முதல்: செளக்கியனாய் சீவிக்கவும் கடைசியாய் சீவியகாலத்தின் பாக்கியமான முடிவை அடையவும் விரும்புகிறவன் எவனோ அவன் அர்ச். சூசையப்பரின் உதவியைக் கேட்கக்கடவான்.
சபை: செளக்கியனாய்... மற்றதும்.
முதல்: இவர் தயாள திருக்கன்னியின் மாசற்ற பத்தாவும் சேசுவின் பிதாவாக எண்ணப்பட்டவரும் நீதிமானும் பிரமாணிக்கரும், பரிசுத்தருமாகையால் தாம் மன்றாடிக் கேட்பதையயல்லாம் பெற்றருளுகிறார்.
சபை: செளக்கியனாய்...
முதல்: காய்ந்த புல்லின் மேல் வளர்த்தப்பட்ட பாலனை ஆராதித்தவரும் பின்னும் பரதேசத்தில் அத்திருப்பாலனைத் தேற்றினவரும் பின்பு காணாமல்போன அவரைத் துயரத்தோடு தேடிக் கண்டவரும் இவரே.
சபை: செளக்கியனாய்...
முதல்: உலகத்தை சிருஷ்டித்த பரம கர்த்தர் இவருடைய கைத்தொழிலால் அமுது கொண்டார். பரம பிதாவினுடைய சுதன் இவருக்குக் கீழ்ப்படிந்து ஏவல் செய்தார்.
சபை: செளக்கியனாய்...
முதல்: சேசுநாதரும் தேவமாதாவும் தமக்கு மரணவேளையில் உதவியாய் நிற்கிறதைக்கண்டு அவர்கள் திருக்கரங்களில் அகமகிழ்ச்சியுடன் இன்பமான நித்திரை கொண்டாற்போல் ஜீவித்தார்.
சபை: செளக்கியனாய்...
முதல்: பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்துவுக்கும் தோத்திரம் உண்டாகக்கடவது.
சபை: செளக்கியனாய்...
முதல்: ஆதியிலே இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் அநாதி சதாகாலமும் இருக்கும்படியே. ஆமென் சேசு...
சபை: செளக்கியனாய்...
முதல்: நாங்கள் சேசுகிறீஸ்துவின் வாக்குத்தத் தங்களுக்குப் பாத்திரவான்களாகத்தக்க தாக,
சபை: அர்ச்.சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.