தேவநற்கருணை விளக்கம். 1

99. நற்கருணையாகிய தேவத்திரவிய அநுமானம் உண்டென்று இந்நாட் பதிதரும் ஒருப்பட எல்லாருஞ் சொல்லுவது உள்ளது தானே. ஆகிலும் அவனவன் இதில் கலந்த பொய்களைப் பார்க்குமளவில், மனிதர் உயிர்களைப் பிழைப்பிக்கச் சேசுநாதர் தந்த தேவாமிர்தமே உயிர்களைக் கெடுக்கப் பாலோடு கலந்து ஊட்டின நஞ்சாகச் செய்தார்க ளென்பதற்குச் சந்தேகமில்லை. நாமோவெனில் பசாசு தந்திரத்தால் கலந்த நஞ்சினை நீக்கித் திவ்விய சுனையாகிய சேசுநாதர் திருக்கையில் ஒழுகின தன்மையால் உயிர் தருந் தேவாமிர்தத்தைக் கலப்பின்றி எல்லாரும் உட்கொள்ளும் படிக்குப் பதிதர் இதில் கலந்த பொய்களை மறுத்து உரோமான் திருச்சபை இந்த விஷயத்தில் விசுவசிக்கப்படிப்பிக்கும் ஐந்து சத்தியங்களை வெவ்வேறே வெளிப்படுத்தித் தருவோம்.

அவைகளின் முதலாவது. நற்கருணையில் மெய்யாகவே சேசுநாதர் சரீரமும், இரத்தமும் உண்டென்றும், 2-வது இதில் நிறம் முதல் அப்பத்தின் குணங்களும், இரசத்தின் குணங்களுமொழிய அப்பமும் இரசமுங் கூட நிற்பதில்லையென்றும். 3-வது. நற்கருணை உட்கொள்ளும்போது இருக் கிற சேசுநாதர் அதற்கு முன்னும் பின்னும் அக்குணங்கள் அழியு மட்டும் நிற்குமென்றும், 4 வது. ஒவ்வொருவகைக் குணங்களுக்குள்ளே சேசுநாதர் முழுதும் இருக்கிறார் என் றதினால், பாத்திரத்தைக் கொள்ளாமல், அப்பத்தின் குணங் களை மாத்திரங் கொண்டவனும் முழு நற்கருணைக் கொள் வானென்றும், 5-வது. நற்கருணை தேவத்திரவிய அநுமான மாக ஸ்தாபிக்கப்பட்ட தொழிய மெய்யான பூசையுமாக அதனைச் சேசுநாதர் உண்டாக்கினாரென்றும், இவ்வைந்தும் விசுவசிக்கத்தகும் வேத சத்தியங்கள்தானே.

இவைகளில் தேவத்திரலிய அநுமானமாக நற்கருணைக் கடுத்த முதல் நான்கு இங்கே வெளிப்படுத்தி, வரும் அதி காரத்தில் தேவ பூசையாகத் திவ்விய நற்கருணைக் கடுத்த ஐந்தாஞ் சத்தியத்தை ஒப்பிக்கக்கடவோம். ஆகையால் சுவிங்கிலியனும், கல்வீனும் இவர்களைச் சேர்ந்த பதிதரும் நற்கருணையில் சேசுநாதர் மெய்யாகவே வந்திருக்கிறா சென்று விசுவசியாமல் அவரைக் காட்டும் அடையாளமும், உவமையுமாக மாத்திரம் நற்கருணை ஸ்தாபிக்கப்பட்டதென் றார்கள். ஆகிலுந் தெளிவாய் வேதத்தில் எழுதப்படாததை விசுவசிக்கலாகாதென்ற பதிதர், இந்த அபத்தம் வேதத்தில் எழுதப்பட்டது எங்கேயென்று தாங்களே காட்டக்கடவார் கள். நாமோவெனில், நற்கருணையில் சேசுநாதர் சரீரமும், இரத்தமும் மெய்யாகவே இருக்கிறதென்று வேத உதார ணங்களினால் சந்தேகத்துக்கு இடமில்லாமல் எளிதாய் ஒப்பிக்கலாமே.

