6-ம், 9-ம், 7-ம், 10-ம் 8-ம் கற்பனைகளின் பேரில்.

144. ஆறாம் ஒன்பதாம் கற்பனைகளால் சர்வேசுரன் விலக்குகிறதென்ன? 

மோகத்துக்கு அடுத்தநினைவு. ஆசை, கெட்டப்பேச்சு, சிற்றின்பப்பாட்டு, ஆகாத பார்வை, கெட்டச்செயல், துர்க்கிரியை, விபசாரக் குற்றம், முதலியவைகளை விலக்குகிறார்.


ஆறாம் ஒன்பதாம் கற்பனைகளால் சர்வேசுரன் நமக்குக் கற்பிக்கிற தென்ன? 

நமது மனதிலும், சரீரத்திலும் நாம் கற்புள்ளவர்களாயும் பரிசுத்த முள்ளவர்களாயும் இருக்கவும், மோகபாவத்துக்கு ஏதுவான சமயங்களை விலக்கவும் கற்பிக்கிறார்.


146. மோக பாவத்துக்கு உள்ளாகாதபடிக்குச் செய்ய வேண்டியது என்ன? 

சோதனை சமயத்தில் அதை விலக்கும்படி செபம் செய்யவும், பரிசுத்த தேவமாதாவின் பேரில் பக்தியாயிருக்கவும், அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்யவும். நன்மை வாங்கவும் வேண்டியது.


147. ஏழாம் கற்பனையால் சர்வேசுரன் நமக்கு விலக்குகிறதென்ன? 

பிறருடைய பொருட்களைத் திருடவும், அவைகளை அநியாயமாய் வைத்திருக்கவும், திருட்டுக்கு உதவி செய்யவும், பிறருக்கு அநியாயமாய் நஷ்டம் வருவிக்கவும் கூடாதென்று விலக்குகிறார்.


148. ஏழாம் கற்பனையால் சர்வேசுரன் நமக்குக் கற்பிக்கிறதென்ன? 

திருடின பொருட்களை உடையவனுக்கு உத்தரிக்கவும், அநீதமாய் வருவித்த நஷ்டத்தை பரிகரிக்கவும்


149. பத்தாம் கற்பனையால் சர்வேசுரன் நமக்கு விலக்குகிறதென்ன? 

திருட்டு முதலிய அநியாயங்களைச் செய்ய ஆசை வைக்கவும், அதற்கு உபாயந்தேடவும் கூடாதென்று விலக்குகிறார்.


150. எட்டாம் கற்பனையால் சர்வேசுரன் நமக்கு விலக்குகிறதென்ன? 

பொய்களையும், பொய்ச் சாட்சிகளையும், புறத்தியாருடைய பேரைக் கெடுக்கதக்க கோள். குண்டணி, புறணிகளையும். புறத்தியார் பேரிலும் கெடுதியான வீண் எண்ணத்தீர்மானங்களையும் விலக்குகிறார்.


151. இந்த பத்துக் கற்பனைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும் என்பதற்கு அர்த்தமென்ன? 

எவன் சர்வேசுரனை எல்லாத்தையும் பார்க்கச் சிநேகித்து புறத்தியாரையும் தன்னைப்போல் சிநேகிக்கிறானோ அவன் அதனால் எல்லாக் கற்பனைகளையும் அனுசரித்து வருகிறான் என்பதாம்,