தேவநற்கருணை விளக்கம். 2

103.- தேவநற்கருணையில் மெய்யாகவே சேசுநாதர் சரீரமும் இரத்தமும் இருக்கிறதென்றும், நிற முதல் பல குணங்களொழிய, அப்பமும் இரசமும் இல்லையென்றும், அக்குணங்களுள்ள மட்டும் அவைகளுக்குள்ளே சேசுநாதர் இருக்கிறார் என்றும், இம்மூன்று சாத்தியங்களை ஒப்பித்த பின்பு உரோமான் திருச்சபை படிப்பிக்கும் நாலாஞ் சத்தியமாவது: ஒவ்வொரு வகைக் குணங்களுக்குள்ளே சேசு நாதர் தாம் முழுதும் இருக்கிறார் என்று விசுவசிக்கக்கடவோம். ஆகையால் அப்பத்தின் குணங்களுக்குள்ளே இது என் சரீரம் என்ற வார்த்தையின் வல்லமையினால் சரீரம் மாத்திரம் இருந்தாலும், விடாத துணை முறையால் அவர் இரத்தமும், ஆத்துமமும், தேவ சுபாவமுங் கூட நிற்பதென்றும்; அப்படியே இரசத்தின் குணங்களுக்குள்ளே இது என் இரத்தமென்ற வார்த்தையின் வல்லமையினால் அவர் இரத்தம் மாத்திரம் இருந்தாலும் விடாத துணை முறையால் அவர் சரீரமும், ஆத்துமமும், தேவ சுபாவமுங் கூட நிற்கிறதென்றும் விசுவசிக்கத் தகுஞ் சத்தியமாமே.

இதிலேயும் லுத்தேர் தன் குணத்தை விடாமல், 16-ம் பிரிவின் விசேஷங்களை ஸ்தாபித்த இடத்தில் இந்தச சத் தியத்தைத் தெளிவாகச் சொன்னபின்பு, காற்றின் முகத் துத் திரும்புங் கொடியைப் போல சிநேகிதன் ஒருவனுக்கு எழுதின இடத்தில் இதை நகைப்பாக மறுத்தான். வால் தெஞ்சியாருக்கு எழுதின புஸ்தகத்திலோவெனில், நற்க ருணை விஷயத்தில் பேசும்போது ஒவ்வொரு வகைக் குணங் களுக்குள்ளே சேசுநாதர் முழுதும் இருக்கிறார் என்றாலும் என்ன? ஒன்றில் அவர் சரீரம் மாத்திரம், ஒன்றில் அவர் இரத்தம் மாத்திரம் இருக்கிறதென்றாலுமென்ன ? இதில் காரியமில்லை என்று தப்பித்துக்கொள்ளும்படிக்கு மறைவா கத்தடவின குருடனைப்போல் எழுதினான். அப்படியே அவன் சீஷர்களும் மூன்று பிரிவாக நின்று நம்மோடு சொல்வா ருமுண்டு, அந்தச் சத்தியத்தை மறுப்பாருமுண்டு, இதில் செவ்வையான மறுவுத்தரஞ் சொல்லாமல் தப்பித்துக்கொள் ளுவாருமுண்டு.

நாமோவெனில், எளிதாய் வேத உதாரணங்களினால் ஸ்தாபித்த சத்தியத்தை ஒப்பிக்கக்கடவோம். அதெப்படி யென்றால், இது என் சரீரமென்று சேசுநாதர் திருவுளம் பற்றினதினால் அப்பத்தின் குணங்களுக்குள்ளே அவர் சரீ ரம் மெய்யாகவே நிற்குமென்பது லுத்தேரானிகளுஞ் சொல்லுகிறார்கள். நாமும் இதில் முதல் சத்தியமாக ஒப் பித்தோம். ஆகிலுஞ் சேசுகிறீஸ்து மரித்து எழுந்தருளின பின்பு மீளவும் இனிச் சாகாரென்று வேத சத்தியமாக அர்ச். சின்னப்பர் உரோமாபுரியாருக்கு எழுதின நிருபத் தின் 6-ம் அதிகாரம் 9-ம் வசனத்தில் சொன்னாராகையால், அப்பத்தின் குணங்களுக்குள்ளே சேசுநாதர் சரீரஞ் செத்த பிணமாயிராமல் இரத்தத்தோடேயும், ஆத்துமத்தோடே யும் நிற்கிறதென்று சொல்லக்கடவோம்.

