பொதுத்தீர்வையின் பேரிலும் நித்திய சீவியத்தின் பேரிலும்.

117. தனித்தீர்வை அல்லாமல் வேறே தீர்வை உண்டோ?

பொதுத் தீர்வை உண்டு,


118. பொதுத்தீர்வை எப்போது நடக்கும்?

உலகத்தின் முடிவில் நடக்கும். 


119. உலகம் எப்படி முடியும்?

உலகமெல்லாம் நெருப்பினாலே வேக, மனுஷர் எல்லோரும் செத்துப் போவார்கள். 


120. பின்னும் என்ன சம்பவிக்கும்?

யேசுநாதர்சுவாமி மனுஷர் எல்லோரையும் ஆத்தும சரீரத்தோடு கூட எழுப்பி மிகுந்த வல்லபத்தோடு நடுத்தீர்க்க வருவார்.


121, எப்படி நடுத்தீர்ப்பார்?

அவனவன் செய்த பாவ புண்ணியங்களை எல்லாம் சகலருக்கும் முன்பாக அறியப்பண்ணி பாவிகளை சபித்து நரகத்திலே தள்ளி நல்லவர்களை ஆசீர்வதித்து மோட்சத்துக்குக் கூட்டிக்கொண்டு போவார். 


122. பாவிகள் நரகத்திலே படுகிற ஆக்கினை என்ன?

சர்வேசுரனை ஒருக்காலும் காணாமல் ஊழியுள்ளகாலம் பசாசுகளோடு நெருப்பில் வெந்து, சகல ஆக்கினைகளையும் அனுபவிக்கிறார்கள்.


123. நல்லவர்கள் மோட்சத்திலே அனுபவிக்கிற பாக்கியமென்ன? 

சர்வேசுரனை முகமுகமாய்த்தரிசித்து எப்போதைக்கும் சகல பேரின்ப பாக்கியங்களையும் அனுபவிக்கிறார்கள்.