தேவதிரவிய அநுமானங்கள். தனி விளக்கம். 2

94.- ஐந்தாவது, அவஸ்தைப்பூசுதல். 

அர்ச். யாகப்பர் எழுதின நிருபம் 5-ம் அதிகாரம் 14-ம் வசனமாவது: வியாதியாய் ஒருவன் கிடந்தபோது குருக்களை அழைப்பித்து அவர்களும் வந்து, கர்த்தர் நாமத்தினால் அவனை எண்ணெய் கொண்டு பூசி, அவனுக்காக வேண்டிக்கொள்ளக் கடவார்கள் என்றார். இதோ சடங்கு. அப்போது விசுவாசத்தோடு செய்த வேண்டுதல் அவனை ஈடேற்றி, ஆண்டவர் அவன் துயர்களை ஆற்றி, பாவங்களில் கிடந்தால், அவைகள் அவனுக்குப் பொறுக்கப்படுமென்றார். இதோ இஷ்டப்பிரசாதத்தின் நிச்சயம். ஸ்தாபித்த தேவ கட்டளை இதில் வெளியாக இல்லாதாயினும், வேண்டிக்கொண்டு எண்ணெய் பூசின சடங்கு செய்தமாத்திரத்தில் எப்போதுந் தப்பாமல் பாவப்பொறுத்தல் உண்டாகுமென்று திடமாய் அர்ச். யாகப்பர் எழுதினதினால் அதற்குத் தேவ கட்டளை இருந்ததென்று கண்டுகொள்ளக்கடவோம். மீளவும் இவ்வகைப் பூசுதல் இஷ்டப்பிரசாதத்தைத் தரும்படிக்குக் கர்த்தர் ஸ்தாபித்ததினாலல்லோ அப்படியாகுமென்று விசுவசித்து, வேண்டிக்கொள்ளச் சொன்னார். ஆகையால் இதிலேயும் முக்குணங்களைக் கண்டமையால் இதுவுந் தேவத்திரவிய அநுமானங்கனில் ஒன்றென்று சொல்லக்கடவோம்.

95.- ஆறாவது, குருத்துவம். இதில் புறச் சடங்கு தலைமேல் கை விரித்தல். அப்படியே அப்போஸ்தலர் நடபடி ஆகமத்தின் 6ம் அதிகாரத்து 6-ம் வசனத்திலும், 13-ம் அதிகாரம் 3-ம் வசனத்திலும், அர்ச். சின்னப்பர் திமோத்தேயுக்கு எழுதின முதல் நிருபம் 4-ம் அதிகாரம் 14-ம் வசனத்திலும், 5-ம் அதிகாரம் 22-ம் வசனத்திலும், அவருக்கு எழுதின இரண்டாம் நிருபத்தின் முதல் அதிகா ரத்து 6-ம் வசனத்திலும் எப்போதுந் தலைமேற் கை விரித்த சடங்கோடு குருத்துவந் தந்ததென்று கண்டோம்; ஆகை யால் கிறேக் பாஷையில் குருத்துவங் கீரோத்தொனிய என்று சொல்லப்பட்டதாம். கீரோத்தொனிய என்பது கைப்புற தீட்சை என்றவாறு.

இரண்டாவது - இதில் இஷ்டப்பிரசாதத்தின் நிச்சய முண்டாம். அப்படியே திமோத்தேயுக்கு எழுதின முதல் நிருபத்தில் 4-ம் அதிகாரம் 14-ம் வசனத்தில் அர்ச். சின்னப்பர் சொன்னதாவது: ஆண்டவர் எனக்குத் தந்த காட்சியின்படியே நான் உன்னை மேற்றிராணியாராக்க, உன் தலைமேல் கை விரித்த சடங்கோடு உனக்கு வந்த இஷ்டப் பிரசாதத்தை எண்ணாதிருக்க வேண்டாம் என்றார். மீளவும் அவருக்கு எழுதின இரண்டாம் நிருபத்தின் முதல் அதிகா ரம் 6-ம் வசனத்தில் சொன்னதாவது : நான் உன் தலைமேல் கை விரித்த சடங்கோடு உனக்கு வந்திருக்கும் இஷ்டப்பிர சாதத்தை எழுப்பி நடக்க உறுதி சொல்லுகிறேன் என்றார்.