அதெப்படி என்றால் அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தின் 6-ம் அதிகாரம் 48-ம் வசனத்தில் இனி ஸ்தாபிக்கப் போகிற நற்கருணையைக் குறித்துச் சேசுநாதர் சொன்ன தாவது : உயிர் தரும் அப்பம் நாமே. கானகவழியில் உங் கள் முன்னோர் மன்னாவென்னும் அற்புதப் போசனத்தைப் புசித்தாலும் செத்தார்கள் அல்லவோ? இந்த அப்பம் பர லோகத்தினின்று வந்ததாகையால், இதனை உண்பவன் என் றுஞ் சாகான். நாம் தரும் அப்பம் எதுவெனில், உலகிற்கு உயிராகும் என் மாம்ஸந்தானே என்றார். இதனைக் கேட்ட சிலர் அதில் தானே 5-ம் வசனத்தில் சொன்னதாவது: இவர் தம் மாம்ஸத்தை எங்களுக்கு உணவாக எப்படிக் கொடுப்பாரோவென்று தங்களுக்குள்ளே தர்க்கமாக யோசி த்து, மிகுந்த அருவருப்போடு அதிசயித்துச் சொன்னார்களாமே.

ஆகையால் சேசுநாதர் தாம் மெய்யாகவே தம் சரீரத் தைப் போசனமாகக் கொடுக்க வேண்டுமென்றதாக நினைத் தார்களல்லோ? இல்லாவிட்டால் சரீரத்தின் அடையாள மாக வெறும் அப்பத்தைக் கொடுக்க அந்த வார்த்தை சொன்னாரென்று நினைத்தார்களாகில் அருவருப்பு வருவா னேன், அதிசயப்படுவானேன்? சேசுநாதரோவெனில் அவர் கள் நினைத்ததை அறிந்து தப்பிதமாய் நினைத்தீர்களென்று சொல்லாமல் அவர்கள் நினைவு மெய்யென்று ஒத்துக் கொண்டு, மீளவும் ஆணையிட்டு என் மாமஸத்தையும் உண்ணாமல், இரத்தத்தையுங் குடியாமல் பிழைக்கமாட்டீர்க ளென்று மெய்யாகவே சொல்லுகிறேனென்நார் . இதெல் லாந் திருவுளம் பற்றின பின்பு, குறித்த நாள் வந்து சேசு நாதர் இது என் சரீரம் , இது என் இரத்தம் இவைகளை வாங்கி உட்கொள்ளுங்களென்று சொல்லி மெய்யான சரீ ரத்தையும், இரத்தத்தையுங் கொடாதபடிக்கு அவைகளின் அடையாளங்களை மாத்திரந் தந்தாரென்று ஒருவன் சொன் னால் எல்லாரையும் படிப்பிக்கவந்த கர்த்தர் அவர்களை ஏய்த்து மயக்குவித்தாரென்று சொல்லவுங்கடவான்.

நான் விளையாட்டில்லாமல் ஒருவனுக்கு ஒரு குதிரை யைத் தருவேனென்றதற்கு அவன் சந்தேகப்படக் கண்டு, நான் ஆணையிட்டு மெய்யாகவே உனக்குக் குதிரையைத் தருவேனென்ற பின்பு படத்தின் மேல் எழுதப்பட்ட குதிரை உருவத்தை மாத்திரந் தந்தால், அவன் தன்னை ஏய்த்த கள்ளனென்று என்னை நிந்திப்பதற்கு நியாய மலலோ? ஆகையால் அளவில்லாத தயை நீதி ஞானமுள்ள சேசுநாதரும் ஆணை யிட்டு, மெய்யாகவே என் சரீரத்தைப் போசனமாகத் தருவேனென்ற பின்பு மெய்யான சரீரத் தைக் கொடாமல், சரீரத்தின் உருவமாக வெறும் அப்பத் தைத் தந்து நம்மை ஏய்த்தாரென்று மதியீனன் சொல்லு வானொழிய வேறொருவன் சொல்லவுங் கருதவுமாட்டான்.

