திருக்குடும்பத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அவதரித்த தேவ வார்த்தையின் திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

பூவுலகில் அர்ச். தமத்திரித்துவத்தின் பாவனையாகிய திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

பரம தேவபிதா அத்தியந்த பிரியத்துடனே நேசித்த திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

சகல வரப்பிரசாதங்களாலும் நிறைந்து அலங்கரிக்கப்பட்ட திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

எல்லாப் புண்ணியங்களுக்கும் உத்தம மாதிரிகையே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

எல்லா இருதயங்களின் நேசத்துக்கும் பாத்திரமான திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

மோட்சத்துக்கு நியமிக்கப்பட்டவர்களுடைய ஞானப் பொக்கிஷமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

பரலோகத்தின் பேரின்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

சகல சம்மனசுக்களாலும் வணங்கப்பட்ட திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

மனிதர்களால் நிந்திக்கப்பட்டிருந்தாலும் தேவ சமூகத்தில் உன்னத மாட்சிமை பொருந்தின திருக்குடும்பமே, எங்களை இரட்சித்துக் கொள்ளும்.

பெத்லகேம் ஊரார்களால் புறக்கணிக்கப் பட்டு ஒரு மாட்டுக் கொட்டிலில் ஒடுங்கிப் போக அவசரப்பட்ட திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

திவ்விய இரட்சகர் பிறந்த சமயத்தில் இடையர்களால் சந்திக்கப்பட்ட திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

பிறந்த திவ்விய குழந்தைக்குத் தோத்திரமாக சம்மனசுக்கள் பாடின சங்கீதங்களைக் கேட்ட திருக்குடும்பமே, எங்களை இரட்சித்துக் கொள்ளும்.

மூன்று இராஜாக்களால் வணங்கிப் பாத காணிக்கை ஒப்புக்கொடுக்கப்பட்ட திருக் குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

தேவாலயத்தில் திவ்விய பாலனை ஏந்தின சிமியோனென்கிற தீர்க்கதரிசி அவரைக் குறித்துச் சொல்லிய ஸ்துதிகளையும் தீர்க்கதரிசனங்களையும் கேட்டுச் சந்தோஷமும் துயரமும் பட்ட திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

எண்ணிறந்த ஆபத்துக்குள்ளே எகிப்து தேசத் துக்கு ஓடிப்போகக் கட்டளையிட்ட சம்மனசின் வாக்கியத்துக்குத் தாமதமின்றி கீழ்ப்படிந்த திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

ஏரோதென்கிற இராசாவின் கொடுமைக்குத் தப்பித்துக் கொள்ள அந்நிய தேசத்துக்கு ஓடிப் போகக் கட்டாயப்பட்ட திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

அந்நிய தேசத்தில் பரதேசியான திருக் குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

பூலோகத்துக்குத் தெரியப்படாமல் மறைந்த தன்மையாய்ச் சீவித்து வந்த திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

தரித்திரமும் உழைப்பும் தவமுமுள்ள சீவிய மாய்ச் சீவித்த திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

நெற்றி வேர்த்து அன்னம் சம்பாதித்துக் கொண்ட திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

பிரபஞ்ச நன்மை வறுமையும் பரலோக நன்மை மிகுதியும் கொண்டிருந்த திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

பிறர் சிநேகத்துக்கும் சமாதான ஒற்றுமைக் கும் மாதிரிகையான திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

நினைப்பினாலும் மனப்பற்றுதலினாலும் முழுதும் பரலோகத்தில் சஞ்சரித்திருந்த திருக் குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

உமது ஆயுள் முழுமையும் இடைவிடாத செப மும் ஞானயோகமுமாயிருந்த திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலும் உம்மை மன்றாடுகிறவர்களின் நம்பிக்கையும் எல்லாக் கிறீஸ்தவர்களின் குடும்பங்களுக்குச் சுகிர்த மாதிரிகையுமாகிய திருக்குடும்பமே, எங்களை  இரட்சித்துக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும். சேசுவே, எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

எங்களாண்டவரும் சர்வேசுரனுடைய ஏக குமாரனுமாகிய திவ்விய சேசுவே!  எங்கள் பேரில் வைத்த தயை நேசத்தைப் பற்றிக் குழந்தையாய்ப் பிறந்து உம்முடைய திருமாதாவாகிய அர்ச்சிய சிஷ்ட கன்னிமரியம்மாளுக்கும் அர்ச்சியசிஷ்ட சூசையப்பருக்கும் தாழ்ச்சியாய்க் கீழ்ப்படிந்து முப்பது வருஷ காலம் பூலோகத்துக்கு மறைந்த தரித்திர சீவியமாய்ச் சஞ்சரிக்கத் திருவுளமானீரே.  அடியோர்கள் பரலோகத்தில் உமது மகிமைக்குப் பங்காளிகளாகத்தக்கதாக, இவ்வுலகத்தில் உமது ஆழ்ந்த தாழ்ச்சியைக் கண்டுபாவிக்க எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும். அநவரத சதாகாலமும் பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் சுயஞ்சீவியராய் இராச்சியபாரம் பண்ணுகிற ஆண்டவரே.  

ஆமென்.