மூன்றாவது. - இதற்கு ஸ்தாபித்த தேவ கட்டளையு முண்டாம். அப்போஸ்தலர் நடபடி ஆகமத்தின் 13-ம் அதிகாரம் 2-ம் வசனத்தில் சவுலு, பார்னபா என்ற இருவ ரையும் நாம் தெரிந்துகொண்ட உத்தியோகத்துக்கு மற்ற வர்களில் பிரிப்பீர்களாக என்று ஆண்டவர் கட்டளையிட்ட படி மற்ற அப்போஸ்தலர் ஒருசந்தியாயிருந்து வேண்டிக் கொண்டு, அவர்கள் இருவர் தலைமேல் கை வைத்து அனுப் பினார்களென்று எழுதியிருக்கிறதொழிய, அர்ச். சின்னப் பர் எபேசியாருக்கு எழுதின நிருபத்தின் 4-ம் அதிகாரம் 11-ம் வசனத்தில் ஆடுகளை மேய்ப்பவர் உவமையால் மற்ற வர்களை நன்னெறியில் நடத்தும் உத்தியோகமுள்ள மேற்றி ராணியார் முதல் குருக்கள் எல்லாரையுங் குறித்து இப்ப டிப்பட்ட உத்தியோகத்தை இவர்களுக்கு ஆண்டவர் தாமே தந்ததென்றார்.

ஆகையால் வேண்டிய முக்குணமும், இதிலேயும் உண் டாகையால் இதுவுந் தேவத்திரவிய அநுமானமென்று சொல்லக்கடவோம். இப்படியே கல்வீன் தானுங் கற்பனைகளின் 4-ம் கண்டம் 19-ம் அதிகாரம் 31-ம் பிரிவில் குருத் துவந் தேவத்திரவிய அநுமானமாக ஒத்துக்கொண்டான். அவன் சீஷரோவெனில், ஒரு நிலை நிற்கமாட்டாமல் குரு வழியை விட்டு, இந்தச் சத்தியத்தை மறுத்துக்கொண்டு திரிகிறார்கள்.

96.- ஏழாவது, மெய்விவாகம். அர்ச். சின்னப்பர் எபேசியாருக்கு எழுதின நிருபத்தின் 5 ம் அதிகாரம் 31-ம் வசனத்தில் சொன்னதாவது : ஸ்திரீ பூமான் இருவரும் ஓர் உடலாகக்கடவார்கள். இது பரம இரககியத்து அடமா னமே. அதெப்படியென்றால், கிறீஸ்துவையுந் திருச்சபை யையும் பற்றி இது பரம இரகசியமென்றேன் என்றார். இதற்குரிய அர்த்தத்தைச் சொல்லிக்காட்டுவோம். ஸ்திரீ பூமான் இருவரும் ஒருவராகச் செய்யும் புணர்ச்சி மிருகத் திடத்திலுங் காணப்பட்டமையால் பரம இரகசியம் என் னப்படாதல்லோ ஆகையால் இதில் பரம இரகசியமே தெனில், இருவர் ஒருவராகச் செய்யும் விவாகக் கட்டு மா ணபரியந்தம் அவிழ்க்கப்படாமல், பிள்ளைகளில்லா தாயினும், வியாதியுள்ள தாயினும், மனக்குறை வந்ததாயினும், எப்படி யாயினும் இருவர் தம்முட் பிரியமாட்டா தபடிக்கு சேசு நாதர் ஸ்தாபித்த விவாக வகையே பரம இரகசியந்தானே.