மீளவும் மனுஷ சுபாவத்துக்களவாகத் தேவ வார்த்தை என்னுஞ் சுதனாகிய சர்வேசுரன் பிரியாதிருக்கிறதென்றும், தேவ ஆளும், தேவ சுபாவமும் வேறாகாமல் ஒன்றென்றும் பதிதரும் நம்மோடு வேத சத்தியமாகச் சொல்லுகிறார் களல்லோ . ஆகையால் கிறீஸ்துவின் மனுஷ சுபாவமாகிய இரத்தத்தோடு சரீரமும், ஆத்துமமும் நற்கருணை அப்பத் தின் குணங்களுக்குள்ளே இருக்கக் கொள்ள, அதற்காளா கிய தேவ ஆளும், அதனோடு ஒன்றாகிய தேவ சுபாவமுங் கூட நிற்குமென்பது வேத உதாரணங்களால் ஒப்பிக்கப் பட்ட சத்தியமாமே. இப்படியே இரசத்தின் குணங்களுக் குள்ளே சேசுநாதர் முழுதும் இருக்கிறார் என்று ஒப்பிக்கக் கடவோம்.

மீளவும் நற்கருணையைப் பற்றிச் சேசுநாதர் அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தின் 6-ம் அதிகாரம் 58-ம் வசனத் தில் சொன்னதாவது: என்னை உண்பவன் என்னால் உயிர் பிழைத்திருப்பான் என்றார். இதில் என் சரீரம் உண்பவன் என்னாமல், என்னை உண்பவன் என்றதனால், சேசுநாதர் முழுதும் உண்ணப்படுவார் என்று சொல்லக்கடவோம். ஆகிலும் அப்பத்தின் குணங்களிலே மாத்திரங் கர்த்தர் உண்ணப்படுவார். ஆகையால் அப்பத்தின் குணங்களில் சேசு நாதர் முழுதும் இருக்கிறார் என்பதும் சத்தியமாமே. இது வுந் தவிர, அப்பத்தின் குணங்களில் அவர் சரீரமல்லாமல், அவர் இரத்தமுங் கொள்ளப்படுமென்று விசேஷமாய் ஒப் பிக்கும்படிக்குச் சேசுநாதர் அந்த அதிகாரத்தில் தானே 54-ம் வசனத்தில் சகல பேர்களையும் நோக்கி: என் மாம் ஸத்தையும் இரத்தத்தையும் உட்கொள்ளாமல், ஞான சீவனை அடையமாட்டீர்கள் என்ற பின்பு, 59-ம் வசனத் தில் இந்த அப்பத்தை உண்பவன் நித்திய சீவனை அடைவா னென்றார்.

ஆகையால் அப்பத்தைமாத்திரம் உண்பவன் சேசுநா தர் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்பவனென்று சொல்லவேண்டிய தல்லோ . இன்னம் இது மிகத் தெளியும் படிக்கு யோசிக்குந் தன்மையாவது: சேசுநாதர் கட்டளை யின்படியே நித்திய சீவனை அடைய அவர் மாம்ஸத்தையும் இரத்தத்தையும் உட்கொள்ள வேண்டுமல்லோ? தேவ அப் பத்தை மாத்திரம் உட்கொள்பவன், அவர் தாம் சொன்ன படி நித்திய சீவனை அடைவான் ஆகையால் அந்த அப்பத்தை உட்கொள்பவன் சேசுநாகருடைய மாம்ஸத்தையும் இரத் தத்தையும் உட்கொள்பவன் என்னப்படுவான். ஆகையால் இதில் உரோமான் திருச்சபை படிப்பிக்குந் தன்மை வேத சத்தியமாமே.

