அர்ச். தோமையார் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தேவ தாயாரை மிகவும் சிநேகித்த அப்போஸ் தலரான அர்ச்சியசிஷ்ட தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கலிலேயா இராச்சியத்திலே உயர்ந்த கோத்திரத்தில் பிறந்த அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நித்திய சமாதானத்துக்குரிய சுவிசேஷத்தைப் போதித்த அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பால வயதிலேயே தந்தையின் சொற்படியே அவர் தொழிலை நடப்பித்துக் கொண்டு வந்த அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் மெய்யாகவே உலக இரட்சகரென்று விசுவசித்த அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் தம் சீடர்களுக்குள்ளே ஒருவராகத் தெரிந்து கொண்ட அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் உயிர்த்தெழுந்த பிற்பாடு நான் அவருடைய திருக்காயங்களில் என்னுடைய விரலை வைத்துப் பார்த்தாலொழிய விசுவசியே னென்ற அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவர் உமக்கு தரிசனையாகவே அவரைக் கண்டு மகிழ்ந்து என் தேவனே, என் ஆண்டவரே என்று சொன்ன அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் தோமையே, நீ கண்டு விசுவசித் தாய், காணாமல் விசுவசிக்கிறவர்கள் பாக்கிய வான்கள் என்று சொல்லக் கேட்ட அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவமாதாவினுடைய அடக்கத்துக்கு மிகவும் ஆசையுடனே ஓடிவந்த அர்ச்.  தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இஸ்பிரீத்துசாந்துவினால் ஏவப்பட்டு அர்ச்.  தேவமாதாவும் அப்போஸ்தலர்களும் கூடிய சபையிலே மேதியா முதலான தேசங்களில் சுவிசேஷத்தைப் போதிக்கக் குறிக்கப்பட்ட அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இதைக் கேட்டு மகா பெரும் சந்தோஷத் தோடே சேசுநாதர் சுவாமிக்கு உயிரை ஒப்புக் கொடுத்து மகா பெரிய விருந்துக்கு அழைக்கப் பட்டவர்போல தமது இரத்தத்தைச் சிந்தி வேதத் துக்காகப் பிராணனைக் கொடுக்க ஆசித்தவரான அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பூலோகத்தில் உள்ள சகல வஸ்துக்களையும் உம்மையும்விட சர்வேசுரனை அதிகமாகச் சிநேகித்த அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அஞ்ஞான தேசங்களிலே உமக்கு வரப் போகிற நிர்ப்பந்தங்களையும் விக்கினங்களையும் யோசித்து சந்தோஷப்பட்ட அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது ஸ்தானத்தை விட்டு வேத ஜலங் கொண்ட மேகத்தைப் போல எழுந்து ஞான மழை பெய்த அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதரையும் தேவமாதாவையும் நினைத்து இரவும் பகலும் மோட்சத்தை நோக்கிக் கையேந்திக் கொண்டு இடைவிடாமல் செபம் பண்ணிக் கொண்டிருந்த அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இஸ்பிரீத்துசாந்துவினால் ஏவப்பட்டு சனங் களுக்குப் பிரசங்கம் பண்ணும்போது சம்மனசு போல காணப்பட்ட அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உயிரையும் உடலையும் தத்தம் பண்ணிப் படாதபாடுபட்டு, சனங்களை மெய் வேதத்தில் திருப்ப ஆசித்த அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மோட்சத்தின் வரங்களைத் தாங்கிய உன்னத மரக்கலமாகிய அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் பேரிலே வைத்த அன்பினால் அவரைப் பார்க்க வேணுமென்று உருக்கமாய் ஆசித்த அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதரை சேவித்த மூன்று சாஸ்திரிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்து அவர்களுக்கு வேத உபதேசம் பண்ணி வைத்த அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பத்திரியா தேசத்திலே ஞான சூரியனைப் போலே விளங்கி வரப்பிரசாத மழை வரு´த்து மகா அன்போடு சுவாமியை வேண்டிக் கொண்டு திரளான சனங்கள் வேத வெளிச்சத்தில் பிரவேசிக்கச் செய்த அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மேதியா தேசத்திலேயும் பெர்சியா தேசத் திலேயும் வெகு உபத்திரவப்பட்டு அநேகம் பேரை ஈடேற்றத்தின் வழியிலே திருப்பிக் கொண்டு வந்த அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஈர்க்கானியா தேசத்திலே வந்த சோதனை களை எல்லாம் தெய்வ அன்பினாலும் செபத் தினாலும் செயித்து ஒன்றுக்கும் அஞ்சாமல் சத்திய வேதத்தை அவர்களுக்குப் போதித்த அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எத்தியோப்பியா என்கிற சீமைக்கு ஒளியாக நின்ற அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிந்து தேசத்தில் கந்தப்ப இராசா குடும்பத்தில் ஞானஸ்நானம் கொடுத்து ஞான ஒளி பெருகச் செய்த அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கடலில் சுற்றிவந்த பிரமாண்டமான மரத்தை அநேகரால் இழுக்கக் கூடாதிருந்தும், உமது இடுப்பில் இருந்த கயிற்றினாலே கட்டி அர்ச். சிலுவை அடையாளத்தை வரைந்து இழுத்துக் கொண்டு வந்து கரையில் சேர்த்த அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரணத்தை அடைந்த குழந்தையை சர்வேசுர னுடைய உதவியினாலே உயிர்ப்பித்தவரான அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் சுவாமியைப் பற்றி செய்ய வேண்டியவைகளை எல்லாம் மகா அன்போடும் தாழ்ச்சியோடும் செய்த அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமக்குப் பின் அர்ச். சவேரியார் சிந்து தேசத் துக்கு வரப் போகிறதை தூரதிருஷ்டியால் கண்டு ஜனங்களுக்கு வெளிப்படுத்தின அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இப்படிப்பட்ட அற்புதங்கள் எல்லாத்தையும் கண்ட சிந்து தேசத்து அஞ்ஞானிகள் பசாசினால் ஏவப்பட்டு பகை கொண்டு மரணத்திற்கு உட்படுத்தின அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஈட்டியினால் குத்தப்பட்டு மகா சந்தோஷத்தோடே வேதசாட்சி முடிபெற்று நித்திய காலம் வாழப் பரலோகத்திற்கு ஏறின அர்ச். தோமையாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

பிரார்த்திக்கக்கடவோம்

எங்கள் பேரிலே கொண்ட அன்பினாலே எங்களுக்காக மரணமடைந்த சேசுவே!  உமது ஊழியனாகிய அர்ச். தோமையாரைக் கொண்டு சிந்து சேதத்துக்கு வேத உபதேசம் பண்ணி வைத் தீரே.  அவருடைய பேறுபலன்களினாலே, இப் போது இத்தேச மக்கள் அனைவரும் மனந்திரும் பவும், பதிதர்கள் தங்களுடைய பிசகுகளை விட்டுவிடவும், நாங்களும் விசுவாசத்திலே திடன் கொண்டு பூலோகத்தின் சோதனைகளையயல் லாம் பொறுமையுடன் ஜெயித்துப் பேரின்ப பாக்கியம் அடையவும் செய்தருளும் சுவாமி. 

ஆமென்.