மீளவுங் கொரிந்தியாருக்கு எழுதின முதல் நிருபத் தின் 10-ம் அதிகாரம் 3-ம் வசனத்தில் அர்ச். சின்னப்பர் சொன்னபடி. யூதா கானக வழியில் உண்ட மன்னா சேசுநா தருடைய அடையாளமாய் இருந்த கல்லோ? ஆகையால், நற்கருணையும் இப்படிப்பட்ட அடையாளமாத்திரமென் றால் அதற்கும் இதற்கும் வேற்றுமை என்ன? அதிலும் இது நல்லதென்பானேன்? அதனை உண்டவர் செத்தார்க ளென்றும், இதனை உண்பவர் சாகாரென்றுஞ் சேசுநாதர் சொல்லுவானேன்?

இதுவுந் தவிர அர்ச். மத்தேயு சுவிசேஷத்தின் 26-ம் அதிகாரம் 26-ம் வசனத்திலும், அர்ச். மாற்கு சுவிசேஷத் தின் 14- ம் அதிகாரம் 22-ம் வசனத்திலும், அர்ச். லூக்கா சுவிசேஷம் 22-ம் அதிகாரம் 19. ம் வசனத்திலும், அர்ச். சின்னப்பர் கொரிந்தியாருக்கு எழுதின முதல் நிருபத்தின் 11-ம் அதிகாரம் 24-ம் வசனத்திலும் இந்நான்கு விடத்தில் எங்கும் ஒரு வசனமாக இது என் சரீரம், இது என் இரத் தமென்று சேசுநாதர் சொல்லி நற்கருணை உண்டாக்கினதாக எழுதியிருக்க, இதனை முகத்தில் வெளியாய்த் தோன் றும் அர்த்தத்தின்படியே கொள்ளாமல் உவமையாகச் சொல்லப்பட்டதென்று சொல்வானேன்?
அர்ச். மத்தேயு சுவிசேஷத்தின் 17-ம் அதிகாரம் 5-ம் வசனத்தில் பிதாவாகிய சர்வேசுரன் சேசுநாதரை நோக்கி: இவர் என் குமாரனென்றார். இதனை உவமையாகக் கொண்டு சேசுநாதர் சர்வேசுரனுக்கு மெய்யான குமாரனாகாமல் அவ ருடைய உருவமாத்திரமென்றால் பதிதருங் கோபித்து, வேத வசனங்களை உள்ளபடித் திருகாமலும் மாறாமலுங் கொள்ள வேண்டுமென்றும், இவர் என் குமாரனென்று பிதா சொன்னபோது அவர் உருவமாத்திரமென்பது என்னவென்றுஞ் சொல்வார்களல்லோ?

பிதாவாகிய சர்வேசுரன் இவர் என் குமாரனென்று சொன்னபடியே, சேசுநாதரும் இது என் சரீரமென்றார். இந்த இரண்டு வசனங்களில் வேற்றுமை இல்லாமையால் அது உள்ளபடிக்கொண்டு சேசுநாதர் மெய்யான தேவ குமாரனாகக் கொள்ள வேண்டுமென்று சொன்னவர், இரண்டாம் வசனத்தையும் உள்ளபடியே கொண்டு நற்கரு ணையில் அவர் மெய்யான சரீரம் உண்டென்று ஒத்துக் கொள்ளாமலென்ன? அப்பமாக நின்ற பொருள் சேசுநாதர் சரீரமாக நிற்பது கண்டுபிடிக்கப்படாத அற்புதமாகையால் உவமையோடு சொன்ன வசனமாகக் கொள்ள வேண்டு மென்று பதிதர் சொன்னால், அப்படியே மெய்யான மனுஷ னானவன், மெய்யான சர்வேசுரனாக நிற்பது கண்டுபிடிக்கப் படாத இரகசியந்தானல்லோ?

