நினைவு

40. நினைவு என்றால் என்ன?

முக்காலத்திலும் நிகழ்கிற சம்பவங்களைப்பற்றியோ, அல்லது ஆட்கள், பொருட்களைப்பற்றிய எண்ணங்கள் தாமாகவோ அல்லது நமது முயற்சியாலோ, நமது மனத் திரையில் தங்கி காட்சியளிப்பதாக நாம் உணருவதே நினைவு எனப்படும்.

41. நினைவுகளைப்பற்றிய ஒழுங்கு யாது?

நினைவு நல்ல நினைவு. தீய நினைவு என இருவகைப் படும். நமமைக் கடவுளுடன் ஒன்றிக்கச் செய்யும் நினைவுகளை நல்ல நினைவுகள் என்று சொல்லலாம். எடுத்துக்காட்டாக, தேவசிநேகம், பிறர் சிநேகம் இவற்றுக்கடுத்த நினைவுகளைக் கூறலாம். நமக்கோ அல்லது பிறருக்கோ தீங்கிழைக்கக் கூடியவைகளைக் தீய நினைவுகள் என்று கூறலாம் உதாரண மாக, தன்னைப்பற்றிய பொருமை செருக்கு, அகங்காரத்துக்குரிய நினைவுகள், பொறாமையினால் பழிவாங்கும் நினைவுகள். ஆசாபாசத்தினால் விளையும் சிற்றின்ப நினைவுகள் ஆகியவை நமது முயற்சி இன்றியே, தம்மியல்பிலேயே நம் மனதில் உதிப்பதுண்டு. இவற்றை நாம் உணர்ந்து, அவை எத் தகையவை என்பதை அறிவோமானால், அவற்றை நீக்கி உடனே தடுக்க முயற்சி எடுக்கவேண்டும். இவை சிலசமயங் களில் நமது மனதிலேயே அகலாது இருக்கலாம். இவ்வாறு நிலைத்து இருக்கும்போது, நாம் அவற்றைப் பொருட்படுத் தாது. அதனிடம் விருப்பம் கொள்ளாது அவற்றை நீக்கு வதற்கு முழுமனதுடன் முயற்சி செய்து கொண்டிருக்கலாம். இத்தகைய முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு சமய மும் நாம் குற்றத்தில் விழுந்தவர்கள் அல்ல; இவற்றை நீக்குவதற்கு நாம் எடுக்கும் முயற்சிகள், புண்ணிய முயற் சிகளாகக் கூடக் கருதப்படுகிறது. இதற்கு மாறாக நாம் தீய நினைவுகள் என்று தெரிந்து கொண்டும், அவற்றில் திளைத்து உற்சாகத்துடன் அவற்றை ஆதரிதது, நமதாக்கிக்கொண்டு அதில் நீண்டநேரம் இன்பத்தையோ, பகை உணர்ச்சியையோ அனுபவிப்போமாகில் அது குற்றமாகும். சிலசமயங்களில் நாமாகவே நமது ஐம்புலன்களின் உதவியைக் கொண்டு கவனக்குறைவினாலோ அல்லது கெட்ட பழக்கத்தினாலோ இத்தீய நினைவுகளை வருவிக்க புடியும். இந்நிலையில் குற்றங்களின் பட்டியல் வேறுபடு கிறது. அதாவது, இந்தத் தீய நினைவுகள் நமக்கு வருவ தற்கு, நாம் காரணமாயிருந்தது ஒரு குற்றம் ; அவை வந்த பிறகு அவற்றை நீக்காது மட்டுமின்றி, அவற்றில் ஈடு பட்டு, மனதில் இன்பமோ, பகையுணர்வோ கொண்டு இருப்போமானால் அது வேறு குற்றமாகும்.

42. மனது பொருந்தி தீய நினைவுகளில் இன்பமடைவதினால் நமக்கு வரும் கேடுகள் யாவை?

[1] மன நிம்மதியை இழந்து விடுகிறோம்.

(2) பிறர் மீது ஏற்படும் காமம், குரோதம், பகை வர்மம் அதிகரித்து அவர்களை கெடுக்கத் தயாராக இருக்கிறோம்.

(3) இறைவனிடம் நமக்கு இருக்க வேண்டிய ஈடுபாடு நெருங்கிய தொடர்பு, அன்பு ஆகியவற்றை இழந்து அவரை மறந்து போகிறோம்; அல்லது அவரை வெறுக்கிறோம்.