104.-- இதெல்லாம் இப்படியாகக்கொள்ள, உரோ மான் திருச்சபை குருக்களுக்கன்றி மற்றவர்களுக்கு நற்கருணைப் பாத்திரத்தைக் கொடாமல், அப்பத்தின் குணங்களில் மாத்திரம் நற்கருணைக் கொடுத்ததினால் அவர்களுக்கு ஒரு குறையுமில்லை. அதேனெனில், முன் சொன்னபடி ஒரு வகைக் குணங்களில் மாத்திரம் நற்கருணை கொண்டாலுங் கர்த்தர் சரீரம் இரத்தமென்று இரண்டையுங் கொள்ளப்படுமே. இருவகைக் குணங்களில் நற்கருணைக் கொண்டாலும் அவ்விரண்டையும் மாத்திரம் இருவகையால் கொள் ளப்படுமொழிய அதிகமாய்க் கொள்ளப்படாதே. அப்படி யே பெரிய ஓஸ்தியைக் கொண்டவன் பெரிய சேசுநாதரைக் கொண்டானென்றும், சின்ன ஓஸ்தியைக் கொண்டவன், சின்ன சேசுநாதரைக் கொண்டானென்றுஞ் சொல்லக் கூடாதல்லோ

இதெல்லாத்துக்கும் நியாயமேதெனில். சேசுநாதர் சரீரமுடையவராயினுங் கண்டிப்புள்ள பொருளைப்போல் நற்கருணையில் இராமல் என் உடலில் என் ஆத்துமம் நிற் பதுபோல முழுதும் ஒவ்வொரு வகைக் குணங்களில் நிற்கி றாரென்று விசுவசிக்குஞ் சத்தியமாமே. ஆத்துமமோ வெனில், சின்ன உடலிற் சின்ன தாய், பெரிய உடலிற் பெரி யதாய் நிற்குமென்று சொல்லப்படாமல், ஒவ்வோர் ஆத்து மந் தன் சரீரத்தில் எங்கும் ஒன்றாய் நிற்பதன்றி, முழுதுந் தானே ஒவ்வொரு சின்ன உறுப்புக்களிடத்தில் நிற்கு மல்லோ . அப்படியே நம்மால் கண்டுபிடிக்கப்படாத அற் புத முறையால் சேசுநாதர் சரீரமும் உயிரின் தன்மையால் உலகமெங்கும் அதுதினம் உண்டாக்கப்படும் நற்கருணையி னின்று தாமே ஒருவராய் முழுதும் ஒவ்வோர் அப்பத்தின் குணங்களிலேயும், இரசத்தின் குணங்களிலேயும் வேற்று மையின்றிப் பிரிவின்றித் தமது அளவில்லாத பட்சத்தின் வல்லமையால் இருக்கத் திருவுளமானார்.

ஆகிலும் எல்லாருக்கும் நற்கருணைப் பாத்திரத்தைக் கொடாததினால், இந்நாட் பதிதர் மிகவும் முறைப்பட்டு, விசேஷமாய் இகனால் உரோமான் திருச்சபையை விட்டுப் பிரிந்தோமென்று பலர் சொல்லிக்கொண்டு வருவதால், இன்னம் இதில் சில நியாயங்களைச் சொல்லிக்காட்டுவோம், லுத்தேர் என்பவன் இதில் விசேஷமாய் மயங்கிப் பித் சனைப் போலச் சொன்ன விபரீதங்களை முப்பத்தாறாகக் கொக் கிளே என்பவர் சேர்த்து எழுதிவைத்தார். அப்படியே 1519-ம் ஆண்டில் லுத்தேர் பொஹேமியா இராச்சியத்தா ருக்கு எழுதினதாவது : இருவகைக் குணங்களில் நற்கருணை வாங்குவது நல்லதாயினுஞ் சேசுநாதர் இதில் ஒன்றுங் கட் டளையிடாமையால் ஒரு வகைக் குணங்களில் மாத்திரம் அதனை வாங்கச் சமாதானமாயிருப்பதே அதிலேயும் நல்ல தென்றான்.

மீளவும் 1522-ம் ஆண்டில் அவர்களுக்கு எழுதி, அஞ் சினவர் வேண்டும்படியே இருவகைக் குணங்களிலாயினும் ஒரு வகைக் குணங்களிலாயினும் நற்கருணை வாங்க உத்தா ரந் தந்தோமென்றான். அப்படியே அவன் செய்த நற்கரு ணைப் பிரசங்கத்தில் அதனை இருவகைக் குணங்களில் வாங் கக் கடனில்லை என்றான். இக்தன்மையால் இதற்குக் கட் டளையுங் கடனுமில்லை என்றபின்பு, பபிலோன் அடிமைத் தனம் என்னும் புஸ்தகத்தின் முதல் அதிகாரத்தில் இரு வகை நற்கருணை வாங்கவும், கொடுக்கவும் ஆண்டவர் கட்ட ளையிட்டார் என்றும், அதனால் நமக்குக் கடன் உண்டென் றும் விரிவாக எழுதினான். கனாக் கண்ட பித்தன் குளறிப் பிதற்றுந் தன்மை இதல்லோ. மீளவுஞ் சொன்ன நற்கரு ணைப் பிரசங்கத்தின் மேல் தான் எழுதின வியாக்கியானத் தில் கூடின எல்லாக் கிருச்சபைக் கட்டளையில்லாமல் மேற் றிராணி பார் ஒவ்வொருவராயினுஞ் சிலர் மாத்திரமாயினும் இருவகைக் குணங்களில் எல்லாருக்கும் நற்கருணை கொடுக்க ஸ்தாபித்தால் எனக்கு நல்லதல்லவென்றான்.