இப்படியாயினும் ஆண்டவருக்குள்ள அளவில்லாத வல்லமையை நாம் அறியத்தகும் அளவின் மேலும் அவர் செய்ய வல்லவரென்று நிச்சயித்து, மனுஷாவதாரஞ் செய்த வகையைக் கண்டுபிடியாமல், அதனை விசுவசித்தது போல, நற்கருணையின் பரம இரகசியத்தையும் விசுவாசியாமலென்ன? உச்சிப் பகலினும் நன்றாக விளங்கின இந்த நியாயங்களைப் பற்றி மற்றப் பதிதரும் முதலாய்க் கல்வீனியானிகள் சொன்னதை நகைத்து மெய்யாகவே சேசுநாதர் நற்கருணையில் எழுந்தருளி இருக்கிறாரென்று கத்தோலிக்கு உரோமான் திருச்சபையோடு சொல்லுகிறார்கள்.
100.- கல்வீனியானிகளெல்லாரும் இப்போது அது சரிக்கும் இந்த அபத்தத்தை லுத்தேர் காலத்தில் இவன் சீஷனாகிய கார்லோஸ்தாதென்பவன் முந்திச் சொல்லத் துவக்கினான். உரோமாபுரி இராயருக்குப் பயந்து லுத்தேர் ஒளிந்திருக்கும் போது இவன் அங்கங்கே திரிந்து, நற்க ருணை சேசுநாதர் அடையாளமா வதொழிய மெய்யாகவே அதில் அவர் சரீரம் இல்லையென்று படிப்பித்துக்கொண்டு வந்தான். தன்னை அல்லாமல் திருச்சபையில் புது விதிகளைப் படிப்பிப்பார் உண்டென்று லுத்தேர் பொறுக்கமாட்டா மல் புறப்பட்டுக் கார்லோஸ்தாதிருந்த ஊருக்குப் போய் பொதுப் பிரசங்கமாக அவன் சொன்ன அபத்தத்தை மறுத் ததன்றி, அவனையும் மட்டொன்றின்றி நிந்தையாக வைது கண்டித்த பின்பு லுத்தேர் கருங் கரடி விருதை ஏற்றிய விடுதி வீட்டுக்குப் போனான்.

கார்லோஸ்தாதென்பவனும் அங்கே போய்த் தங்க ளுக்குள்ளே வெகு பேச்சு நடந்தபின்பு, லுத்தேர் ஒரு பெரிய தங்கக் காசெடுத்து முன்னே வைத்து நான் சொன் னதை மறுக்க நீ ஒரு புஸ்தகம் எழுதுவாயென்று வார்த் தைப்பாடு கொடுப்பாயாகில் உனக்கு இதைக் கொடுக்கி றேனென்றான். அவனும் அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு அப்படியே எழுதுவேனென்றான். அப்போது லுத்தேர் சாராயத்தை நிறப்பின ஒரு பெரும் பாத்திரத்தை ஏந்தி, நீ எழுதுவது நன்றாகவென்று நகைத்துக் குடித் தான். அவனுங் குறை வையாமல் குடித்துத் தேவநற்கரு ணையில் சேசுநாதர் சரீரம் உண்டோ இல்லையோவென்கிற பரம தேவ இரகசியத்தை வெளிப்படுத்த இந்த உச்சித முறையோடு இருவரும் 1524-ம் ஆண்டு ஆவணி மாதம் 22-ந் தேதியில் துணிந்தார்கள்.

அதன்பிறகு லுத்தேர் அவனை நோக்கி: நீ செத்துத் தெருவில் கிடக்க நான் காணக் கடவதென்று அவனை அனுப்ப, அவனும் நீ இந்த ஊரை விட்டு அகலாமுன்னே உன் கழுத்தொடியக் கடவதென்று போனான். இப்படியே வேற்றுமையின்றி லுத்தேர் பிரபந்தங்களின் 2-ம் வகுப்பி லேயும், பல லுத்தேரானிகள் எழுதின புஸ்தகங்களிலேயும் எழுதப்பட்டதாமே. இந்த வர்த்தமானத்தை வாசிக்கும் போது வழுவின திருச்சபையை நெறியில் நிறுத்தவும், கெட்ட உலகம் இரட்சிக்கப்படவும், ஆண்டவரால் அனுப் பப்பட்ட இரண்டு அப்போஸ்தலருக்கு ஏற்ற முறை இதென்பதும், சேசுநாதர் மந்தை ஆடுகளைக் கொன்று விழுங்கக் கருங் கரடி விருதேந்தி இரண்டு ஓநாய்கள் துணிந்த முறை இதென்பதும், முழு மதி கெடாதவனாகில் தானே கண்பானல்லவோ?

