அர்ச். செபஸ்தியார் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

வேதசாட்சிகளுக்கு இராக்கினியாகிய அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். செபஸ்தியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உயர்ந்த கோத்திரத்தின் பிரதாப மகிமையான அர்ச். செபஸ்தியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது பிறப்பினால் நர்போன் என்கிற பட்டணத்தை முக்கியப்படுத்தினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இத்தாலி தேசத்தில் அதிசய புண்ணியப் பிரகாசத்தினால் விளங்கினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வேதத்துக்காக துன்பப்பட்ட விசுவாசிகளுக்கு ஆதரவாயிருக்கப் படையில் சேவித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அஞ்ஞான இருளில் ஞானக்கதிராய் பிரகாசித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தரித்திரர்களுக்கு உதார தகப்பனாயிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நிர்ப்பந்தங்களுக்குள் தத்தளித்த வேதசாட்சி களுக்குப் புத்திமதி சொல்லி திடப்படுத்திப் பரகதியில் சேர்ப்பித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆச்சரியத்துக்குரிய ஞானத்தோடும், தைரி யத்தோடும் வேத சத்தியங்களைப் பிரசங்கித் தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அநேக அற்புதங்களால் சேசுக்கிறீஸ்துவி னுடைய வேத விசுவாசத்தை விளங்கப் பண்ணி னவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வாக்கினாலும் கிரிகையினாலும் வல்லவரா யிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சத்தியத்துக்காக உபத்திரவப்பட்டவர்களுக்கு மிகுந்த தைரியத்தை வருவித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வேதசாட்சிகளுக்குத் தங்கள் வேதனைகளி லும் மரண வேளையிலும் பலமும் தேற்றரவுமா யிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அநேகர் வலிய வேதசாட்சிகளாவதற்கும், மோட்ச இராச்சியத்தை அடைவதற்கும் எத்தன மாயிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திடமான விசுவாசத்தினாலும் சுகிர்த ஒழுக் கத்தினாலும் யாவருக்கும் நல்ல மாதிரிகையா யிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தருமக் கண்ணாடியானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பக்தி நிறைந்த வாக்கியங்களால் அநேகர் இருதயத்தில் தேவசிநேக அக்கினியை மூட்டி வளர்த்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அஞ்ஞானியான அநேகருக்குச் சத்தியத்தைத் தெளிவித்து ஞான தீட்சை பெறுவித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பேர்பெற்ற பெரிய உத்தியோகஸ்தரை முதலாய் அஞ்ஞானத்தினின்று திருப்பிச் சத்திய திருச்சபையில் சேர்ப்பித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அதிசயமான சகல புண்ணியங்களிலும் தைரிய வீரசூரத்திலும் அதிகரித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விசுவாசிகளுக்கு உதவியாகச் சக்கரவர்த்தி யான உரோமாபுரி இராயனிடத்தில் சேனைத் தலைவராகத் தேவ கிருபையால் உயர்த்தப் பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வேசுரனுக்கும் மனிதர்களுக்கும் மிகவும் பிரியப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சத்திய திருச்சபைக்கு தஞ்சமாய் இருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். பாப்பானவருக்கு மிகவும் இஷ்டமும் ஆறுதலும் அகமகிழ்ச்சியுமாயிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிலுவை அடையாளத்தால் திமிர்வாதத்தை நீக்கினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஊமையை பேசுவித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அதிசயமாக அநேக வியாதிகளை தீர்த்து ஆரோக்கியம் கொடுத்த உத்தம வைத்தியரே,

எண்ணப்படாத புண்ணிய நன்மை அற்புதங் களைச் செய்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசாசுகளுக்குப் பயங்கரமான சாட்டையா யிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகம், பசாசு, சரீரத்தின் தந்திரங்களையயல் லாம் ஜெயித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாளையத்திலும் அழியாத கற்பினால் விளங் கினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அத்தியந்த விசுவாசத் திடனை உடைத்தானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இடைவிடாமல் தேவசிநேக அக்கினியால் எரிந்த ஞான சூளையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலக மகிமை பெருமை ஆஸ்தி சுகமெல்லாம் புறக்கணித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதருடைய சிநேகத்தைப் பற்றிப் பூச்சக்கர வர்த்தியான இராயனுடைய சிநேகத்தையும் அவன் தந்த மேலான உத்தியோகங்களையும் இகழ்ந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதரைப் பற்றி பிராணனைத் தர மிகவும் அபேட்சித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சத்திய வேதத்தை அநுசரித்ததைப் பற்றி இராயனால் மரணத் தீர்வையிடப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திரளான அம்புகளால் எய்யப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அம்புகளால் ஊடுருவப்பட்டு மரித்தவராக எண்ணி விடப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உயிர் பிழைத்து மறுபடியும் அதிசய தைரியத் துடனே இராயன் முன்னிலையில் போய் அவன் கிறீஸ்தவர்களை வாதித்த அநியாய குரூரத்தின் பேரில் கண்டித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குரூரமாறாத இராயன் கட்டளையால் சாட்டை கசைகளையும் பெருந்தடிகளையும் கொண்டு கொல்லப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எந்த நிர்ப்பந்தத்துக்கும் அஞ்சாதவராகிய வேதசாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விசுவாசத்தில் ஒருபோதும் தத்தளியாத வேத சாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது இரத்தத்தால் கிறீஸ்தவ வேதத்தை மெய்ப்பித்த உத்தம வேதசாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அத்தியந்த தைரிய சந்தோ­த்துடனே வேதத் துக்காகப் பிராணனைத் தந்த வேதசாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தரிசனையில் ஏவுதலைப் பெற்ற ஒரு புண்ணிய தலைவியால் மிகுந்த பூச்சியத்துடன் அடக்கம் பண்ணப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மோட்ச இராச்சியத்தில் சர்வேசுரனால் அத்தியந்த ஜோதி மகிமையுள்ள வேதசாட்சி முடிசூட்டப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வேதசாட்சிகளுக்குள் விசேஷ மகிமைப் பிரதாபத்துடனே பிரகாசிக்கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது மன்றாட்டின் உதவியால் உரோமாபுரி முதலிய பட்டணங்களினின்று கொள்ளை நோய் பெருவாரிக் காய்ச்சல் நீங்கினதினால் மிகவும் பேர் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பூலோகமெங்கும் சுகிர்த வாசம் பரிமளிக்கிற நாமமுடைத்தானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல கிறீஸ்தவர்களுக்கும் தயை நிறைந்த தகப்பனானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வைசூரி முதலிய வியாதி துன்பத்தில் ஆதரவும் அடைக்கலமுமாயிருக்கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக, அர்ச். செபஸ்தியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லபமுள்ள சர்வேசுரா சுவாமி!  எங்கள் இக்கட்டுக்களையும் பலவீனத்தையும் கிருபையுடனே பார்த்து, அடியோர்கள் செய்த பாவங்களின் கனத்தினால் எங்களுக்கு வந்திருக்கிற துன்பதுரித வருத்தங்களின் பேரில் சித்தமிரங்கி, அர்ச். செபஸ்தியாருடைய மன்றாட்டினால் எங்களுக்கு வேண்டிய ஆறுதலும் ஆதரவும் கிடைக்கும்படிக்குக் கிருபை செய்தருள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். 

ஆமென்.