இதை இப்படி ஸ்தாபித்ததற்குக் குறித்த நியாயமே தெனில், கிறீஸ்துவுக்குந் திருச்சபைக்கும் அவிழ்க்கப்படா மலுள்ள ஞானக் கட்டு முறையைக் காட்டும்படிக்குச் சொன்ன முறையால் விவாகத்தை ஸ்தாபித்தார். ஆகை யால் சிறீஸ்துவுக்கு ஒரு திருச்சபையும், திருச்சபைக்கு ஒரு கிறீஸ்துவு மாத்திரம் உள்ளபடி, ஆணுக்கு ஒரு பெண் ணும் பெண்ணுக்கு ஒரு ஆணுமாத்திரம் இருக்கவும், அர்ச். மத்தேயு சுவிசேஷத்தின் 28-ம் அதிகாரம் 20-ம் வசனத் தில் சொன்னபடி உலகம் முடியுந்தனையுஞ் சேசுநாதர் தன் கற்புடையாளாகிய திருச்சபையைக் கைவிடாமலும், பிரி யாமலுங் காப்பார் என்றது போல , ஸ்திரீ பூமான் இருவரும் மரணபரியந்தம் பிரியாமல் அன்போடு ஒன்றாயிருக்கவுங் கட்டளையிட்டார்.

ஆகையால் இப்போது திருச்சபையிலுள்ள விவாக முறைமை கிறீஸ்துவுக்குந் திருச்சபைக்குமுள்ள ஞானக் கட்டு முறையைக் காட்டும் அடையாளமாக ஸ்தாபிக்கப் பட்ட தாமே. ஆதலால் கிறீஸ்துவர்கள் விவாகமே பரம இரகசியத்து அடமானமென்று அர்ச். சின்னப்பர் எழுதி வைத்தார். இல்லாவிட்டால் விவாகப் புணர்ச்சி கிறீஸ்து வையுந் திருச்சபையையுங் குறித்துப் பரம இரகசியமென் னப்படும் என்று தாமே எழுதுவானேன்? அப்படி அந்த அதிகாரத்தில் தானே திருச்சபைக்குக் கிறீஸ்துவே தலையா வதுபோல, ஸ்திரீயானவளுக்குத் தன் பத்தா தலையாமென் றார். திருச்சபைமேலே சேசுநாதர் அன்பு வைத்தபடி, பூமானும் தன் துணைவியைச் சிநேகிக்கச் சொன்னார். சேசு நாதரைத் திருச்சபை வணங்கி அவருக்குக் கீழ்ப்படிந்தது போல, ஸ்திரீயுந் தன் பத்தாவுக்கு வணக்கஞ் செய்து கீழ்ப் படியக் கற்பித்தார்.

இதோ காணப்படும் மனிதர் விவாகங் காணப்படாத தாய் கிறீஸ்துவுக்குந் திருச்சபைக்குமுள்ள ஞானப் புணர்ச் சியைக் காட்டும் அடையாளமாமே, தேவத்திரவிய அநுமா னமாவதற்கு வேண்டிய இந்த முதற் குணமல்லாமல் இஷ் டப்பிரசாதத்தின் நிச்சயமும் இதில் தானே காணப்படும். அதெப்படியென்றால், ஆண்டவர் மனுஷாவதாரஞ் செய்த போது தாமெடுத்த சுபாவம் மெய்யான மனுஷ சுபாவமா கையால் அந்தச் சுபாவத்தின் ஒருமையால் மற்ற மனித சோடு சேசுநாதர் புணரப்பட்டாரென்று சொல்லலாம். ஆகி லும் மனுஷ சுபாவப் புணர்ச்சி பொது முறையாகி அவ்வ கையால் அக்கியானிகளோடேயும் அவர் புணரப்பட்டதா கையில் இதுவன்றித் திருச்சபையை ஒரு கற்புடையாளா கக் கொண்டு தாம் இதனோடு விசேஷமாய்க் கொரிந்தியா ருக்கு எழுதின 2-ம் நிருபத்தின் 11-ம் அதிகாரம் 2-ம் வசனத்தில் அர்ச். சின்னப்பர் சொன்னபடி புணரப்பட்டி ருக்கிறாரென்று சொல்லக்கடவோம்.