101.- சொன்னபடியே கார்லோஸ்தாதென்பவன் மேல் லுத்தேர் வைத்த பகையால் நற்கருணையில் மெய்யா கவே சேசுநாதர் சரீரம் உண்டென்று ஒப்பிக்கத் துணிந் தாலும், உரோமான் திருச்சபைமேல் அவன் வைத்த பகை அதிலேயும் பெரிதாகையால், அந்தச் சத்தியத்தை மறுக்க லுத்தேர் மிகவும் ஆசையாயிருந்தான். அப்படியே ஏழாம் புஸ்தகத்தின் 501-ம் ஏட்டில் அவன் அற்சேந்தினாருக்கு எழுதின தாவது : நற்கருணையில் மெய்யாகவே சேசுநாதர் சரீரமும், இரத்தமும் இல்லையென்பதற்கு யாதொரு வழியை எனக்குச் சொல்லித் தந்தால் மிகவுஞ் சந்தோஷந்தானே; இதுவே நான் நியமித்தபடி உரோமான் திருச்சபையாருக்கு மன நோகச் செய்வதற்கு உத்தம வழியாமே என்றான். இதில் முந்தி லுத்தேருடைய கருத்தைப் பார்க்கக் கடவீர்கள்.

இதோ மனிதரை ஏய்க்க , வழுவின திருச்சபையைத் தானே நெறியில் நிறுத்தத் துணிந்ததென்று சொல்லி உரோமன் திருச்சபை மேலும், அர்ச். பாப்பு மேலுந் தான் வைத்த பழி, பகை தீர்ப்பதே அவன் நியமித்த கருத் தென்று தான் எழுதின வசனத்தினால் தெரியப்பட்டதல்லோ. இந்த வர்மத்தினாலல்லோ சேசுநாதர் மறைவின் றித் திருவுளம் பற்றினதைப் பார்க்கில், நற்கருணையில் அவர் சரீரமும் இரத்தமும் இல்லை யென்று சொல்லக் கூடாதென்று பின்பு லுத்தேர் தானே உரோமான் திருச் சபையோடு முழுதும் கூடாதபடிக்கு இதில் பல விகற்பங் களை நினைத்தான். நிறம் முதல் அப்பத்தின் குணங்களொ ழிய அப்பத்தின் சுபாவம் இல்லாமற் போய்ச் சேசுநாதர் மாத்திரமே நற்கருணையில் இருக்கிறாரென்று சத்தியமாக உரோமன் திருச்சபை விசுவசித்ததினால் அதற்கு லுத்தேர் விகற்பஞ் சொல்ல அப்பங்கூட நிற்பதென்றான்.

இதிலேயும் எப்போதும் போல ஒரு நிலையாய் நிற்க மாட்டாமல் துவக்கத்தில் பபிலோன் அடிமைத்தனமென் னும் புஸ்தகத்தில் நற்கருணை அதிகாரத்தில் சொன்னதா வது: அப்பங்கூட நிற்குமென்றாலும் இல்லையென்றாலும் பாரமல்ல, வேண்டும்படிச் சொல்வதற்கு உத்தாரங் கொடுக்கி றேனென்றான். இது ஏது? முழுதும் மதி கெட்டாயோ லுத்தேரே ! உண்டு, இல்லை யென்று இரண்டில் ஒன்று பொய்யல்லோ P ஆகையால் இந்தப் பரம தேவ இரகசியத் தில் பொய்யை அநுசரிப்பது பாரமல்லவென்றோ நீ இதில் அப்பம் உண்டெனினும் இல்லையெனினும் பாரமல்லவென் றாய். மீளவும் உண்டு இல்லையென்று வேண்டும்படிச் சொல்ல நீயே உத்தாரங் கொடுக்கும்போது, பரம தேவரக சியங்களில் பொய்யைச் சொல்ல நீயே உத்தாரங் கொடுக் கத் துணிந்தாயல்லோ. இப்படியே மதி கெட்டவனாக லுத் தேர் சொன்னபின்பு தானே 1523-ம் ஆண்டில் வால்தெஞ் சியாருக்கு எழுதின புஸ்தகத்தில் சொன்னதாவது:

