1-ம், 2-ம், 3-ம் வேத கற்பனைகளில் பேரில்

124. மோட்சத்தை அடைகிறதற்கு வேதசத்தியங்களை விசுவசிக்கிறதல்லாமல் இன்னும் செய்யவேண்டிய தென்ன? 

சர்வேசுரனுடைய கற்பனைகளையும், திருச்சபையின் கட்டளை களையும் அனுசரித்து பாவத்தைத் தள்ளி புண்ணியத்தைச் செய்யவும் வேண்டியது, 


125. சர்வேசுரனுடைய கற்பனைகள் எத்தனை?

பத்து. 


126. பத்துஞ் சொல்லு.

சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேதகற்பனைகள்...


127. முதல் கற்பனையால் சர்வேசுரன் நமக்குக் கற்பிக்கிறதென்ன? 

தம்மை ஏக கர்த்தர் என்று சொல்லி தம்மை விசுவசிக்கவும், நம்பவும், சினேகிக்கவும், ஆராதிக்கவும் வேண்டுமென்று கற்பிக்கிறார். 


128. முதல் கற்பனையால் விலக்கப்பட்ட பாவங்கள் எவை?

தேவ ஆராதனைக்கு விரோதமாயிருக்கிற விக்கிரக ஆராதனை, அஞ்ஞான சாஸ்திரம், பேய் ஊழியம், தேவ துரோகம், தேவ ஊழியத்தில் அசட்டைத்தனம் முதலியவைகளாம். 


129. தேவ தூதர்களுக்கும் அர்ச்சிஷ்டவர்களுக்கும் நாம் செலுத்துகிற வணக்கம் தேவ ஆராதனையோ? 

இல்லை. நாம் அவர்களை வணங்கும்போது அவர்கள் பரிசுத்தவான்களும், சர்வேசுரனுடைய சிநேகிதரும் என்கிற முறையில் வணங்கி வேண்டிக்கொள்கிறோமேயொழிய அவர்களை சர்வத்துக்கும் கர்த்தா என்ற முறையில் வணங்குவதில்லை.


130. திருச்சபையில் வழங்குகிற படம், சுருபங்களையும், திருப்பண்டங்களையும் வணங்குகிறது விக்கிரக ஆராதனையோ?

அல்ல. ஏனெனில் அவைகளை வணங்குவது அவைகளால் குறிக்கப்பட்ட அர்ச்சியசிஷ்டவர்கள் முதலானவர்களின் பேரில் வைக்கவேண்டிய பக்தியின் தூண்டுதலேயொழிய விக்கிரக ஆராதனையல்ல.


131. இரண்டாங்கற்பனையால் விலக்கப்பட்ட பாவங்கள் எவை? 

தேவதூஷணமாய்ப் பேசுவதும். சாபாணையிடுவதும், பொய்யாணை: பொய்ச்சத்தியம் செய்வதும், நியாயமான சத்தியப் பிரமாணங்களையும், பொருந்தனைகளையும் செலுத்தாமல் இருப்பதும் முதலியவைகளாம்.


132. மூன்றாம் கற்பனையால் சர்வேசுரன் நமக்கு கற்பிக்கிறதென்ன? 

தேவ ஆராதனை செய்வதற்குக் குறிக்கப்பட்ட நாட்களை பரிசுத்தப்படுத்தவும். அந்த நாட்களில் வேலை செய்யாமல் இருக்கவும் வேண்டுமெனக் கற்பிக்கிறார்.


133. சர்வேசுரனுடைய திருநாட்கள் எவை?

ஞாயிற்றுக்கிழமைகளும், கடன் திருநாட்களும்,


134. மேற்படி திருநாட்களை அனுசரியாத கிறிஸ்தவர்களுக்கு சாதாரணமாய் வரும் கேடென்ன? 


அவர்கள் ஆத்துமத்திற்குப் பாவதோஷமுண்டாவதும் அல்லாமல், அவர்கள் குடும்பங்களில் நிற்பாக்கியமும் வறுமையும் உண்டாவது வழக்கம்.