இது சேசுநாதர் திருச்சபையின் மேல்வைத்த விசேஷ பட்சத்தினாலேயும், அதற்கு எந்நாளுங் கொடுத்துக்கொண்டு வரும் இஷ்டப்பிரசாத முதல் பல வரங்களினாலேயுமாகும் ஞானப் புணர்ச்சிதானே. ஆகையால் ஸ்திரீ பூமான் இருவ ருக்குள்ள அக்கியானிகளுக்கும் பொதுவாகிய புணர்ச்சி யொழியத் திருச்சபையோடு சேசுநாதருக்குள்ள ஞான வேத. விசேஷப் புணர்ச்சியைக் காட்ட அவர்களுக்குள்ள தேவ பட்சத்தாலும், இஷ்டப்பிரசாதத்தாலும், வரும் ஞானப் புணர்ச்சி உண்டாக வேண்டியதல்லோ . ஆகையால் அர்ச். சின்னப்பர் சொன்னபடி திருச்சபையோடு கிறீஸ்துவின் ஞானப் புணர்ச்சியைக் காட்டும் அடையாளமாகக் கிறீஸ் துவ விவாகம் ஸ்தாபிக்கப்பட்டமையால் அதற்கு வேண் டிய தேவ பட்சமும் இஷ்டப்பிரசாதமும் இதில் வருவது நிச்சயமாமே. இப்படியே புறத்தடையாளமும், உள்ளத்து இஷ்டப்பிரசாத நிச்சயமும் இதில் உண்டென்று ஒப்பித் தாச்சுது.

மீளவும் இதனை ஸ்தாபித்த தேவ கட்டளையும் உண் டென்று காட்டக்கடவோம். அதெப்படியென்றால், உலகம் வர்த்திக்க விவாகம் ஆண்டவரால் ஸ்தாபிக்கப்பட்ட தென்று இந்நாளில் சந்தேகப்படுவாரில்லை. ஆகிலும் மக்க ளைப் பெறுதற்கு வேண்டிய சுபாவக் கட்டல்லாமல் கிறீஸ் துவர்கள் விவாகம் இஷ்டப்பிரசாதத்தைத் தருஞ் சடங்கா கித் திருச்சபையோடு சேசுநாதருக்குள்ள ஞானப் புணர்ச் சியைக் காட்டும் அடையாளமாக ஆண்டவரால் ஸ்தாபிக்கப் பட்டதென்றும், இதனால் இது மெய்யான தேவத்திரவிய அநுமானமென்றும், இந்நாட் பதிதர் ஒத்துக்கொள்ளார் கள். ஆகிலும் இன்றையவரைக்குஞ் சொன்ன நியாயங்க ளினால் கிறீஸ்துவர்கள் விவாகம் அந்த ஞானப் புணர்ச்சி யைக் காட்டும் அடையாளமென்றும், அதனால் விசேஷ இஷ்டப்பிரசாதம் வருமென்றும், வேத உதாரணத்தால் ஒப்பித்ததல்லோ . ஆனால் ஒரு தேவ இரகசியத்தைக் காட் டும் புறச்சடங்கு தப்பாமல் இஷ்டப்பிரசாதத்துக்குக் கார ணமாக ஸ்தாபிக்கப்படுவது ஆண்டவராலன்றி வேறொருவ ராலும் ஆகுந் தன்மையல்லவென்று நம்மோடு பதிதருஞ் சொல்லுகிறார்கள்.
ஆகையால் கிறீஸ்துவர்கள் விவாக இஷ்டப்பிரசாதத் தைத் தந்து, கிறீஸ்துவின் ஞானப் புணர்ச்சியைக் காட்டும் அடையாளச் சடங்காகக்கொள்ள, ஆண்டவரால் அதற்கு ஸ்தாபிக்கப்பட்டதென்று சொல்லவுங் கடவார்கள். ஆகை யால் அர்ச். மத்தேயு சுவிசேஷத்தின் 19-ம் அதிகாரம் 6-ம் வசனத்தில் சேசுநாதர் விவாகத்தைப்பற்றி ஆண்டவர் கட் டினதை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்று திருவுளம் பற்றின வசனம், சுபாவப்பொது முறையால் செய்த விவா கத்தைப் பற்றிச் சொன்னதொழிய, விசேஷமாய் மரணபரி யந்தம் பிரிக்கப்படாத கட்டுள்ள கிறீஸ்துவர்கள் விவாகம், ஆண்டவரால் சொன்ன முறையோடு ஸ்தாபிக்கப்பட்ட தென்று அவர் திருவுளம்பற்றினதாகக் கொள்ளக்கடவோம். ஆகையால் விவாகமும் தேவத்திரவிய அநுமானமென்பது சத்தியந்தானே . விவாக முறையில் வெட்கமில்லாத லுத் தேர் சொன்னதை நமக்குள்ள நாணத்தைப் பாராமல், இங்கே எழுதக்கடவோம்.

