பூசை விளக்கம். 2

110.- மீளவும் நற்கருணை உண்டாக்கினபோது சேசுநாதர் திருவுளம் பற்றின வார்த்தையும் ஆராய்ந்து பார்க்கில், இதில் சந்தேகப்படவுந் தேவையில்லை. அதெப்படியென்றால், அர்ச். லூக்கா சுவிசேஷத்தின் 22-ம் அதிகாரம் 19-ம் வசனத்தில் சேசுநாதர் இது என் சரீரமென்று மாத்திரஞ் சொல்லாமல், இது உங்களுக்காக இப்போது கொடுக்கப்படும் என் சரீரமென்றார். அந்த இப்போதென்கிற சொல் வேதத்திலில்லை. ஆகிலும் வேதத்தில் எழுதப்பட்ட சொல், நிகழ்காலத்துக்கு மாத்திரம் உரியதாய்ச் செல்லுமென்றமையால் கொடுக்கப்படுமென்ற சொல், தமிழ்மொழி வகையால் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் வேற்றுமையின்றிச் செல்லுமென்று நாம் அதை வேதத்தில் உள்ளபடி நிகழ்காலத்துக்குச் சொன்னதாகக் காட்ட இப்போதென்னுஞ் சொல்லைக்கூட்டி வைத்தோம்.

இதிப்படியிருக்கக்கொள்ள, அன்றுதானே தேவநற்கருணை சீஷர்களுக்கு ஞான போசனமாகக் கொடுக்கப்பட்டதன்றி, அவர்களுக்காகத் தேவ பலியாய்ப் பிதாவுக்குப் படைக்கப்பட்டதென்று சொல்லக்கடவோம். அதெப்படியென்றால், அன்று நற்கருணையில் சேசுநாதர் தமது சரீரத்தைத் தேவ போசனமாக மாத்திரங் கொடுத்தாராகில், உங்களுக்குப் கொடுக்கப்படுஞ் சரீரம் என்பாரொழிய, உங்களுக்காகக் கொடுக்கப்படுஞ் சரீரமென்று கொடிய வசனமாய்ச் சொல்லமாட்டாரல்லோ? மீளவும் அதற்குப் பிறகு சிலுவைப் பூசையில் அவர்களுக்காகச் சேசுநாதருடைய திருச் சரீரந் தேவபலியாகக் கொடுக்கப்படுவது சரிதானென்று ஒப்புக்கொள்ள வேண்டியது தானே.

ஆகிலும் அது சேசுநாதர் அந்த வார்த்தை சொன்ன தற்கு மறுநாளாக வேண்டிய கருமமென்றதினால், சிலுவைப் பூசையைக் குறித்து யோசிக்கில் இனி உங்களுக்காகக் கொடுக்கப்படும் என் சரீரம் இது என்பாரொழிய இப் போது சிலுவைப் பூசையில் உங்களுக்காகக் கொடுக்கப்ப டுஞ் சரீரமென்பது பொய்யாகக் கொள்ளச் சிலுவை பூசை யைப்பற்றி அந்த வார்த்தையை அவர் சொன்னவர் அல்ல. ஆகையால், சேசுநாதர் சொன்ன வார்த்தையை உரிய அர்த் தத்தோடு கொள்ளும்படிக்கு இரத்தஞ் சிந்தாமல் நற்கரு ணைப் பூசைவகையால் உங்களுக்காகத் தேவ பலியாய்ப் பிதாவுக்கு இப்போது நான் படைத்த என் சரீரம் இதுவே. இதனை உங்களுக்குப் போசனமாக வாங்கி உட்கொள்வீர் களாக என்றாரென்று சொல்லக்கடவோம்.

இப்படி இரசத்தையுந் தந்த முறையால் யோசித்துச் சேசுநாதர் தம்மைச் சீஷர்களுக்குத் தேவத்திரவிய அது மானமாகக் கொடுக்கும் முன்னே தேவ பூசையாகத் தம் மைப் பிதாவுக்கு மெய்யாகவே கொடுத்தாரென்று சொல் லுவது நியாயமாமே. மீளவுந் தாம் செய்ததை அப்போஸ் தலரும், அவர்கள் வழியாக வரும் மற்றக் குருக்களுஞ் செய்யச் சொல்லி என் நினைவாக இப்படியே நீங்களுஞ் செய்யக்கடவீர்களென்று முன் சொன்ன 19-ம் வசனத் தில் தானே சொன்னதினால் அன்று தானே தாம் மெய்யா கவே நற்கருணைப் பூசை செய்ததுந் தவிர, மற்றக் குருக்க ளும் அந்தப் பூசையைச் செய்யக் கட்டளையிட்டாரென்று சொல்லக்கடவோம்.

