அர்ச். இஞ்ஞாசியார் செய்த ஜெபம்

ஆண்டவரே! எனக்கிருக்கும் சுயாதீனம் முழுவதையும் தேவரீர் எடுத்துக் கொள்வீராக. என் ஞாபகம், புத்தி, மனது முழுதும் கையேற்றுக் கொள்ளும். என்னிடத்தில் எதெது உண்டோ எனக்கு எதெது சொந்தமோ அவையயல்லாம் தேவரீர் தாமே எனக்குத் தந்தருளினீர்.  இவை யாவையும் உமக்குத் திரும்பவும் நான் ஒப்புக் கொடுத்து விடுகிறேன்.  இவைகளை உமது பூரண சித்தப் பிரகாரம் முற்றும் நடத்துவீராக.  உமது சிநேகம் ஒன்றை மாத்திரம் உமது இஷ்டப் பிரசாதத்தோடு தருவீராக.  நானோ போதுமான மட்டும் ஆஸ்தியுள்ளவனாயிருப்பேன்.  இதைத் தவிர வேறு யாதொன்றும் உம்மிடத்தில் நான் கேட்கவே மாட்டேன்.  

ஆமென்.