பிறகு தானே 16-ம் பிரிவின் விஷயத்தை ஸ்தாபித்த இடத்தில் சொன்ன தாவது: கூடின திருச்சபை கட்டளை யில்லாமலும், பாப்பு வேண்டாமென்றாலுங் கிறீஸ்துவை மாதிரிகையாகப் பின்சென்று ஒவ்வொரு மேற்றிராணியார் எல்லாருக்கும் இரு வகை நற்கருணைக் கொடுக்க ஸ்தாபித் தால் மிகவும் நல்லதென்றான். முழுமதி கெட்டவனும் இதன் மேல் விபரீதங்களைச் சொல்லுவானோ? கடைசியில் பூசை செய்யும் மாதிரிகை என்னும் புஸ்தகத்தில் லுக்தேர் தன் நெஞ்சு கொள்ளாமல் உள்ளே தளம்பி நின்ற விஷயத் கைக் ஈக்கிச் சொன்ன காவது : உரோமான் திருச்சபைகூடி, இருவகைக் குணங்களில் எல்லாரும் நற்கருணை வாங்கக் கற்பித்தாலும் உத்தாரமாத்திரஞ் செய்தாலும் நாங்கள் அப் படி வாங்காமல் அந்தச் சபைக்கு நிந்தையாக ஒன்றில் ஒருக்காலும் நற்கருணை முழுதும் வாங்காதிருப்போம். ஒன் றில் எப்போதும் ஒரு வகைக் குணங்களில் மாத்திரம் அதை வாங்கி, அந்தச் சபையின் படியே இருவகையாக வாங்கின யாவரையும் வெறுத்துச் சாபிக்கக்கடவோம் என்றான்.

இதோ போர்த்தியிருந்த ஆட்டுத்தோலை நீக்கித் தன் உருவத்தைக் காட்டின ஓநாய். முன் சொன்னபடி இரு வகை நற்கருணை வாங்கக் கர்த்தரிட்ட கட்டளை இப்போ தெங்கே? அதற்கு நமக்குள்ள கடனும் இப்போதெங்கே? ஆகையால் லுத்தேர் என்பவன் வேதத்திற் கொத்த நியா யங்களை ஆராய்ந்தவனுமல்ல. சேசுநாதர் ஸ்தாபித்த கட்ட ளைபைக் கருதினவனுமல்ல. தான் கரை ஏறும் வழியைத் தேடினவனுமல்ல. உரோமான் திருச்சபைக்கு விரோதமே தான் தேடிப் படிப்பித்த உபதேசந்தானே. உரோமான் திருச்சபை இரு வகைக் குணங்களில் நற்கருணையை வாங்க வேண்டாமென்று விலக்கினால் இரு வகை வாங்குவது சேசுநாதர் கட்டளையிட்ட கடன் என்றான்.

