போதகம் 6 நாம் எப்போது இந்த ஞான சரீரத்தின் உறுப்புகளாகிறோம்?

இதே கேள்வியை வேறு விதமாகவும் கேட்கலாம். நாம் எப்போது நம் சிரசாகிய கிறீஸ்துநாதருடன், ஒட்டுச் செடி போல் இணைக்கப்படுகிறோம்? அல்லது நாம் எப்போது கிறீஸ்துவுடன் ஒன்று சேர்க்கப்படுகிறோம்? கிறீஸ்து தம்மைத் திராட்சைச் செடி எனவும், அவரைப் பின்பற்றுகிறவர்களைக் கொடிகள் எனவும் கூறினார். அதாவது சுவையற்ற மாங்கன்றை சுவைமிகுந்த மாமரத் துடன் ஒட்டுவது போல், அவரில் விசுவாசம் கொள்ளும் அனைவரும் அவரில் ஒட்டப்பட வேண்டுமென்பதே பொருள். கிறீஸ்துநாதர் நம் சிரசு, நாம் அவருடைய உறுப்புகள் என்றார் அர்ச். சின்னப்பர். அதாவது நாம் கிறீஸ்துவில் ஒரே உடலாக ஒன்றாக்கப்பட வேண்டும் என்பது பொருள். உதாரணமாக இறந்த ஒரு மனிதனின் கண்களைக் குருட னுக்குப் பொருத்தி, அவன் பார்வை அடையச் செய்வது போல.

எப்போது இந்த 'ஒட்டுதல் அல்லது ''ஒன்றாக்குதல்" நடைபெறுகிறது?

ஒட்டு மாங்கன்று தயாரிப்பதற்குப் பல கட்டங்கள் உண்டு. முதலாவதாக ஒட்டப்பட வேண்டிய கன்று அல்லது கிளை வெட்டப்பட்டுத் தயாராக வேண்டும். அதன்பின் அதனை நல்ல சாதி மரத்துடன் இணைத்துக் கட்ட வேண்டும். இவ்வாறு இணைக்கப்பட்ட உடனேயே, ஒட்டப்பட்ட செடி நாம் விரும்பும் நற்கனியைத் தருவதில்லை. தாய்ச் செடியுடன் பொருந்தி அதனுடைய வளம் பெறுவதற்குச் சில காலம் பிடிக்கும். அதன்பின் தளிர்கள், கிளைகள் விடுவதற்கு நாளாகும். மலர்களையும், கனிகளையும் தருவதற்கு இன்னும் அதிக காலம் செல்லும். இங்ஙனம் தாய்ச்செடியின் சத்தை ஓட்டுச்செடி தன்னுள் கிரகிப்பதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது. ஒட்டுச் செடி முதலில் தாய்ச் செடிக்கு ஒத்ததாக வளம் பெற்று, அதன் பின்னர்தான் உயர்ந்த சாதி நற்கனிகளைத் தருகிறது.

அதே போல், ஜீவ உறுப்பு (உ-ம்: கண்) உயிருள்ள