ரவரி 5.

காணாமற்போன வஸ்துவுக்கு--அர்ச். அந்தோனியார், ஜூன் 13.


கீழ்க்கண்ட அர்ச்சியசிஷ்டவர்கள் பின்வருபவைகளுக்கு விசேஷ பாதுகாவலர்கள்:

மிருகங்களுக்கு --அர்ச். பெரிய அந்தோனியார், ஜனவரி 17.

படைக்கு --அர்ச். பார்பரம்மாள், டிசம்பர் 4.

உபதேசிமாருக்கு --அர்ச். சிறில், மார்ச் 18.

சிறுவருக்கு --அர்ச். நிக்கோலாஸ், டிசம்பர் 6.

புதுநன்மைக்கு --அர்ச். இமெல்தா, மே 12.

புதுக் கிறீஸ்துவர்களுக்கு--அர்ச். சின்னப்பர், ஜனவரி 25.

ஊமைகளுக்கு --அர்ச். பெர்நார்து, ஆகஸ்டு 20.

தோட்டக்காரருக்கு --அர்ச். செரேனுஸ், பிப்ரவரி 23.

தட்டாருக்கு --அர்ச். டன்ஸ்டன், மே, 19.

நல்ல மரணத்துக்கு --அர்ச். சூசையப்பர், மார்ச் 19.

வீட்டு வேலைக்காரருக்கு--அர்ச். சீத்தா, ஏப்ரல் 27.

பயிரிடுகிறவர்களுக்கு --அர்ச். இசிதோர், மே, 10.

கடைசி தேவ திரவிய அனுமானங்களுக்கு-- அர்ச். பார்பரம்மாள், டிசம்பர் 4.

கப்பலோட்டிகளுக்கு --அர்ச். தெலியுஸ்.

மோட்டாரோட்டிகளுக்கு--அர்ச். கிறீஸ்டோபர், ஜூலை 25.

சமுசாரிகளுக்கு --அர்ச். பிரான்சிஸ்கம்மாள், மார்ச் 9; அர்ச். அருளம்மாள், ஆகஸ்ட் 21.

வாத்தியக்காரருக்கு --அர்ச். செசீலியம்மாள், நவம்பர் 22.

சித்திரக்காரருக்கு --அர்ச். லூக்காஸ், அக்டோபர் 18. அர்ச். மெதோடியுஸ், ஜூலை 5.

வைத்தியருக்கு --அர்ச். கோஸ்மாஸ், தமியான், செப்டம்பர் 27.

அச்சடிக்கிறவர்களுக்கு --அர்ச். அருளப்பர், மே 6.

கற்புக்கு --அர்ச். தோமாஸ், மார்ச் 7. அர்ச். ஞானப்பிரகாசியார், ஜூன் 21.

இடையருக்கு --அர்ச். இசிதோர், மே 10.

சிப்பாய்களுக்கு --அர்ச். செபஸ்தியார், ஜனவரி 20. அர்ச். ஜியார்ஜ், ஏப்ரல் 23.

மாணவர்களுக்கு --அர்ச். ஞானப்பிரகாசியார், ஜூன் 21.

ஆசிரியர்களுக்கு --அர்ச். கலாசான்சியு ஜோசப், ஆகஸ்ட் 27.

போருக்கு --அர்ச். பார்பரம்மாள், டிசம்பர் 4.

விதவைகளுக்கு --அர்ச். பவுலா, ஜனவரி 26. அர்ச். மோனிக்கம்மாள், மே 4.

கன்னியருக்கு --அர்ச். ஆக்னேசம்மாள், ஜனவரி 21. அர்ச். லீமா ரோஸ், ஆகஸ்ட் 30.


17. அர்ச்சியசிஷ்டவர்களை நாம் எப்படி வணங்க வேண்டும்?

அவர்களைக் குறித்து நவநாள் பிரார்த்தனை செய்து, அவர்கள் சரித்திரத்தை வாசித்து, அவர்கள் பேராலே ஸ்தாபிக்கப்பட்ட சபையில் சேர்ந்து, அவர்கள் பேராலே செபம் பண்ணி, ஒருசந்தி பிடித்து, தர்மம் கொடுத்து, அவர்களுடைய புண்ணிய நடத்தை யைப் பின்பற்றுவதே அவர்களை வணங்குவதாகும்.


18. தேவமாதாவின் பக்தி எதிலடங்கியிருக்கிறது?

தேவமாதாவின் பேரில் பக்தி முக்கியமாய் எதிலடங்கியிருக் கிறதென்றால், பிள்ளைக்குரிய அன்புடன் அவர்களை நேசிப் பதிலும், பூரண நம்பிக்கையுடன் அவர்களை நோக்கி வேண்டிக் கொள்ளுவதிலும், அவர்களுடைய சகல புண்ணியங்களையும், விசேஷமாய் அவர்களுடைய தேவநேசத்தையும், தாழ்ச்சியையும், பரிசுத்ததனத்தையும் கண்டு பாவிப்பதிலுமேயாம்.


சரித்திரம்

அர்ச். சவேரியார் தேவமாதாவை அத்தியந்த அன்புடன் நேசித்து வணங்கி வந்தார்.  அவர் முதல் வார்த்தைப்பாடு கொடுத்தது தேவமாதா பரலோகத்திற்கு எழுந்தருளின திருநாளன்று; இந்தியாவுக்கு வர ஆசை கொண்டது தேவதாய் வசித்த திரு வீடாகிய “லொரேற்றோ” திருத்தலத்தில்தான்.  அவர் செபித்த ஒவ்வொரு செபத்தையும் மோட்ச நாயகிக்கு ஒரு சிறு மனவல்லயச் செபம் சொல்லியே முடிப்பார்; அவர் கற்பித்த ஞானோபதேசப் பாடங்கள் “கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற” என்ற செபத்தினால் முடிவுபெறும்; அவர் தொடங்கிய ஒவ்வொரு ஆத்தும இரட்சணிய அலுவலும் தேவதாயின் அடைக்கலத்தில் வைக்கப்பட்டிருக்கும்.  அபாய காலத்தில் அன்னை கன்னி மாமரியே என்று அன்புடன் கூவியழைப்பார்.  ஜெபமாலையை எப்போதும் கழுத்திலணிந்திருப்பார்;  பரலோக ஆண்டவளின் பீடத்தடியில் இரவில் நித்திரை செய்வார்;  தமது புதுக் கிறீஸ்துவர்களைக் கூட்டிச் சேர்த்து அவர்களுடன் ஜெபமாலை ஜெபிப்பது அவருக்கு ஆனந்தமாயிருக்கும். திருப்பாலகனைக் கரத்திலேந்திய நேர்த்தியான தேவமாதா படம் ஒன்றை ஜப்பான் சக்கரவர்த்திக்கு அர்ச். சவேரியார் அனுப்ப, சக்கரவர்த்தி அதன் அழகைப் பார்த்தவுடன் தன்னையறியாமலே முழந்தாளிட்டு வணங்கினார் (திரு இருதயத் தூதன்).