இந்தக் கட்டளையின்படியே அப்போஸ்தலரும் நற்க ருணைப் பூசை செய்து கொண்டு வந்தார்களென்று அறிவோம். அப்படியே அப்போஸ்தலர் நடபடி ஆகமத்தின் 13-ம் அதிகாரம் 2-ம் வசனத்தில் அர்ச். லூக்கா எழுதின தாவது: அப்போஸ்தலர் ஆண்டவருக்குப் பூசை செய்து, ஒருசந்தி பிடித்துக்கொண்டு வருகையில் நாம் குறித்த உத் தியோகத்துக்குச் சவுலும், பர்னபாவும் மற்றவர்களிற் பிரிப் பீர்களாகவென்று இஸ்பிரீத்து சாந்துவானவர் அவர்களுக்கு அறிவித்தாரென்றார். ஆகிலும், நற்கருணைப் பூசையன்றி திருச்சபையில் வேறு பூசை இல்லையென்று பதிதருஞ் சொல்லுகிறார்கள். ஆகையால் அப்போஸ்தலர் நற்கருணைப் பூசை செய்து கொண்டு வந்தார்களென்று வேத உதாரணங் களால் அறிவோம். தரங்கம்பாடியார் இதில் அப்போஸ் தலர் பூசை செய்தார்களென்று எழுதாமல், ஆண்டவருக்கு ஆராதனை செய்தார்களென்று தமிழாகத் திருப்பினார்கள்.

ஆகிலும் அர்ச். லூக்காவென்பவர் அந்த ஆகமத்தை கிறேக் பாஷையில் எழுதி இதில் லித்துற்செயோ வென் னுஞ் சொல்லை வைத்தார். அந்தச் சொல்லோ வெனில், தேவகாரியங்களில் வைக்கப்படும் போது மெய்யான பூசை யைச் செய்வதென்கிற அர்த்தத்தைக்கொண்டது நிச்சயந் தானே. அப்படியே தனக்குக் கேடாக லுத்தேரோடு மிக வுஞ் சிநேகமாயிருந்த எராஸ்மன் கிறேக் பாஷையைக் கச டறக் கற்றவனாகையால் இதில் தான் அந்தச் சொல்லை லத் தீன் சொல்லாகத் திருப்பிப் பூசை செய்தார்களென்று வைத்தான். இப்படியே நாம் செய்யும் நற்கருணைப் பூசை கிறேக் பாஷையிலே லித்துற்சியாவென்று சொல்லப்பட் டதாமே. ஆகையால், அர்ச். லூக்கா அங்கே சொன்ன ஆராதனை மெய்யான பூசையால் வந்த ஆராதனையென்று சொல்லக்கடவோம்.

111.- மீளவும் மெய்யான பூசை நாலு வகையாக வகுக்கப்படும். அவை வணக்கப் பூசை, தோத்திரப் பூசை, பாவப் பொறுத்தற் பூசை , வரங்கள் பெறுதற் பூசை என்று இவை நான்குமாம். ஆண்டவர் மகிமையைக் காட்டச் செய்யப்படும் வணக்கப் பூசைவகையும், அவர் நமக்குத் தந்ததை நன்றியறிந்து அவருக்குத் தோத்திரமாகச் செய்யப் படும் பூசைவகையும் இவ்விரண்டு மாத்திரம் நற்கருணைப் பூசைக்குச் செல்லுமென்று பதிதர் ஒத்துக்கொள்ளுகிறார் கள். அதேதெனில், அவ்விரு குணங்கள் மெய்யான பூசை ஆகாததற்குஞ் செல்லுமென்றதினால், நற்கருணை மெய்யான பூசை என்னாமலும், அவ்விருவகைப் பூசை ஆகக்கொள்ளச் சம்மதித்தார்கள். அப்படியே செபதப முதலிய தருமங்க ளும், ஆண்டவருக்கு வணக்கமும், தோத்திரமுமாகையில் அவைகள் முதலாய் அவ்விருவகையால் பூசை என்று ஒரு விதமாய்ச் சொல்லப்படுமே.

உரோமான் திருச்சபையோவெனில், நற்கருணைப் பூசை உத்தம மெய்யான பூசையாகக் கொள்ள அந்நாலு குணங்கள் ளும் அதற்குச் செல்லுமென்று படிப்பிக்குஞ் சத்தியமாமே. அப்படியே பதிதருஞ் சொன்ன இருவகைப் பூசை அல்லா மல் நற்கருணை பாவப்பொறுத்தல் பூசையென்று லுத்தே ரானிகளுஞ் சொல்லக்கடவார்கள். அதெப்படியென்றால், அவர்கள் தானே அர்ச். மத்தேயு சுவிசேஷத்தின் 26-ம் அதிகாரம் 28-ம் வசனத்தில் சொன்னபடி நற்கருணை பாவப் பொறுத்தலாக ஸ்தாபிக்கப்பட்டதென்று நம்மோடு அவர் களும் அப்பொலொசியவென்னும் புஸ்தகத்தின் 11-ம் பிரி வில் நிச்சயமாகச் சொன்னார்கள். ஆகிலுந் தேவத்திரவிய அநுமானவகையால் நற்கருணைப் பாவப்பொறுத்தலாக ஸ்தாபிக்கப்பட்டதென்று சொல்லக் கூடாதே. ஆகையால், மெய்யான பூசைவகையால் பாவங்களைப் பொறுக்க ஸ்தா பிக்கப்பட்டதாகச் சொல்லக்கடவோம்.