நற்கருணையில் அப்பம் இல்லையென்பது தப்பிதமாயி னும், அது கன அபத்தமல்லவென்று இன்றையவரைக்கும் நான் எண்ணினது சரிதானே. ஆகிலும் இப்போது பாப் பிஸ்தராகிய உரோமான் திருச்சபையாருக்கு விரோதமாக அப்பமும், இரசமுங் கூட நிற்குமென்று விசுவசிக்கத் துணிந்தேனென்றான். ஆகையால் பரம தேவரகசியங்களில் அற்ப அபத்தங்களைச் சொல்வதற்கு உத்தாரங் கொடுக்க லுத்தேர் வல்லவனாகக் கொள்ள நற்கருணையில் அப்பம் இல்லையென்பது கன அபத்தமல்லவென்று எண்ணினதி னால் அதனைச் சொல்ல முன் தானே உத்தாரங்கொடுத்தான். ஆகிலும் தன் பகையை மறுக்கத் தான் வல்லவனல்ல.

ஆகையால் வேதத்தில் எப்படி எழுதப்பட்டிருந்தா லும் அதனைப் பாராமல் பகைத்த உரோமான் திருச் சபைக்கு விரோதமாகில், அதுவே விசுவசிக்கத்தகுஞ் சத் தியமாமே. அதெப்படியென்றால், நற்கருணையில் அப்பம் இல்லையெனினும் உண்டெனினும் பாரமல்ல வென்றவன், பின்பு அதில் அப்பம் இல்லையென்று சொல்லாமல் உண் டென்று சொல்லுவது விசுவசிக்கத்தகுஞ் சத்தியமென்ப தற்கு நவமாய்க் கண்ட நியாயம் ஏதென்று லுத்தேமென் பவனைக் கேட்கில், இது வேதத்தில் எழுதப்பட்டதினாலே யும் அல்ல; இதற்கு மறுக்கப்படாத நியாயங்களைக் கண்ட தினாலேயும் அல்ல; அப்பங் கூட உண்டென்றால் உரோ மான் திருச்சபைக்கு விரோதமாகுமென்றதினால் மாத்திரம் அதனை வேத சத்தியமாக விசுவசிக்கத் துணிந்தேன் என்றான்.

இதோ முன் சொன்னபடி லுத்தேர் விசுவாசத்தின் அஸ்திவாரமெல்லாந் தன் பகைதானே. இதன் பின்பு இன் னம் அவன் பிதற்றினதை ஒத்துக்கொள்வார் உண்டோ ? வழுவின திருச்சபையை நெறியில் நிறுத்த அவனே ஆண் டவரால் அனுப்பப்பட்டவனென்று நினைப்பார் உண்டோ ? ஆகையால் லுத்தேர் தன் பகையைக் கண் காட்டியாகக் கொண்டு சொல்லுந் தன்மையாவது : நற்கருணையில் சேசு நாதர் சரீரம் அப்பத்திலேயாகிலும் , அப்பத்தோடேயாகிலும் , அப்பத்தின் கீழாகிலும் இருக்கிறதென்று சொல்லக் கடவோமென்றான். இதோ குருடனுக்குக் கை தந்த குருடன் தடவிச் சொல்லும் அபத்தம்.

இப்படியே மற்ற லுத்தேரானிகளும். இப்படியே தரங்கம்பாடிப் பதிதரும் அச்சுப் பதித்த வேத சாஸ்திரத்தின் 2-ம் வகுப்பு 14-ம் அதிகாரம் முதல் சல்லாபத்தில் தெளி வாய் வைத்தார்கள். ஆகிலும் சேசுநாதர் கையில் அப் பத்தை எந்தித் திருவுளம் பற்றின வார்த்தையின் வல்லமை யால் அப்பம் இல்லாமற்போனது பொய்யாகி, அதிலேயா கிலும் அத்தோடாகிலும் அதன் கீழாகிலும் அவர் சரீரம் இருந்தால் இங்கே என் சரீரம் உண்டென்று அவர் சொல் லவேண்டியதல்லோ . அப்படிச் சொல்லாமல் இது என் சரீரமென்று சொன்னது பொய்யாகுமே. அப்படி ஒருவன் கையில் ஏந்திய கல்லிலேயும், கல்லோடேயும், கல்லின் கீழேயும் சர்வேசுரன் இருக்கிறாரென்பது நிச்சயமாமே. நிச்சயமாயினும் ஏந்தின கல்லை நோக்கி : இதுதான் சர்வே சுரனென்றால் பொய்யாகுமல்லோ?