லுத்தேர் போதித்ததெல்லாம் ஒருமிக்க அவன் சீஷர் கள் அச்சுப் பதித்தார்கள். அதில் 5-ம் புஸ்தகத்தில் 123-ம் ஏட்டில் எழுதியிருக்கிறதாவது : லுத்தேர் வாசமாயிருந்த வித்தேம்பெர்க் நகரில் எல்லாருக்கும் பொதுவாய் 1522 - ம் ஆண்டில் விவாக விஷயத்தில் செய்த பிரசங்கத்தில் சொன்ன வார்த்தையாவது : ஸ்திரீயானவள் தன் பத்தாவுக்கு இடங் கொடாளாயின் அப்போது "நீ மாட்டேனென்றால், வேறொ ருத்தி சம்மதித்து வருவாள்'' என்று புருஷன் அவளுக்குச் சொல்லக்கடவான். அப்படியே கொண்ட பெண்சாதி மாட் டேனென்றால், இருக்கிற வெள்ளாட்டியைச் சேர்ப்பீர்க ளாக என்றான். அப்படியே வேசிகள் கூத்தாடின இடத் தில் இதனைச் சொல்லக் கேட்டாலும், நல்லோர் கூசிச் செவிகளை அடைக்கச் செய்யும் அபத்தம் இதாகித் திருச் சபையை நிறுத்தவந்த புது அப்போஸ்தலனாகிய லுத்தேர் வெட்கமில்லாமல் வேத முறையாக ஞானப் பிரசங்கத்தில் சொல்லக் கூசாதே போனான்.

மீளவும் அர்ச். மத்தேயு 5-ம் அதிகாரம் 32-ம் வசனத் திலும், 19-ம் அதிகாரம் 9-ம் வசனத்திலும், அர்ச். மாற்கு 10- ம் அதிகாரம் 11-ம் வசனத்திலும், அர்ச். லூக்கா 16-ம் அதிகாரம் 18-ம் வசனத்திலும், அர்ச். சின்னப்பர் கொரிந் தியாருக்கு எழுதின முதல் நிருபத்தின் 7-ம் அதிகாரம் 10-ம் வசனத்திலும் மரணபரியந்தம் விவாகக் கட்டு அவிழ்க்கப்படாதென்று வேத சத்தியமாக எழுதியிருக்கப் பழைய வேதத்தில் முதலாய்ப் பிறர்க்குள்ளாகித் தன் ஸ்தி ரியானவள் தனக்குத் துரோகம் பண்ணின காரணத்தினா லொழிய, அவளை மறுத்து வேறே கொள்ளப்படாதிருக்க, ஓர் இரண்டு முறை தன் புருஷனுக்கு இடங்கொடாத பெண்சாதியை மறுக்க லுத்தேர் உத்தாரந் தந்தான். ஆகி லும் முதல் தாரத்தைக் கைவிட்டாலொழிய, வேறே கொள் ளப்படாதென்று அந்தப் பிரசங்கத்தில் 1522-ம் ஆண்டில் சொன்னான். அதன்பின்பு 1539-ம் ஆண்டில் 17 வருஷங் கடந்ததாகையால் அவன் தன் ஞானமும் வளர்ந்து, தானுந் தெளிந்து தேறி , லங்கிறா என்பவனுக்கு இரண்டு பெண்சா திகளைக் கூடப் படைக்க உத்தாரஞ் செய்தான். இவை எல்லாம் மெய்யென்று அறிந்து, இன்னந் தாங்கள் அநுச ரிக்குஞ் சமயத்துக்கு லுத்தேரைத் தலைவனாக வைப்பதற் குச் சிலர் கூசாதிருப்பதைக் கண்ட நமக்கு அதிசயந் தானே.