இதில் நற்கருணை தேவத்திரவிய அநுமானவகையால் பாவங்களைப் பொறுக்க ஸ்தாபிக்கப்பட்டதல்ல என்பதற்கு நியாயம் ஏதெனில், அதற்கு ஸ்தாபிக்கப்பட்டிருந்தால் பாவமுடையவன் முதலாய் அதனை அறிந்து, தனக்கு அது பொறுக்கப்படும்படிக்கு வேறு வழியால் அந்தப் பாவத் தைத் தீர்த்துச் சுத்தனாகும் முன்னே நற்கருணை வாங்கலா மல்லோ ? அப்படியே ஞானஸ்நானம், பச்சாத்தாபம் பாவங்களைப் பொறுக்க ஸ்தாபிக்கப்பட்ட தேவத்திரவிய அநுமா னங்களாகையால், பாவமுடையவர்கள் தாமே அவைகளைப் பெற்றுச் சுத்தராவார்களே. ஆகிலும் அர்ச். சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதின முதல் நிருபத்தின் 11-ம் அதி காரம் 27-ம் வசனந் துவக்கிச் சொன்னபடிப் பாவத்தோடு நற்கருணை வாங்கலாகாதென்று முன் தான் அறிந்த பாவங் களைத் தீர்த்துச் சுத்தனாகிய பின்பு வாங்கவேண்டும் அல்லோ?

ஆகையால் நற்கருணை தேவத்திரவிய அநுமானமாகப் பாவங்களைப் பொறுக்க ஸ்தாபிக்கப்பட்டதல்ல. ஆகையால், பதிதருஞ் சொன்னாப்போல சேசுநாதர் அர்ச். மத்தேயு சுவிசேஷத்தில் திருவுளம் பற்றினபடியே நற்கருணைப் பாவப் பொறுத்தலாக ஸ்தாபிக்கப் பட்டதினால் அதற்குத் தேவ பூசையாக ஸ்தாபிக்கப்பட்டதென்று சொல்லக்கட வோம். அப்படியே அப்போஸ்தலராகிய அர்ச். யாகப்பர் நற்கருணைப் பூசை செய்யும் மாதிரியைத் தந்த இடத்தில் ஆண்டவரை நோக்கிச் சொன்ன தாவது: இரத்தஞ் சிந்தா மல் செய்யப்படும் இந்தப் பூசையை எங்கள் பாவங்களைத் தீர்க்கவும், மற்ற அக்கியானத்தைப் போக்கவும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம் என்றார்.

அப்படியே அப்போஸ்தலர் காலத்திருந்த அர்ச். சாந் தப்பரும், பிறகு தொடர்ந்து வந்த அகுஸ்தினும், ஒரிசே னும், அத்தனாசியும், பசிலியும், மற்ற வேதபாரகர் எல்லா ரும் எழுதிவைத்தார்கள். ஆகிலும் பச்சாத்தாபத்தாற் பாவப் பொறுத்தலாகுந் தன்மையோடு நற்கருணைப் பூசை யால் ஆகுமென்று நினைக்கவேண்டாம். பச்சாத்தாபம் பாவப்பொறுத்தலுக்கு மெய்யான எத்தன காரணமென்று முன் சொன்னோமல்லோ? நற்கருணைப் பூசையோவெனில், அதற்குத்தானே காரணமாகாமல் அதில் படைக்கப்பட்ட தேவ பலியின் மாட்சிமையைப்பற்றித் தப்பாமல் ஆண்ட வர் கோபமாறவும், பாவிகள் மேல் அவர் மனமிரங்கவும், அவர்கள் மனந்திரும்பி மனஸ்தாபப்பட்டுப் பாவப்பொறுத்தலுக்கு வேண்டியதெல்லாஞ் செய்யத் துணிவதற்கு ஆண் டவர் அவர்களுக்கு உதவி செய்யவும், நற்கருணைப் பூசை யால் வருந் தப்பாத பலன் என்றமையால் அந்தப் பூசை யால் பாவப்பொறுத்தலாகுமென்று சொல்லக்கடவோம்.

அப்படியே நற்கருணைப் பூசை பாவங்களைத் தீர்ப்ப தற்கு உதவினாப்போல பகை, படை, பஞ்சம் முதலிய துயர் களைத் தீர்க்கவும், இஷ்டப்பிரசாத முதலிய ஞான நன்மை களை அடையவும், ஆரோக்கியம் முதலிய லௌகீக நன்மை களைப் பெறவும், தப்பாமல் வல்லதென்றதாகையால் வரங் கள் பெறுதல் பூசைவகையென்று முன் சொன்ன வேத பாரகரெல்லாரும் மறுப்பார் இல்லாமல் எழுதி வைத்தார் களே. ஆகையால் அந்நான்கு வகைப் பூசையாக நற்கரு ணைப் பூசை ஒன்றே ஸ்தாபிக்கப்பட்டதென்பது நிச்சயந் தானே.

