வயது சென்றவர்கள் செபிக்கத்தக்க ஜெபம்

ஆண்டவரே! என் காலங்களெல்லாம் என்ன வகையாய்ப் போனதென்று அறியேன்!  இப்போது தான் பிறந்து விளையாடிக் குடித்தனக் காரியங்களைச் செய்து கொண்டிருந்ததாக என் ஞாபகத்தில் இருக்கின்றது. இந்தச் சொற்ப காலத்தில் எத்தனையோ விசை என் வாக்கினாலும் கிரியை களினாலும் வீணாசைகளினாலும் உமக்குத் துரோகம் பண்ணினேன். இப்போது எனக்குக் கல்லறை கிட்டி வருகிறது.  பயங்கரமான நடுத் தீர்வையிலே என்ன  சொல்லப் போகிறேனென்று பயப்படுகிறேன்.  நான் செய்த பாவங்களினாலே என் புத்தி சித்தமானது அழுக்கடைந்து போயிருப்பதால் கடைசி காரியங்களைத் தெளிவாய்ச் சரியாய் யோசித்துத் தியானிக்க முதலாய் அறியேன்.  ஆகையால் தேவரீர் என் பேரில் கிருபை கூர்ந்து நான் சாகுமுன் என் பாவங்களை நினைத்து அழுது பிரலாபித்து அவைகளுக்கான தபசு செய்து உமது நீதிக்கு உத்தரித்து நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து அவஸ்தைப் பூசுதலைப் பெற்று நல்ல மரணமடைய அனுக்கிரகம் செய்தருள உம்மை மன்றாடுகிறேன்.

ஆமென்.