உரோமான் திருச்சபை இரு வகை நற்கருணை வாங்க உத்தாரஞ் செய்தால் நான் அப்படி வாங்கேன் என்றும், மற்றவரும் அப்படி வாங்கலாகாதென்றும், அப்படி வாங்கி னவனைச் சபிப்பேன் என்றுஞ் சொன்னது வழுவின் திருச் சபையை நெறியில் நிறுத்த ஆண்டவரால் அனுப்பப்பட்ட அப்போஸ்தலன் பேசுந் தன்மைதானோ? அப்படியே லுத் தேர் சொன்ன அபத்தங்களை மறுக்கச் சொல்லி, அவனுக்கு அர்ச். பாப்பு எழுதினதற்கு அவன் அர்ச். பாப்புக்கு எழு தின மறு உத்தரத்தின் 30-ம் வசனத்தில் 109-ம் ஏட்டில் சொன்னதாவது : நீ ஆகாதென்றதெல்லாம் நானே நல்ல தென்பேன். நீ நல்லதென்றதெல்லாம் ஆகாதென்பேன். இதோ உன் சொற்படிக்கு நான் அபத்தங்களை மறுக்கும் வகை என்று நீச லுத்தேர் சேசுநாதர் ஸ்தானத்திலிருப்பவருக்கு நிந்தையாக அவரை நகைத்து எழுதி அனுப்பினான். ஒழுங்குப்படாமல் துள்ளி , இடைவிடாமல் இடறி , வழியில் லாமல் தாண்டிக் கால் தளர்ந்து அலைந்து திரியுங் கள் ளுண்ட வெறியனைப் பின்சென்று நாமும் அலையாதபடிக்கு, லுத்தேர் இதில் சொன்ன விபரீதங்களை விட்டு மற்றப் பதிதர் இந்நாளில் சொல்லுந் தன்மையைக் காட்டக்கட வோம்.

105.-- ஒவ்வொரு வகை நற்கருணைக் குணங்களில் சேசுநாதர் முழுதுமிருந்தாலும், அர்ச். மத்தேயு எழுதின சுவிசேஷ தின் 26-ம் அதிகாரம் 27-ம் வசனத்தில் கர்த் தர் சாமே அப்போஸ் சலருக்கு நற்கருணைப் பாத்திரத்தை யுந் தந்து, இதில் எல்லாருங் குடியுங்கள் என்றார். ஆகை யால் அப்பத்தைமாத்திரங் கொள்ளச் சொல்லாமல் அத்து டன் பாத்திரத்தையும் எல்லாருங் கொள்ளக் கட்டளையிட் டார் என்று இந்நாட் பதிதர் எல்லாருஞ்சொல்லுகிறார்கள். ஆகிலும் அர்ச் மாற்கு எழுதின சுவிசேஷத்தின் 14 ம் அதிகாரம் 23-ம் வசனத்தில் அப்போஸ்தலர் மாத்திரம் பாத்திரத்தில் குடித்தமாத்திரத்தில் எல்லாருங் குடித்தார் கள் என்றார்.

ஆகையால் அந்த எல்லாரும் அப்போஸ்தலரொழிய, மற்றப் பேர்களைப் பற்றிச் சொல்லப்பட்டதல்லவென்று கொள்ளக் கடவோம். அப்படியே அப்போஸ் கலர் எல்லா ருக்குங் கட்டளையிட்டாரென்றும், அதனோடு சகல குருக் களுக்கும் கட்டளையிட்டாரென்றுஞ் சொன்னால் நியாயந் தானே. மற்றச் சனங்களோடு சேசுநாதர் பேசினபொழு தோவெனில், ஒருக்காலும் அப்பத்தையும் பாத்திரத்தை யுங் கொள்ளச் சொல்லாமல், சரீரத்தையும் இரத்தத்தை யுங் கொள்ளக் கட்டளையிட்டார். ஆகிலும் இவ்விரண்டும் ஒவ்வொரு நற்கருணைக் குணங்களில் குறைவில்லாமல் கொள்ளப்படுமென்று ஒப்பித்தாச்சு தல்லோ . ஆகையால் குருக்கள் இருவகையில் நற்கருணைக் கொள்ளக் கட்டளை யிட்டது சரிதானே.

மற்றவர்களோவெனில், அவர் சரீரத்தையும் இரத்தத் கையுங் கொள்ளக் கட்டளையிட்டதொழிய , அவ்விரண்டை யும் இரண்டு வகையாற் கொண்டு, அப்பத்தையும் பாத்திரத் தையுங் கொள்ள எல்லாருக்கும் பொதுக் கட்டளையிட்டவ ரல்ல. இதனாலல்லோ அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தின் 6-ம் அதிகாரத்தில் எவருக்கும் பொதுவாய்ச் சேசுநாதர் பேசினவிடத்தில் தாம் ஐந்து முறை அப்பத்தின் பெயரைச் சொல்லி, ஒரு முறையாகிலும் இரசமென்கிற சொல் பாத் திரமென்கிற சொல் சொன்னவரல்ல.