97.- இன்றைய வரைக்குஞ் சொல்லிக் காட்டின வேத உதாரணங்களினால், நாம் முன் சொன்ன ஏழு தேவத் திரவிய அநுமானங்கள் உண்டென்று ஒப்பித்ததல்லோ . இந்த ஏழும் நீங்கப் புறத்து அடையாளமாகி, உள்ளத்து இஷ்டப்பிரசாதத்தைத் தரும்படிக்கு ஆண்டவரால் ஸ்தா பிக்கப்பட்ட வேறொரு சடங்கு உண்டென்று வேத உதார ணங்களினால் ஒப்பிப்பாரில்லை. ஆகையால் அந்த ஏழு மாத் திரம் உண்டென்று சொல்லக்கடவோம். ஆகிலும் ஏழு தேவத்திரவிய அநுமானங்களைச் சேசுநாதர் ஸ்தாபித்த தன்மையால் இதில் குறையவும் ஏறவுந் தன் சித்தத்தின் படியே ஸ்தாபிக்க வல்லவர் தாமே. ஆயினும் மிகாமலுங் குறையாமலும் இந்த ஏழும் உண்டாக்கின காரணமே தென் றால், உண்டாக்கினவர் திருவுளமே காரணமொழிய, வேறல்லாதிருந்தாலும், அவர் நீதி ஞானத்தை அறிந்து, துதிக்க நாமுங் குருடரெனினும் விசுவாசமே கண் காட்டியாகக் கொண்டுபோய் இதில் புகுந்து, தடவியாயினும் இந்த ஏழு தேவத்திரவிய அநுமானங்களை அவர் ஸ்தாபித்ததற்கு ஒத்த நியாயங்களைக் காண்போம்.

அப்படியே பாவத்தில் பிறந்த நாம் எல்லாரும் மறு படி ஞானத்தில் பிறக்க, ஞானஸ்நானமும் பிறந்த பின்பு துவளாமல் உறுதி பெறத் திரு எண்ணெய் பூசிக் கொடுக் கப்படும் உறுதிப்பூசுதலும், ஞானத்தில் நம்மை வளர்விக் குந் தேவ போசனமாக நற்கருணையும், பின்பு யாதொரு வியாதியைக் கொண்டாலும், திவ்விய மருந்தாகப் பச்சாத் தாபமும், சேவித்த பலனை அடையும் நாளாகிய மரணநேரத் தில் மனங் குழையாமல் பகைவராகிய பசாசுகளை வெல்வ தற்கு உறுதி பெற, அவஸ்தைப்பூசுதலும், நன்னெறியில் நம்மை நிறுத்தி, நடத்துந் தலைவராக மேற்றிராணியார் முதல் பல வரிசைக்கிரமக் குருக்களை ஸ்தாபிக்குங் குருத்துவமும், பூவுலகின் வாழ்வுகளில் இடறாமல் அறத் தோடு இல் வாழ்க்கைக் கூட்டி, வர்த்திக்க விவாகமும், இவை யாவையுந் தயாபரரான கர்த்தர் உண்டாக்கி, இவைக ளால் பொதுவில் எல்லாருக்குந் தனியே எவருக்கும் வேண் டின உதவி சகாயங்கள் எல்லாம் உண்டாகுமென்று சொன்ன ஏழு தேவத்திரவிய அநுமானங்களை மிகாமலுங் குறையாமலும் ஸ்தாபித்தார் என்று யோசிக்கக்கடவோம்.