ஆகையால் இது என் சரீரமென்று சேசுநாதர் சொன் னதினால் பொய் சொல்லமாட்டாதவராகக் கொள்ள அதில் அப்பம் இராமல் அவர் சரீரமே இருக்கிறதென்று சொல் லக்கடவோம். மீளவும் இது என் சரீரமென்றதை கல்வீன் உவமையாகக்கொண்டு, இது என் சரீரத்தின் அடையாளம் என்றதாக அர்த்தததைக கொண்டதினால், அவனை லுத்தேர் முதலாய்க் கோபித்து, வேத வசனங்கள் முகத்திற் காட் டின சுபாவ அர்த்தத்தோடு அவைகளைக் கொள்ள வேண்டு மொழிய, மணலைக் கயிறாகத் திரிக்கிறவனைப் போலச் சுபாவ அர்த்தத்தை முறுக்கி மாற்றி மனதின்படியே கொள்ளலா காதென்று, பின்பு லுததேர் தானும் இது என் சரீரமென் றது சுபாவமாய்க் கொள்ளாமல் இதில் என் சரீரமென்றும், இங்கே என் சரீரமென்றுஞ் சொன்னதாக அர்த்தத்தைத் திருப்பி, இந்த அபத்தங்களைச் சொல்லுவானேன்? பதித ருள் ஒருவன் சுவிங்கிலியுஸென்பவன் முதலாய் எழுதினதாவது:

இது என் சரீரமென்று கர்த்தர் சொன்ன வசனத் தைச் சுபாவ அர்த்தத்தோடு கொள்ளவேண்டுமாகில் அப் பத்தின் சுபாவம் இல்லாமற் போய்ச் சேசுநாதர் சரீரமாக வேண்டியது தானே. ஆகையால் அப்பமாக நின்ற பொருள் அந்த வார்த்தைக்குப் பிறகு அப்பம் அல்லவென்றான். அப் படியே சலஞ் சாதியாமல் மெய்யறியும் ஆசையால் சேசு நாதர் திருவுளம்பற்றின வசனத்தைக் காட்டும் அர்த்தத் தைக் கொள்ளவேண்டுமாகில், அவர் தம் கையில் அப் பத்தை ஏந்தி இது என் சரீரமென்ற போது, இது முந்தி அப்பமாகி இப்போது என் சரீரமாச்சுதென்றதாகக் கொண்டு சொன்ன வார்த்தையின் வல்லமையால் அப்பம் இல்லாமற் போய், நற்கருணையில் சேசுநாதர் திரு சரீரமும், திரு இரத்தமும் அல்லாமல் அப்பமும், இரசமும் இல்லை யென்பது நியாயந்தானே. இதுவே உரோமான் திருச்ச பையின் விசுவாசம்.

102 - இதுவுந்தவிர லுத்தேரானிகள் சொல்லும் அபத்தமாவது: நற்கருணையில் மெய்யாகவே சேசுநாதர் சரீரமும், இரத்தமும் இருந்தாலும் அவைகளை அவனவன் உட்கொள்ளும்போது இருக்கிறதொழிய மற்ற நேரம் வெறும் அப்பமும், வெறும் இரசமும் நிற்குமென்றார்கள். ஆகிலுஞ் சேசுநாதர் தமது கையில் அப்பமும், இரசத்தின் பாத்திரமும் இருக்கும் போதல்லோ இது என் சரீரமென் றும், இது என் இரத்தமென்றுந் திருவுளம்பற்றினார். ஆகை யால் ஒன்றில் சேசுநாதர் சொன்னது பொய்யாக வேண்டும்; ஒன்றில் அப்போஸ்தலர் நற்கருணை உட்கொள்ளா முன் னும் அப்பத்தின் குணங்களுக்குள்ளே அவர் சரீரமும், இரசத்தின் குணங்களுக்குள்ளே அவர் இரத்தமும் இருந்த தென்று சொல்லக்கடவோம்.