112.- இதற்குப் பதிதர் சொல்லுந் தன்மையாவது: பாவப் பொறுத்தல் அடையவும், வேண்டிய வரங்களைப் பெறவும், நற்கருணைப் பூசை உண்டென்று ஸ்தாபித்தால் சிலுவையில் அறையுண்டு பாடுபட்டு இறந்த சேசுநாதர் நமக்கு அடைந்த பாவப் பொறுத்தலும், அளவில்லாத பலன்களும் போதாதென்று சொல்லவுங் கடவோம். இது சொல்லக்கூடாமையால் அதுவுஞ் சொல்வது நியாயமல்ல என்பார்கள். அப்படியே அர்ச். சின்னப்பர் எபிறேயருக்கு எழுதிச் சிலுவைப் பூசைக்குப் பிறகு நமது பாவங்களைப் பொறுக்கவும், நமக்குப் பலன்களை அளிக்கவும், வேறு பூசை தேவையில்லையென்று 9-ம் அதிகாரத்திலும், 10-ம் அதிகா ரத்திலும், பல இடத்தில் சொன்னாரல்லோ?

ஆகையால் சிலுவைப் பூசைக்குக் குறை சொல்லாமல் ஸ்தாபிக்கப்படாத நற்கருணைப் பூசை அபத்தமாய் மனிதர் உண்டு பண்ணின அக்கிரம முறையென்று வெறுக்கக்கட வோமென்பார்கள். ஆகிலும் பாவப் பொறுத்தலாகவும், சகல வரங்கள் பெறுதலாகவும், சேசுநாதர் பாடுபட்டு அடைந்த அளவில்லாத பலன்கள் போதாதென்றால் அபத்தந்தானே. உரோமன் திருச்சபை இந்த அபத்தத்தைச் சொல்லாமல் படிப்பிக்குஞ் சத்தியமாவது : சேசுநாதர் சிலு வைப் பூசையால் அடைந்த பலன்கள் நமக்கெல்லாருக்குஞ் சகல பாவங்கள் பொறுக்கப்படவும், சகல வரங்கள் கொடுக் கப்படவும் போதுமென்றும், வேண்டினதின் மேலும் அள வில்லாத பலன்களென்று நிச்சயமாகப் படிப்பிக்குஞ் சத்தியமாமே.

ஆகையால் அர்ச். சின்னப்பர் சொன்னபடியே சேசுநா தரைத் தவிர வேறொரு கிறீஸ்து நமக்காகப் பாடுபட வரத் தேவையில்லை; இந்தக் கிறீஸ்துதானே மீளவும் இங்கே வந்து திரும்பப் பாடுபடவுந் தேவையில்லை. ஆகிலும் இது மெய்யென்றாலும், அநுதினம் பலர் பாவப்பொறுத்தல் அடையாமல் நாகத்தில் விழுவது நிச்சயமாகக் கொள்ளச் சேசுநாதர் அடைந்த பலன்கள் அளவில்லாதாயினும், அவர் கட்டளையிட்ட வழியால் அந்தப் பலன்கள் நமக்கு வந்தா லொழிய அவைகளாலே நமக்குப் பிரயோசனம் இல்லை யென்று சொல்லவுங் கடவோம். அதெப்படியென்றால், பெருங்கடலொத்த ஆழமும், கரையுங் காணாமல் அகன்ற பூந்தடாகத்தில் பாய்ந்த தீம்புனற் குளிர்ந்த தண்ணிர் நிறைந்திருக்க, கரையில் ஒழுங்குப்பட வைத்திருந்த பல பெரும் மடைகளைத் திறவாமல், அதின் அருகிலுள்ள வய லில் தண்ணீ ர் பாயவும், அதில் இட்ட பயிர் விளையவுமாட்டாதே.

ஆகையால் வயலிலுள்ள செந்நெல் விளையத் திறந்த மடைகள் வழியால் வயலில் தண்ணீர் பாயவேண்டுமென் றால், குளத்திலுள்ள தண்ணீர் போதாதென்று சொன்ன தாகக் கொள்வார் உண்டோ ? அத்தன்மையே நம்முடைய கர்த்தர் பாடுபட்டு இரத்தமெல்லாஞ் சிந்தி, சிலுவையில் அடைந்த பலன்கள் கரைகாணாத கருணைக் கடலாய் எல் லாப் பாவங்களைத் தீர்க்க, எல்லா நன்மைகளை விளைவிக்க அளவும் பிரமாணமுமின்றி வல்லது தானே. ஆகிலும் அவர் கூட்டின பலன்களை நமக்குச் செல்லக் கொண்டுவிடுந் திவ்விய மடைகளாக ஏழு தேவத்திரவிய அநுமானங்கள் அல் லாமல் நற்கருணைப் பூசை முதலானவைகளை ஸ்தாபித்தா ரென்றதினால் நாம் அந்த மடைகளைத் திறந்தாற்போலத் தேவத்திரவிய அநுமானங்களையும், பூசையையுங் கொண்டு பாவப்பொறுத்தலும் நன்மைப் பெறுதலும் அடைய வேண்டுமென்றால், சேசுநாதர் சிலுவையில் நமக்கு அடைந்த பலன்கள் போதாதென்று நாம் சொன்னதாக நினைப்பார் உண்டோ?