(4) எந்தவிதமான தீய செயல்களையும் செய்யப் பின் வாங்காது சூழ்ச்சி செய்கிறோம்.

43. இந்தத் தீய நினைவுகளை எவ்வாறு அகற்றலாம்?

தீய பழக்கங்களை, நற்பழக்கங்களைக்கொண்டு, மாற்றி அகற்றுவது போல, தீய நினைவுகள் மனதில் தோன்றும் போது கடவுளுக்கு மன வருத்தம் உண்டாக்குமே என்னும் அன்புடன் கலந்த அச்சத்தோடு, மனம்வருந்தி, அவற்றுக்கு காரணமானசந்தர்ப்பங்களை முதன்முதல் அகற்றவேண்டும். அடுத்தபடியாக, அவற்றிற்கு எதிரான நல்ல நினைவுகளை வருவித்து, சிறிதுசிறிதாகத் தீய நினைவுகளை நீக்க முயற் சிக்கவேண்டும். இத்தகைய முயற்சிகளாலும், தீய நினைவுகள் மாறாவிட்டால், அவற்றைக் கவனிக்காது நாம் கைக்கொண் டுள்ள அலுவலில் கூடுதலான கவனம் செலுத்தி, முனைந்து அவ்வேலையில் ஈடுபடவேண்டும். தீய நினைவுகள் நம்மை விட்டு நீங்கும்படி இறைவனைப் பிரார்த்திப்பது மிக மிக அவசியம். தீய நினைவுகள் நம்மைவிட்டு நீங்கிய பின், இனி மேலும் இத்தகைய சந்தர்ப்பங்கள் நேரிடாதபடி எச்சரிக்கை யாக இருக்கவேண்டும். ''பிறன் மனைவியுடன் சேர்ந்து வாழாவிட்டாலும். எவனொருவன் அதனைத் தீய நினைவுடன் பார்க்கிறானோ அவன் விபசாரமென்னும் குற்றத்தைக் கட்டிக்கொள்ளுகிறன்'' என்பது கிறிஸ்துவின் வாக்கு

44. நினைவைக்கொண்டு கடவுளைச் சேவிப்பது எங்ஙனம்? 

இறைவனை நோக்கி நமது மனதை அடிக்கடி எழுப்பி அவரது நன்மைத்தனத்தையும், மற்ற குண இலட்சணங் களையும் நினைத்து, மனதில் பெருமிதம் கொண்டு சிந்திப்ப தால், நாம் அவரை ஆராதிக்கிறோம் சிறப்பாக காலையில் எழுந்ததும் சற்றுநேரம் அவருக்காக ஒதுக்கிவைத்து. அவரைப்பற்றி நினைத்துத் தியானிக்கலாம். கடந்த இரவு முழுமையும் யாதொரு துன்பமும் இன்றி காப்பாற்றிய தற்கு நன்றியும், துவக்கியிருக்கும் நாள் முழுவதற்கும் நமக்கு வேண்டிய உதவியை அளிக்கும்படியும் கேட்கலாம் உலகில் காணும் பொருட்கள் கேள்விப்படும் நிகழ்ச்சிகள் இவற்றில் காணப்படும் இறைவனின் மகிமையைப்பற்றி எண்ணி எண்ணி மகிழ்ந்தனர் மகான்களும் புனிதர்களும் நாம் அவர்களைப் போல அவ்வளவு தூரம் பரமன் தியானத்தில் மூழ்காவிடினும் வேலையின்றி ஓய்வாயிருக்கும் போது வீண் மனக்கோட்டைகளாகிய மணற்கோட்டைகளை எழுப்பி. அவை சரிந்து விழுவதுகண்டும் மனம் இடிந்து ஏமாற்றம் அடைவதற்குப் பதிலாக இறைவனைப்பற்றிய நல்ல. உயர்ந்த நினைவுகளை வருவித்து, சிந்தப்பது மனதுக்கு எத்துணை நிம்மதியை அளிக்கும் ! மேலும் பிறருக்கு உதவி செய்யும் நோக்கத்துடன், நல்ல திட்டங்களை வகுத்து; அவற்றைச் செயல்படுத்தி பிறர் நலத் தொண்டாற்ற முன் வருவோமாகில், நமது வாழ்க்கை சிறந்த குறிக்கோளுடைய வாழ்க்கையாக அமையுமன்றோ!