98.- சொன்ன ஏழு தேவத்திரவிய அநுமானங்களில் ஞானஸ்நானம், உறுதிப்பூசுதல், குருத்துவம் இம் மூன்றும் ஆத்துமத்தில் அழிக்கப்படாத தேவ முத்திரையாக ஒரு ஞான அக்ஷரத்தைப் பதித்து வைக்குமென்பது திருச்சபை படிப்பிக்குஞ் சத்தியந் தானே. இந்த மூன்று தேவத்திர விய அநுமானங்கள் அந்த அக்ஷரம் இட்டதினாலேயும், இட்ட அக்ஷரம் எந்நாளும் அழியாததினாலேயும் இவை மூன்றினையும் ஒரு முறையொழிய மீளவும் வாங்கப்படா தென்று நம்மோடு பதிதருஞ் சொல்லுகிறார்கள். தேவ முத்திரையாகிய இந்த அக்ஷரத்தைப்பற்றி அர்ச். சின்னப் பர் எபேசியாருக்கு எழுதின நிருபத்தின் முதல் அதிகாரம் 13-ம் வசனத்தில் சேசுநாதர் பேரில் விசுவாசத்தைக் கொண்டு வார்த்தைப்பாடுகளுக்குத் தந்தபடி இஸ்பிரீத்து சாந்துவினால் முத்திரைப் பெற்றிருக்கிறீர்கள் என்றார். அதி லேதானே 4-ம் அதிகாரம் 30-ம் வசனத்தில் இஸ்பிரீத்து சாந்துவினால் முத்திரைப் பெற்றிருக்கிறீர்கள் என்றார்.

மீளவும் அவர் கொரிந்தியாருக்கு எழுதின 2-ம் நிரு பத்தின் முதல் அதிகாரம் 21-ம் வசனத்தில் நம்மை உறு திப்படுத்தினவரும், பூசினவரும், நமக்குத் தம் முத்திரை யிட்டவரும், உயிரிடத்தில் இஸ்பிரீத்து சாந்துவின் அடமா னத்தைத் தந்தவருஞ் சர்வேசுரன் தானே என்றார். இம் மூவிடத்திலேயுந் தரங்கம்பாடியார் முத்திரைப் பெற்றிருக் கிறீர்கள் என்னாமல், திடப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்று திருப்பினார்கள். ஆகிலும் அந்த முத்திரையால் நாம் திடப் படுவது நிச்சயந்தானே. வேதத்தில் எழுதப்பட்ட சொல் லோவெனில் முத்திரையும், அடையாளமும், அக்ஷரமு மென்று தமிழாகத் திருப்பலாமொழியத் திடமென்று சொல்லப்படாது.

அவர்களோவெனில் இந்தத் தேவ முத்திரை இல்லை யென்றதனால், தாங்களே வேத வசனங்களுக்கு ஒத்ததாய்ச் சொல்லித் தப்பிதங்களை மறுக்கமாட்டாமல், வேதமே தங்க ளோடொப்ப அதனை மாற்றி, முத்திரை என்னுஞ் சொல் லைத் திடமென்று வைத்தார்கள். ஆகிலும் இம்மூன்று தேவத்திரவிய அநுமானங்கள் ஆத்துமத்தில் அழியாத அக்ஷரத்தைப் பதியாதாயின், ஒரு முறையன்றி மீளவும் வாங்கப்படாததற்குக் காரணம் பதிதரே சொல்லக் கடவார் கள். பின்னையும் இந்த அக்ஷரங்களால் ஆகும் பலன் ஏதென் றால், ஞானஸ்நானத்தால் வரும் அக்ஷரம், மற்றத் தேவத் திரவிய அநுமானங்களுக்கு நம்மைப் பாத்திரமாகச் செய்ய வும், உறுதிப்பூசுதலினால் வரும் அக்ஷரம் நிந்தைக்கும், ஆக் கினைக்கும் அஞ்சாமல் வேண்டிய இடத்தில் பிடித்த வேதத்தின் சாட்சியாக நிற்க, மன ஊக்கத்தைக் கொடுக்கவும், குருத்துவத்தால் வரும் அக்ஷரம், பிறருக்கு மற்றத் தேவத் திரவிய அநுமானங்களைக் கொடுக்க வல்லமை பயக்கவும் முதற் பலனாமே.

2-வது. கிறீஸ்துவினால் வரும் அக்ஷரமாகையால் அவர் அழியாத சாயல் உயிரிடத்திலே தோற்றுவிக்கும்.