106.- மீளவும் அப்பத்தின் குணங்களிலேயும் இரசத் தின் குணங்களிலேயுஞ் சேசுநாதர் நற்கருணை உண்டாக்கி னதினால் அதனை ஒருவகைக் குணங்களில் மாத்திரம் வாங் கினவன் பாதி தேவத்திரவிய அநுமானத்தை மாத்திரம் வாங்குவானல்லோவென்றும், கர்த்தர் கட்டளையிட்ட முழுத் தேவத்திரவிய அநுமானத்தைக் கொடாமலும், வாங்காமலும், பாதியை மாத்திரம் கொடுப்பதுங் கொள்வ தும் பாவமல்லோவென்றும் பதிதர் சொல்லுகிறார்கள். இதற்கு நாம் விரிவின்றித் தெளிவாய் மறு உத்தாரஞ் சொல் வதற்கு அறியவேண்டியதாவது : நற்கருணை தேவத்திரவிய அதுமானமாகவும் தேவ பூசையாகவும் ஸ்தாபிக்கப்பட்ட தாமே. தேவ பூசையாக இனி நாம் சொல்லுந் தன்மை யால், இரு வகைக் குணங்கள் வேண்டியது தானே.

இதனால் அர்ச். மத்தேயு சுவிசேஷத்தின் 26-ம் அதி காரம் 26-ம் வசனத்திலும், அர்ச். மாற்கு சுவிசேஷத்தின் 14- ம் அதிகாரம் 22-ம் வசனத்திலும், அர்ச். லூக்கா சுவி சேஷத்தின் 22-ம் அதிகாரம் 19-ம் வசனத்திலும் இந்தத் தேவ பூசை செய்ய அப்போஸ் தலரைக் குருக்களாக ஸ்தா பித்தபோது, அப்பத்தையும் பாத்திரத்தையும் உட்கொள் ளத் தந்து, நீங்களும் அப்படியே செய்வீர்களாக என்றார். நற்கருணை தேவத்திரவிய அநுமானமாகவோவெனில் ஒவ் வொரு வகைக் குணங்கள் போதுமென்று ஒப்பிப்போம். அதெப்படியென்றால் போன அதிகாரத்தில் சொன்னபடி குறைவில்லாமல் ஒரு சடங்கு தேவத்திரவிய அநுமானமா கும்படிக்குத் தன் உள்ளே ஆத்துமத்திலாகும் நன்மையைத் தானே வெளியில் காட்டும் அடையாளமாகவேண்டுமல்லோ.

நற்கருணை ஆத்துமத்துக்கு ஒரு தேவ போசனமு மாகி நாம் நம்மோடேயுஞ் சேசுநாதரோடேயுஞ் விசேஷப் புணர்ச்சியின் முறையால் ஒன்று படவுஞ் செய்வது இந்தத் தேவத்திரவிய அநுமானத்தால் உள்ளேயாகும் நன்மை யாமே. இவ்விரு வகை நன்மைகளோவெனில் ஒவ்வொரு நற்கருணைக் குணங்களால் காட்டப்படுமென்பது நிச்சயந் தானே. அதெப்படியென்றால் பல கோதும்பை அரிசி அரைபட மாவாகி ஒன்று படத் தண்ணீரால் சேர்த்து அப் பமாகும் என்றதினால், அப்பத்தின் குணங்கள் தனியேயா னாலும் நம்மோடேயுங் கிறீஸ்து வினோடேயும் ஒன்றுபட நற்கருணையினால் நமக்கு வரும் ஞானப் புணர்ச்சியைக் காட்ட நல்லதல்லோ. பின்னையும் இதில் ஞான போசன மும் ஞான திருப்தியுமாகையால் வேத வசன முறையால் உண்பதுங் குடிப்பதும் ஒன்று தானே. அதனால் ஒன்றைப் பற்றி அதை உண்ணப் பசியும், குடிக்கத் தாகமும் உண் டென்று வேற்றுமையின்றி வேதத்தில் எழுதப்பட்ட தல்லோ .