ஆகையால் நாம் சிலுவைப் பூசைக்குக் குறைவாக ஒன் றுஞ் சொல்லாமல் அந்தப் பூசைக்குத் தோத்திரமாக நாம் சொன்ன நியாயத்தைப் பார்க்கில், சிலுவைப் பூசை ஒன்று அல்லாமல் வேதத்தில் வேறொரு பூசை முன் இருந்தது மில்லை, இனி இருக்கப்போகிறதும் இல்லையென்று சொல்ல லாம். அதெப்படியென்றால், பழைய வேதத்தின் பூசைக ளும், நாம் செய்யுந் திவ்விய பூசையும் மெய்யான பூசைக ளாயினுஞ் சிலுவைப் பூசைக்கு வேறுபடாமல் ஒரு முகத் தைக் காட்டும் பல கண்ணாடிகளாக நின்று, சிலுவைப் பூசையைக் காட்டின நினைவு அடையாளங்களென்று சொல் லக்கடவோம். இதுவுந்தவிர மற்றப் பூசைகளால் வந்த நன் மைகளும் நாம் செய்யுந் தேவ பூசையால் வரும் நன்மைக ளும் சேசுநாதர் சிலுவைப் பூசையால் அடைந்த நன்மைக ளொழிய வேறல்ல. ஆகையால் இப்போது சொன்ன படிச் சிலுவைப் பூசை நிறைந்த பூந்தடாகமாக நிற்க, அதில் கூடின பலன்களாகிய தண்ணீரைச் செந்நெல் விளையவிடும் பல மடைகளாக முன்னிருந்த பலவகைப் பூசைகளும் நாம் செய்யும் பூசையுங் கொள்ளக்கடவோம்.

ஆகையால் சிலுவைப் பூசை ஒன்றே எல்லாப் பூசை களால் காட்டப்பட்ட பூசையென்றும், எல்லாப் பூசைகளில் நமக்குப் பலன்களைத் தருங் காரணப் பூசையென்றுஞ் சொல்வது நியாயமாமே. இருகண் மூடின பதி தரோ வெனில், இந்த நியாயங்களைக் கண்டுபிடிக்கமாட்டாதவர்கள் ளைப் போல நம் மெல்லாரையுங் குருடரென்றெண்ணிச் சேசுநாதர் சிலுவைப் பூசையால் அடைந்த அளவில்லாத பலன்கள் நம்மைக் கரை ஏற்றப் போதாதென்று நாம் படிப் பிக்கிறதாகச் சொல்லுவார்கள். ஆகிலும் உரோமான் திருச் சபைமேல் விரோதமாகி, ஏழைச்சனங்களை ஏய்க்கப் பதி தர் தங்கள் வாயால் இந்த அபத்தத்தைச் சொல்லுவதொ ழிய நாம் அந்தத் தப்பறையைச் சொல்லாமல் படிப்பிக்குஞ் சத்தியத்தைத் தங்கள் மனமே அறியுமென்பதற்குச் சந் தேகம் இல்லை.

113.- இந்த நியாயங்களை நன்றாய்க் கண்டறிந்தல் லோ லுத்தேர் துவக்கத்தில் நற்கருணை பூசையை விலக்க லாகாதென்றிருந்தான். அவன் தான் தனிப் பூசை விலக் கும் புஸ்தகத்தில் எழுதின தாவது: அப்போஸ்தலர் துவக்கி இந்நாள் வரைக்கும் இருந்த வேதபாரகரெல்லாருஞ் சந்தே கத்துக்கு இடங்கொடாமல் நற்கருணைப் பூசை உண் டென்று தெளிவாய்ச் சொல்லி , இதுவே திருச்சபையோடு துவக்கின முறையாகக்கொள்ள நான் அதை மறுக்கவோ? நான் ஒருவன் கண்ணுடையவனாகி , மற்றவரெல்லாருங் குருடர்தானோவென்று அஞ்சிக் கூசி நிற்க , தன் சிநேகி தனாகிய பசாசு எப்போதும் போல மனுஷ உரூபமாய் வந்து தோன்றிப், பூசையை விலக்க வேண்டுமென்று சொல்லத் தான் எழுதினபடிப் பசாசு வார்த்தையை ஒருக்காலும் மறுக்கமாட்டாத லுத்தேர் நற்கருணைப் பூசையின் நிச்ச யத்தை அறிந்தவனாகக்கொள்ள இத்தருணத்தில் பசாசு சொன்ன தற்குச் சம்மதியாமல், நெடுநேரங் கொடியதோர் தர்க்கஞ் செய்யதபின்பு, கடைசியில் பசாசு சொன்ன நியா யங்களுக்கு இணங்கானாயினும், பசாசு கூப்பிட்ட இடி முழக்கத்தாலும், காட்டின பயங்கர உருவத்தாலும், தன்னை வெருட்டி மயக்குவித்ததினால் கட்டாயமாய் இணங்கி, நற்க ருணைப் பூசையை விலக்கத் துணிந்தேனென்று தானே அந்த புஸ்தகத்தில் எழுதி வைத்தான்.

