சேசுவின் திரு இருதயமே! அமலோற்பவ கன்னி மாதாவின் திரு இருதயமே! ஓ! மிகுந்த மகிமைப் பிரதாபம் பொருந்திய அர்ச். சூசையப்பரே! உங்கள் அடைக்கலமாக ஓடிவந்து உபகார சகாயங்களை இரந்து மன்றாடிக் கேட்ட எவனும் அந்த மன்றாட்டுகளை அடையாமல் போனதில்லையயன்று நினைத்தருளுங்கள். இப்பேர்ப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு என் பாவச்சுமையோடே உங்கள் பாத சந்நிதானத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து பிரார்த்திக்கிறேன்.
இரக்கமுள்ள சேசுவின் திரு இருதயமே! அமலோற்பவக் கன்னிமாதாவின் திரு இருதயமே! ஓ! மகிமைப் பிரதாபம் பொருந்திய அர்ச். சூசையப்பரே! அடியேனுடைய மன்றாட்டுக்களைப் புறக்கணியாமல் தயவாய்க் கேட்டுத் தந்தருளுங்கள்.
ஆமென்.