அப்படியே சேசுநாதர் அர்ச். மத்தேயு சுவிசேஷத் தின் 5-ம் அதிகாரம் 6-ம் வசனத்தில் ஞான நீதியைப்பற் றிப் பசியுந் தாகமுமுள்ளவர் பாக்கியமுடையவர் என்றார். ஆகையால் உண்ணப்படும் நற்கருணை அப்பத்தின் குணங் கள் குறைவில்லாமல் ஞானப் போசனத்தையும் ஞானத் திருப்தியையும் அடை பாளமாகக் காட்ட வல்லதென்று சொல்லக்கடவோம். இதனாலல்லோ சேசுநாதர் அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தின் 6-ம் அதிகாரம் 35 ம் வசனத் தில் தம்மை உயிர் தரும் அப்பம் என்ற பின்பு அந்த அப் பத்தை உண்டு தம்மை அண்டினவர்களுக்குப் பசியுந் தாக மும் இனி வராதென்றார். இதோ இந்த தேவ அப்பம் பசி யையுந் தாகத்தையுந் திருப்தியாய் ஆற்றும் ஞான போசன மாமே.

இதுவுந் தவிரச் சேசுநாதர் தாமே சொன்ன அதிகா ரத்தின் 55-ம் வசனத்தில் என் மாம்ஸத்தை உண்டு, என் இரத்தத்தைக் குடிப்பவன், நித்திய சீவியத்தை அடைவான் என்றார். 59-ம் வசனத்திலோவெனில், இந்த அப்பத்தை உண்பவன் நித்திய சீவியத்தோடு உயிர் வாழ்வான் என்றார். இதோ தன் சரீரத்தைப் புசித்து, தன் இரத்தத்தைக் குடித்து, வரும் பலனெல்லாங் குறையாமல் இந்த தேவ அப்பத்தைப் புசித்தமாத்திரத்தில் வருமென்பது நிச்சயந் தானே. ஆகையால் அப்பத்தின் குணங்களில் மாத்திரம் நற்கருணைக் கொண்டாலும், குறையில்லாமல் முழுத் தேவத் திரவிய அநுமானங் கொள்ளப்படுமென்பது தேவ சத்திய மாமே. இதனால் சேசுநாதர் இருவகையில் நற்கருணைக் கொள்ளக் கட்டளையிடாமல் விலக்கவில்லை என்றதினால், அப்போஸ்தலர் நாளில் முதலாய்த் திருச்சபையில் நற்க ருணை அப்பத்தோடு பாத்திரத்தையும், பாத்திரமின்றி அப்பத்தை மாத்திரமும் வேற்றுமையில்லாமல் வாங்கிக் கொண்டு வந்தார்கள்.

அர்ச். லூக்கா எழுதின அப்போஸ்தலர் முயற்சியில் அக்காலத்துத் திருச்சபையாரைத் தோத்திரஞ் செய்ய 2-ம் அதிகாரம் 42-ம் வசனத்தில் சொன்னதாவது: அந்நாள் கிறீஸ்துவர்கள் அப்போஸ்தலர் உபதேசத்தைக் கேட்கவும் ஒருங்குடன் கூடி அப்பத்தைப் பிட்டு உண்ணவும், செபஞ் செய்து வேண்டிக்கொள்ளவும், ஓயாமல் காலக்ஷேபஞ் செய்துகொண்டு வந்தார்கள் என்றார். இங்கே சொல்லப் பட்ட அப்பம் உடலுக்குப் போசனமாகிய வெறும் அப்ப மல்ல. இல்லாவிட்டால் ஓயாமல் சோற்றை புசித்துக் கொண்டிருந்தார்கள் என்றது அந்நாள் கிறீஸ்துவர்களுக் குத் தோத்திரமாகுமோவென்ன?

பின்னையும் அப்போஸ்தலர் சொன்ன பிரசங்கங்களைக் கேட்பதுஞ் செபஞ் செய்வதும் இவ்விரண்டும் ஞான உத் தியோகங்களாகையால் அவைகள் நடுவே அநுதினம் விடா மல் அப்பத்தை உட்கொண்டார்கள் என்றது கூட்டினதினால் இதுவும் உயிருக்கு ஞானப் போசனமாகிய நற்கருணை அப்பத்தைப் பிட்டுப் புசித்தார்கள் என்று கண்டுகொள்ளக் கடவோம். ஆகையால் அப்பத்தைச் சொல்லிப் பாத்திரத் தைச் சொல்லாமையால் அந்நாள் கிறீஸ்துவர்கள் சில முறை பாத்திரத்தையுங் கூடக் கொண்டாலுந் தப்பாமல் அநு தினம் இந்த ஞான அப்பத்தைப் பாத்திரமில்லாமலுங் கொண்டார்களென்று சொல்லக்கடவோம்.