ஆகிலுஞ் சேசுநாதர் சொன்னது பொய்யென்று மதி கெட்டவனுஞ் சொல்லான். ஆகையால் லுத்தேரானிகள் சொன்னது பொய்யாமே. இது மிகவுந் தெளியும்படிக்குக் குருக்கள் அநுதினம் இது என் சரீரமென்றும், இது என் இரத்தமென்றுஞ் சொல்லும் போது அந்த வார்த்தைக்குச் சேசுநாதர் ஸ்தாபித்துக் கட்டளையிட்ட வல்லமையினால் நற்கருணை ஆகுமென்று பதிதருஞ் சொல்லுகிறார்கள் அல்லோ? இந்த வார்த்தையைச் சொன்ன பிற்பாடு சனங்களுக்கு நற்கருணையைப் பகிர்ந்து கொடுக்குமளவில், பல முறை அறுநூறு எண்ணூறு பேர்களாகக்கொள்ள நாலு ஐந்து நாழிகை செல்லுமல்லோ? ஒவ்வொருவன் அதை வாங்குகிறபோது வேறே வார்த்தை சொல்லாமலும் வெவ் வேறே நற்கருணை ஆகுமென்று தூங்கினவனுங் கூசாமல் சொல்லமாட்டான்.

ஆகையால் ஒருமுறை ஒருமிக்க எல்லாருக்கும் உண் டாக்கப்பட்ட நற்கருணையைக் கொடுத்துக்கொண்டு வருகை யில், நாலு ஐந்து நாழிகைக்குப் பிறகு கடைசியில் நின்ற வன் அதை உட்கொள்ளுமட்டும் அதில் சேசுநாதர் இருக் கிறாரென்று சொல்லக்கடவோம். நாலு ஐந்து நாழிகை நின்றபடி, நாலு ஐந்து நாள் நிற்குமென்றால் குறைவென்ன? அதற்குப் பதிதர் அப்படி நிற்குமென்று வேத்த்தில் எழு தப்படவில்லை யென்றார்கள். ஆகிலும் அவர்கள் சொன்னாப் போல நில்லாதென்று வேதத்தில் எழுதப்படவுமில்லையே. மீளவும் ஒரு முறை சேசுநாதர் இது என் சரீரமென்ற பின்பு , தாமே இனி இது என் சரீரம் அல்லவென்று சொல் லுந்தனையும் நற்கருணையில் அவர் சரீரம் நிற்குமென்பது வேதத்திற் கொத்த நியாயமல்லோ

ஆகையால் உரோமான் திருச்சபை படிப்பிக்குந் தன் மையாவது: சேசுநாதரிடமாகக் குருக்கள் இது என் சரீரம், இது என் இரத்தம் என்றவுடனே அப்பமும் இரசமும் இல் லாமற் போய், நிறமுதல் பல குணங்கள் மாத்திரம் நின்று, அவைகளுக்குள்ளே சேசுநாதர் சரீரமும், இரத்தமும் எழுந்தருளி அந்தக் குணங்கள் அழியுந்தனையும் விடாமல் நிற்குமென்று படிப்பிக்குஞ் சத்தியமாமே. இந்தச் சத்தி யமோவெனில் வேதத்தில் ஊன்றிய சத்தியந்தானே. அதெப்படி யென்றால், அப்பம் இரசமென்று இவ்விரு வகைக் குணங்களுக்குள்ளே மாத்திரஞ் சேசுநாதர் எழுந் தருளியிருக்க ஸ்தாபித்தாரென்று வேத வசனங்களால் அறி வோம். ஆகையால் அந்தக் குணங்கள் அழியாதிருக்குந் தனையும், தாமும் அதில் இருக்கிறாரென்றும், அவைகள் அழிந்தவுடனே தாமும் அதில் இல்லையென்றுஞ் சொல்லு வது நியாயமாமே.