வானமும் பூமியும் படைத்த சர்வேசுரனுடைய நாமத்தினால் எங்களுக்கு சர்வ சகாய நன்மையும் உண்டாவதாக.
சுவாமி எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும். என் அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது.
பிரார்த்திக்கக்கடவோம்
ஆண்டவரே! நாங்கள் செய்கிற வேண்டுத லைத் தேவரீர் தயாளக் கருணையால் கேட்டருள மன்றாடுகிறோம். அதேதெனில் எங்கள் பாவங் களுக்கு நீதியுள்ள ஆக்கினையாக வந்த இந்த பூச்சிகளுடைய நெருக்கிடையை உமது கருணா கடாட்சத்தால் நோக்கி உமது திருநாமத்திற்குப் புகழ்ச்சி உண்டாகும்படிக்கு அவைகளை நீக்கி யருளும். அப்படியே இந்தத் துஷ்டப் பூச்சிகள் உமது ஆணையின் பலத்தினால் தூரத் தள்ளுண்டு போகவும், இந்தப் பயிர்கள் விக்கினமின்றி நன்றாக விளையவும், இதில் உண்டாகிற பலனும் உமது பணிவிடைக்கும் எங்கள் பிழைப்புக்கும் பிரயோ சனமாகவும் கிருபை செய்தருளும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசு கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும்.
ஆமென்.