அர்ச். செபஸ்தியாருக்கு 7 மன்றாட்டு

1. பிதாவின் சித்தத்தினாலே உயர்ந்த குலத்தினரான தாய் தகப்பனிடத்திலே பிறந்து எண்ணப்படாத புண்ணிய நன்மைகளைச் செய்து வேதத்துக்காகத் துன்பப்பட்ட கிறீஸ்துவர்களுக்காக படையில் சேவித்தவரான அர்ச். செபஸ்தியாரே, சத்திய திருச்சபையார் எல்லாரையும் சகல பொல்லாப்புகளிலே நின்று சர்வேசுரன் இரட்சித் தருள வேணுமென்று பரம கர்த்தர் சந்நிதியில், நீர் மன்றாட வேணுமென்று உம்மைப் பார்த்துப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

2. ஆச்சரியத்துக்குரிய ஞானத்தோடும், தைரியத்தோடும் அநேக அஞ்ஞான இராஜாக்களுக்கும், பிரபுக்களுக்கும் சத்திய வேதத்தைப் பிரசங்கித்து புத்திமதி சொன்னவரான அர்ச். செபஸ்தியாரே, இத்தேச முதலிய இராச்சியங் களில் பசாசின் ஆராதனை ஒழிந்து எல்லாரும் சத்திய வேதம் அறிந்து ஞானஸ்நானம் பெற்று திருச்சபைக்குள்ளாகத்தக்கதாக, நீரே சர்வேசு ரனை மன்றாடும்படி உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

3. அர்ச். பாப்பானவருக்கு மிகவும் பிரியமும் ஆறுதலும் அகமகிழ்ச்சியும் உரோமாபுரி முதலிய இராச்சியங்களில் விஷநோய் முதலானவைகளை நீக்கினவருமான அர்ச். செபஸ்தியாரே, இத் தேசங்களில் கிறீஸ்துவர்களுக்குள்ளே பஞ்சம், படை, கொள்ளை நோய் முதலான வியாதியில்லாமல் காப்பாற்றி இரட்சித்தருள வேணுமென்று நீரே எங்களுக்காகப் பரம கர்த்தரை வேண்டிக் கொள்ளும் பொருட்டு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

4. சர்வேசுரனுக்குப் பிரியமாகவும், வேதத் துக்காகத் துன்பப்படுகிற விசுவாசிகளுக்கு உதவி யாகவும், வியாதிக்காரருக்கு தேவ கிருபையால் ஆரோக்கியம் கொடுத்த அர்ச். செபஸ்தியாரே, கிறீஸ்தவர்களுக்கு வி­பேதி, வாந்தி, வைசூரி, வியாதியில்லாமல் பரம கர்த்தர் தற்காத்து இரட்சித் தருள வேணுமென்று தேவ கிருபை சிம்மாசனத் தில் மன்றாட வேணுமென்று உம்மைப் பிரார்த் தித்துக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

5. பூலோகமெங்கும் சுகிர்த நாமமுடைத் தானவருமாய், சத்திய திருச்சபைக்குத் தஞ்சமு மாய் இருந்த அர்ச். செபஸ்தியாரே, திருச்சபைக்கு விரோதம் செய்கிறவர்களுக்கு சர்வேசுரன் நல்மனது கொடுத்தருளவும், இந்த இராச்சியத் துக்கு வேண்டிய சத்திய சற்குருக்களுக்குண்டாகி ஈடேற்ற நெறியில் எங்களை நடப்பிக்கவும், சர்வேசுரனை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த் தித்துக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

6. உலக மகிமை பெருமை ஆஸ்தி செல்வமெல்லாம் வெறுத்து சேசுநாதரைப் பற்றிப் பிராணனைத் தர, அத்தியந்த விசுவாசத்துடனே மாற்கு, மார்செல்லியனுக்குப் புத்தி சொல்லும் போது ஏழு சம்மனசுக்களுடன் சேசுநாதர் வந்து, உம்மை முத்தி செய்து நம்மோடுகூட இருப்பாய் என்று சொல்லக் கேட்டு சந்தோ­த்தையடைந்த அர்ச். செபஸ்தி யாரே, நாங்களெல்லோரும் பாவமில்லாமல் புண்ணிய வழியிலே சாங்கோபாங்கமாய் நடந்து பேரின்ப மோட்ச இராச்சியத்தில் சேர்ந்து கர்த்த ரிடத்தில் அத்தியந்த கிருபை பெறத்தக்கதாக, நீரே அவரை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த் தித்துக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

7. உரோமாபுரி தியோக்கிளே´யனென்ற இராயனால் அநேக அம்புகளால் எய்யவும், சாட்டை, கசை, பெருந்தடிகளால் அடித்துக் கொல்லவும்பட்டு மோட்ச இராச்சியத்தில் சர்வேசுரனால் அத்தியந்த ஜோதி மகிமையுள்ள வேதசாட்சி முடி சூட்டப்பட்டு உமது திருச் சரீரத்தை அப்போஸ்தலர்களான அர்ச். இராயப் பர், சின்னப்பர் கல்லறைக்கருகே அடக்கம் செய்யப்பட்ட அர்ச். செபஸ்தியாரே, திருச் சபையார் எல்லாரும் சர்வேசுரனுடைய சித்தத்துக் கேற்ப நடக்கத்தக்கதாகவும், சகல வியாதிகளிலும் எங்களை விலக்கி இரட்சிக்கத் தக்கதாகவும், உமது வேண்டுதலின் பலன் எங்களுக்கு எப்போ தும் கிடைக்கத்தக்கதாகவும், நீரே சர்வேசுரனை மன்றாடும்படிக்கு உம்மைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். பர. அருள். திரி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத் தக்கதாக, அர்ச். செபஸ்தியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

கிருபை தயாளம் நிறைந்த சர்வேசுரா சுவாமி, உமது அதி உச்சிதமான மகிமை பெற்ற அர்ச். செபஸ்தியார் உமக்காகப் பட்ட பிரயாசங்களை தேவரீர் பார்த்து, அவர் சிந்தின உதிரம் எங்கள் ஆத்தும சரீர நோய்களுக்குச் சரியான மருந்தாகத் திருவுளமானீரே. அவரது பேறுபலன்களைப் பார்த்து எங்கள் ஆத்தும வியாதியையும், சரீரத்தில் உண்டாகிற சகலவித வருத்தங்களிலும், வைசூரி, விஷபேதி முதலிய தொத்து வியாதி களிலும் நின்று நிவாரணமாக்கியருள வேணு மென்று இந்த ஏழு மன்றாட்டுகளையும் குறித்து உம்மை மன்றாடுகிறோம்.  இந்த மன்றாட்டு களையயல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும் சுவாமி.  

பரலோக மந்திரம்.

ஆமென்.