ஆகையால் அப்போஸ்தலர் தாமே சேசுநாதர் கட்ட ளையை மீறினார்களென்றுஞ் சனங்களுக்கு முழு நற்கருணை யைக் கொடாமல் பாதியைக் கொடுத்தார்களென்றுஞ் சொல் லக் கூடாமையால் பாத்திரத்தையும் எல்லாருங் கொள்ளச் சேசுநாதர் கட்டளை இல்லையென்றும், பாத்திரமின்றி அப் பத்தின் குணங்களில் முழு நற்கருணை கொடுக்கப்படுமென் றும் நிச்சயமாயே. அப்படியே அப்போஸ்தலர் காலத்துக் குப் பிறகு முதல் 500 வருஷங்களில் பதிதருஞ் சொன்ன படித் திருச்சபை வழுவாதிருக்கக்கொள்ள வியாதியாய்க் கிடந்தவர்களுக்கும் வேதத்துக்காகச்சிறைப்பட்டவர்களுக் கும், இரசத்தைக் குடிக்க அரோசிகமுள்ளவர்களுக்கும், பாத்திரமில்லாமல் அப்பத்தின் குணங்களில் மாத்திரம் நற் கருணைக் கொடுத்துக்கொண்டு வந்தார்களென்று பதிதருஞ் சொல்லக்கடவார்கள்.

அப்படியே லுத்தேரானிகளுக்குள்ளே கல்வீஸ்தனும், பிறேத்தோரியனும், பலரும் இந்த விஷயத்தில் தாங்கள் எழுதின புஸ்தகங்களில் ஒத்துக்கொண்டார்கள். இதெல்லாம் இப்படியாகக் கொள்ள, நெடு நாள் வேண்டும் பேர்க ளுக்குப் பாத்திரத்தையுங் கொடுத்த பின்பு, பூவுலகெங்கு மாகிய கிறீஸ்துவர்கள் மிகுதியால் இது எல்லாருக்குங் கூடாததினாலேயும், இதில் பல குறை கலந்ததினாலேயும் எல்லாரும் ஒரு நிலையாய் நின்று, ஒரு முறையாய் நடக்க வும் சேசுநாதர் கட்டளையிடாத முறையால் பாவமும், சங் கைக் கேடும் வராதபடிக்குச் செய்யவும், நியாயத்தின் படியே திருச்சபை சேசுநாதர் சரீரத்தையும் இரத்தத்தையும் ஒரு வகையாக மாத்திரம் எல்லாருங் கொள்ளச் சொல்லி, அப்பத்தைத் தந்து, பாத்திரத்தை விலக்கின தாம். அப்படியே லுத்தேர் முதலாய்ச் சொன்னபடி திருச்சபை துவக்கத்தில் மும்முறை தண்ணீரில் ஞானஸ்நானம் பெறு கிறவனைத் துவைத்து, அமுக்கி ஞானஸ்நானங் கொடுப் பது நடந்த முறையல்லோ; பிறகு ஒரு முறை துவைத்துக் கொண்டு வந்தார்கள்.

கடைசியில் அதனால் பல குறை உண்டாவதைக்கண்டு தலை மேல் கண்ணீரை விட்டுக் கழுவி, ஞானஸ்நானம் இந் நாளில் கொடுக்கப்படுகிறதல்லோ . இந்த முறை லுத்தே ரானிகளும் ஏற்றுக்கொண்டதனால் திருச்சபை வழுவின தென்று சொல்லாதிருந்தார்கள். ஆகையால் ஆண்டவர் கட்டளையில்லாதபோது காலமும் இடமும் அறிந்து, தேவத்திரவிய அநுமானங்களைக் கொடுக்கிறதில் பலமுறை களை ஸ்தாபிக்கவும் மாற்றவுந் திருச்சபை வல்லது தானே. ஆகையால் இருவகைக் குணங்களில் நற்கருணைக் கொள் ளச் சேசுநாதர் கட்டளையில்லாமையால், முந்தித் திருச் சபை கொடுத்த பாத்திரத்தை இப்போது கொடாதாயி னும், இதனால் திருச்சபை வழுவிக் கெட்டதென்று சொல்ல நியாயமில்லை.