அப்படியே பிராண சிநேகிதனாகிய பசாசின் வார்த்தையை மறுக்கமாட்டாமல் கேட்ட லுத்தேர் தனக்குத் தானே கண்ணைப் பிடுங்கினாற் போல் தான் கண்டறிந்த நியாயங்களை மறுக்கவும், தன் ஆத்துமத்தைக் கெடுக்கவுங் கூசாமற்போனான். இதனால் 1542-ம் ஆண்டில் லுத்தேர் உண்டாக்கின ஒரு புது மந்திரத்தில் தனக்குத் தோத்திர மாக ஆண்டவரைப் பார்த்துச் சொன்னதாவது : சுவாமீ , நான் ஒருக்காலும் பசாசுக்கு விரோதம் செய்யவுமில்லை , அதற்கு மனம் நோகச் செய்யவும் இல்லை யென்றான். இது வந்தவிர எப்போதும் மனிதரைக் கெடுத்துப் பசாசுக்குச் சந்தோஷம் விளைவிக்கப் பிரயாசைப்பட்டேனென்று லுத் தேர் கூட்டிச் சொன்னாலும் பொய்யுமல்லாமல், அவனுக்கு ஏற்ற தோத்திரமுமாகுமல்லோ? இதெல்லாம் இதில் வாசிக் கும்போது லுத்தேர் தானே இதனை எழுதுவானோவென்று சந்தேகப் படுவார் உண்டாமே.

ஆகிலும் இதிலேயும், இந்தப் புஸ்தகத்தின் மற்ற இடங்களிலேயும் லுத்தேர் சொன்னதாக நாம் வைத்த தெல்லாம் உரோமான் திருச்சபையார் எழுதின கிரந் தங்களிலே மாத்திரம் வாசிக்கத்தகும் விசேஷங்களல்ல. லுத்தேர் வாசமாயிருந்து தன் சமயத்தைப் போதிக்கத் தெரிந்த வித்தேம்பேற்க் நகரிடத்திலே லுத்தேரானிகள் தானே லுத்தேர் எழுதினதெல்லாங் கூட்டி அச்சுப் பதித்த புஸ்தகங்களிலேதானே நாம் சொன்னதெல்லாங் காணப்படுவது நிச்சயந்தானே. சொன்னபடியே தன் குரு வாகிய பசாசு சொன்ன கொடிய உபதேசத்தால் மயங் கின லுத்தேர் நற்கருணைப் பூசையை விலக்கத் துணிந்தா லும், இன்னந் தன் மனதில் ஒளிப்பட விளங்கித் தோன்றின நியாயங்களை முழுதும் விலக்கமாட்டாமலும், பசாசு சொன் னதை மறுக்கமாட்டாமலும், நற்கருணைப் பூசையை விலக் கினாலும், விலக்கினதென்று காண்பியாமல் ஏழைச் சனங் களை ஏய்க்க லுத்தேரும், அவனைச் சேர்ந்த பதிதருந் துவக்கத்திலே பூசை என்னும் பெயரும், அதற்குக் குறித்த வஸ்திர வகையும், புறத்துச் செய்யக் கற்பித்த ஞானச் சடங்குகள் முறையும், எவருங் கேட்கச் சொல் லப்பட்ட மந்திர ஒழுங்கும் இவை எல்லாவற்றையும் உரோமான் திருச்சபை செய்து கொண்டு வந்த தன்மையால் விடாமல் அவர்களுஞ் செய்து கொண்டு வந்தார்கள்.

அப்படியே தாங்கள் நற்கருணைப் பூசையை மறுத்து விட்டார்களென்று தங்கள் மேலே அநியாயமாய் நாம் சொன்னதாக முறைப்பட்டு, அப்போலோசியவென் னும் புஸ்தகத்தின் 12-ம் பிரிவில் எழுதி வைத்தார்கள். ஆகிலுந் திருச்சபை நற்கருணை உண்டாக்கு முன்னும், உண்டாக்கிய பின்னும் அந்தப் பூசையை உயிர் வாழும் எல்லா மனிதருக்கும், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக் களுக்கும் நன்மையாகப் பிதாவுக்குப் படைத்து ஒப்பிக் கும்படிக்குக் குருக்கள் சொல்லக் கட்டளையிட்ட மந்திரங் கள் எல்லாவற்றையும் அவர்கள் தள்ளி, படைத்தலென் றும், ஒப்பித்தலென்றும் இந்தச் சொற்களை மிகவும் வெ றுத்துக் கூட அதிலே நற்கருணை வாங்கினவர்களுக்கன்றி பூசை ஒருவருக்கும் உதவாதென்று சொன்னார்கள்.