3-வது. கிறீஸ்துவின் சாயலாகக் கொள்ள மற்றவர்களுக் குள்ளே நம்மை வேறுபடத் தோன்றச் செய்யும் இந்த அக்ஷ ரங்களும் அழியாத ஆத்துமத்தோடு எக்காலத்தும் அழியா மல் மோக்ஷத்திலும், நரகத்திலும் தோன்றி நிற்கும். மோ க்ஷத்தில் தேவ நகையாக ஒளிபெறத் தோன்றி விளங்கும். நரகத்திலோவெனில் அந்த நன்றியறியாத பாவிகளிடத்தில் வெட்கமும், மன வருத்தமும் விளைவிக்கும் ஆக்கினையாக எவராலுந் தெளிவாய்க் காணப்படும். தேவததிரவிய அநு மானங்கள் விஷயத்தில் மாத்திரம் பதிதர் பிதற்றின அபத் தங்களைச் சொல்லி, ஒவ்வொன்றாய் மறுக்கவேண்டுமாகில், பல பெருங் கிரந்தங்களில் அடங்குந் தன்மை அல்லவென்ற தினால், இதில் நாம் சொல்லும் வேதத்தில் ஊன்றிய சத்தி யங்களும், அவர்கள் சாதித்த சலத்தில் ஊன்றிக் கக்குந் தப்பறைகளும் எவராலுங் காணப்படும்படிச் சொல்லிக் காட்டினது போதுமென்று இருக்கிறோம்.

திவ்விய நற்கருணைக்கடுத்த சில விசேஷங்களை மாத்திரம் வரும் அதிகாரத்தில் சொல்லிக்காட்டுவோம். மற்றப் படித் தேவ பொன் மலையின் சுனையாகச் சேசுநாதர் தாமே நமக்காகச் சிந்தின திவ்விய இரத்தயே ஏழு தேவத்திரவிய அநுமானங்கள் வழியாய், ஏழு ஆறாகப் பிரிந்தோடி, இஷ் டப்பிரசாதம் முதல் பல வரங்களை ஒளிமங்காத மணிகளா கக் கொழித்து, வயல்கள் தோறும், சோலைகள் தோறுங் குளிர்படப் பாய்ந்து, விசுவாசமுதல் பல சுகிர்த புண்ணி யங்களைப் பலன்களாக விளைவித்துத் திருச்சபையைத் தேவ பூங்காவனமாகச் சிறப்போடு அலங்கரித்துக்கொண்டு வருவது நிச்சயந்தானே.

பதிதரோவெனில் இந்தப் பூங்காவனமாகிய திருச்ச பையை விட்டு அகன்று போய்ச் சுடும் பாலை நிலத்தில் கிடந்து காமம், கோபம், பகை, பழி ஆங்காரஞ் சுடச்சுட நெஞ்சில் வெந்து வருந்துமளவில் தங்கள் மனதைக் குளிர்ப் பிக்க ஒன்றும் இல்லாமையால் பெரியோர் சொல்வதைக் கண்டு பொறுக்கமாட்டாத சிறியோரைப் போல , உரோ மான் திருச்சபையில் சகல நன்மை விளைவிக்கும் ஏழு ஆறாக உள்ள ஏழு தேவத்திரவிய அநுமானங்களில் சிலவை இல்லை யென்று சாதித்தும், சிலவை உண்டென்றாலுந் தங்கள் வாய் நஞ்சினைக்கலந்து அவைகளைக் கெடுக்கவும் பிர யாசப்படுவார்கள். ஆகிலும் அர்ச். மத்தேயு சுவிசேஷத் தின் 16-ம் அதிகாரம் 18-ம் வசனத்தில் எழுதினபடியே சேசுநாதர் மாறாமற் செய்யும் உதவியைக்கொண்டு, பசாசினால் வெல்லப்படாத திருச்சபைமேல் ஆண்டவர் வைத்த தயை மாறவும், செய்யுஞ் சகாயங்கள் குறையவும், விளைவிக்கும் நன்மை மெலியவும், பாவிகளால் ஆகுந்தன்மையோ? வச்சிரத்தைக் கடித்த பல்லு உதிருமொழிய, வச்சிரம் என்றுங் குன்றாதொளிருமென்பது நிச்சயந்தானே.