பஞ்சகாலத்தில் வேண்டும் ஜெபம்

எலிசே என்னும் தீர்க்கதரிசியின் காலத்தில் சமாரியா பட்டணத்திலே கடும் பஞ்சத்தைச் சடுதியில் அகற்றி மலிவுண்டாகச் செய்தருளின இரக்கமுள்ள பிதாவே!  எங்கள் பாவங்களினிமித்தம் தண்டனையாக வெகு வருத்தப்படுகிற எங்களுக்கும் காலத்துக்குத் தகுந்த சகாயம் கிடைக்கும்படி இரக்கம் செய்தருளும்.  உமது பரம ஆசீர்வாதத்தினால் பூமி அதிக பலனைத் தரும்படி செய்து தேவரீர் உதாரமாய்க் கொடுக்கும் நன்மையைப் பெற்றுக் கொள்ளுகிற நாங்கள் உமக்கு மகிமையும் ஏழைகளுக்கு உதவியும் ஆறுதலுமாயிருக்கத் தக்கதாக, அதை அனுபவிக்க எங்கள் கர்த்தராகிய சேசுக்கிறீஸ்துவின் நிமித்தம் அநுக்கிரகம் செய்தருளும்.

ஆமென்.