இதோ சேசுநாதரின் மந்தை ஆடுகளை ஏய்த்து விழுங்க ஆட்டுத் தோலைப் போர்த்திய ஓநாய் தன் உருவத் தைக் காட்டி இதிலே பூசை என்னும் பெயர் பலனில்லாத வெறும் பெயராக வைத்து, மெய்யாகவே நற்கருணை தே வத்திரவிய அநுமானமாவதொழிய மெய்யான பூசையாவ தில்லையென்று தாங்கள் சொன்னது பிரசித்தமாமே. அப் படியே முகத்தில் அப்பந் தோன்றாதபடிக்கு அதனை மறைத்துக் கோலம் பூசின வங்கப் பானையாக லுத்தேரென் பவன் பொதுப் பூசை நல்லதென்று தனிப் பூசை ஆகா தென்றான். பொதுப் பூசை என்னுஞ் சொல்லால் பொது வில் எல்லாருக்கும் நன்மையாகச் செய்யப்பட்ட பூசை என்று சொன்னால், லுத்தேர் சொன்னது நியாயந்தானே. குருக்கள் எல்லாரும் பொது மனிதராகவும், பொதுத் திருச்சபைக்கு இடமாகவும், பொதுவில் எல்லாருக்கும் நன்மையாகவும், தனியே பூசை செய்தாலும், எல்லாருங் காணச் செய்தாலும், அநுதினம் பூசை செய்வார்களென் பது உரோமான் திருச்சபை படிப்பிக்குந் தன்மைதானே.

ஆகையால் நாம் செய்யும் பூசை எல்லாம் பொதுப் பூசையொழியத் தனிப் பூசை ஒன்றில்லையே. ஆகிலும் லுத்தேர் நினைத்த அர்த்தம் இதுவல்ல. அவனே பூசை என்னும் பெயரை உரிய அர்த்தத்தோடே கொள்ளாமல், இதிலே பிதாவுக்குத் தேவ பலியாகச் சேசுநாதர் படைக் கப் படுவதில்லையென்று , நற்கருணை வாங்குவதே பூசை என்றான். ஆதலால் மற்றச் சனங்கள் கூட நற்கருணை வாங்கின பூசை பொதுப் பூசை என்றும் பூசை செய்யுங் குருவானவர் மாத்திரம் நற்கருணை வாங்கின பூசை தனிப் பூசை என்றும் தானே இந்த வகைத் தனிப் பூசை ஆகா தென்றான். ஆகையால், நற்கருணைத் தேவத்திரவிய அது மானமாக வாங்குவதுமாத்திரமே பூசை என்றானொழிய, வேறே வகைப் பூசை எல்லாம் வெறுத்தானல்லோ? ஆகி லும் மனிதருக்குக் கொடுக்கப்படும் நன்மை மெய்யான பூசை என்று சொல்வார் இல்லை. ஆண்டவருக்குப் பலி யைப் படைப்பதே மெய்யான பூசை என்று சொல்ல வேண்டியது.

ஆதலால் மேலிட்ட பொய்க் கோலமாக மனிதரை ஏய்க்க நற்கருணைப் பொதுப் பூசையாக ஸ்தாபித்தாற் போல லுத்தேர் பேசி மெய்யாகவே அது தேவத்திரவிய அநுமானமாவதொழியப் பூசை அல்லவென்று ஸ்தாபிக்க நினைத்தானல்லோ? நாம் படிப்பிக்குந் தன்மையோவெனில், பூசை கண்ட யாவருங் கூட நற்கருணை வாங்கினால் நல்ல தென்று அவர்களைத் திருச்சபை விலக்கவும் இல்லை. ஆனால் வேறொருவரும் வாங்காதாயினுந் தேவநற்கருணை உண்டா கிறபோது யாவருக்கும் பொதுப் பலனாகத்தேவ பலியாகிய சேசுநாதர் பிதாவுக்குப் படைக்கப்படுவார் என்றதினால் அதுவே மெய்யான பூசை என்று சொல்லக்கடவோம். லுத்தேரோவெனில், இப்படிச் சிறிதுநாள் மறைவாகப் பூசையை விலக்கின பின்பு, தன் குருவாகிய பசாசு தனக் குப் படிப்பித்த உபதேசத்தை மறைவில்லாமல் சொல்லத் துணிந்து நற்கருணை கர்த்தர் கட்டளையிட்ட இராப்போசனமாவதொழியத் தேவ பூசை அல்லவென்று தான் வெ ளியாகச் சொல்லத் துவக்கினான்.

அப்படி லுத்தேர் சொல்லிக்கொண்டு படிப்பித்தா லும், இன்னம் உரோமான் திருச்சபை முறையின்படியே தேவநற்கருணை உண்டாயின உடனே குருக்கள் அதனை எடுத்துக் காட்டவும், அடித்த மணியின் ஓசையோடு அனை வருந் தன் நெஞ்சடித்து, காட்டின நற்கருணையை வணங் கவுஞ் செய்தான். ஆகிலும் இது தேவ பலியைப் பிதா வுக்கு ஒப்புக்கொடுக்குஞ் சடங்காகி, மெய்யான பூசைக் கேற்றதொழிய இராப்போசனத்துக்குரிய தல்லவென்றா கையில், அதனை வைக்கக் காரணம் என்னவென்று லுத் தேர் சீஷர்கள் அவனைக் கேட்டார்கள். அதற்கு லுத்தேர் தனக்கேற்ற இரண்டு நியாயங்களைச் சொன்னான். அதா வது : நமக்கு இது ஒவ்வாத முறையாமெனினும், என் பகையாளி கார்லோஸ்தாதென்பவன் அந்த முறையை விலக்கினானென்று நான் அவனுக்கு விரோதமாகவும், பசாசு எனக்கு எல்லாவற்றையும் படிப்பித்ததென்று தோன் றாதபடிக்கும் அந்த முறையை நிறுத்தி வைத்திருக்கிறேன் என்றான்.

இப்படி இந்த உத்தம முறையை அக்கிரமமான கார ணங்களைப்பற்றி 25 வருஷமாக லுத்தேர் தன் சமயத்திலே வைத்துக்கொண்ட பின்பு, 1543-ம் ஆண்டில் தன் துரை சொன்னபடிக் கேட்க வேத முறையாய் நிறுத்தினதைத் தானே ஆகாதென்று முழுதும் விலக்கினான். இதெல்லாம் லுத்தேர் பிரிய சீஷனும், தோழனுமாகிய மேலந்தோனு டைய மருமகன் தானே எழுதி வைத்தான். ஆகையால் தன் குருவாகிய பசாசின் சிநேகமும், அர்ச். பாப்புமேல் வைத்த பகையும், தன்னை ஆதரித்த துரையின் சலுகையும் இவை மூன்றுந் தன் விசுவாசத்தின் காரணமாகவும், தன் சமயத்தின் மாதிரிகையாகவும் எண்ணி நியாயத்தை ஒன் றும் பாராமல் பிதற்றி லுத்தேரென்பவன் திருச்சபையில் மெய்யான பூசை ஒன்றில்லையென்று சொல்லக் கூசாமற் போனான்.

அப்போது அப்போஸ்தலரும், மற்ற வேதபாரகருஞ் சந்தேகத்துக்கு இடம் விடாமல் பூசை உண்டென்று தெளிவாய்ச் சொன்னதையும், திருச்சபை துவக்கின நாள் முதற்கொண்டு நற்கருணையைப் பூசையாகப் பிதாவுக்கு ஒப்பித்துக்கொண்டு வந்த முறையையும், அவன் சொன்ன தற்கு எதிராகக் காட்டின இடத்தில் சொல்லும் மறு மொழி யல்லாமல் , பபிலோன் அடிமைத்தனமென்னும் புஸ்தகத்தின் முதல் அதிகாரத்தில் மதி கெட்ட பித்தனைப் போல எழுதினதாவது : எதிர்த்துக் காட்டின உதாரணங் களுக்குச் செல்லுமான மறு உத்தரம் இல்லாதாகில், நற் கருணைப் பூசை உண்டென்று ஒத்துக்கொள்ளுவதைப் பார்க்க எல்லா உதாரணங்களும் பொய்யென்று மறுப் பதே நல்லதென்றான்.

மீளவுந் தனிப் பூசை விலக்கும் புஸ்தகத்தில் சொன் னதாவது: பாப்புக்குக் கீழ்ப்படிந்தவர்கள் நமக்கு எதிரா கத் திருச்சபை முறையும், வேதபாரகர் உதாரணங்களுஞ் சொல்லிக் காட்டினால் இதெல்லாம் நமக்குத் தடையுமல்ல. இதிலே மனிதர் செய்ததும், சொன்ன துஞ் சற்றாகிலும் நாம் மதிக்கப்போகிறதில்லை. தீர்க்கத்தரிசிகள் முதலாய் அவர்களோடே அப்போஸ்தலருஞ் சில தப்பிதஞ் செய்த தறிவோமே. ஆகையால் கிறீஸ்துவின் வார்த்தையாகத் திருச்சபைக்கும், அப்போஸ்தலருக்கும், சம்மனசுகளுக் கும் முதலாய்த் தீர்வை இடுபவர் நாமே என்று லுத்தேர் தேவ தூஷணத்துக்கு அஞ்சாத துணிவோடு உலகங் கூசக் கூசாமல் கக்கிச் சொன்னான் . ஆகிலும் இதிலே சேசுநாத ருக்குங் கூடத் தீர்வை தானே இடுவானென்று சொல்லா திருந்தது அதிசயந்தானே. இப்படிச் சாத்தியத்தையும், திருச்சபை காட்டின நியாயத்தையும் விட்டுப் பிரிந்தவர் கள் கண் கெட்டு இடறி விழுந்து, உருண்டு எல்லா அக்கிரமத்தின் பாதாளத்தில் அமிழ்ந்திக் கிடப்பார்களல்லோ.