அர்ச். அன்னம்மாளை நோக்கி ஜெபம்

(திருநாள் : ஜு லை 26)

மகா பரிசுத்தமும் இரக்க மும் அநுக்கிரகமும் நிறைந்த அர்ச். அன்னம்மாளே! தேவமாதாவின் தாயே, நீர் எம்மாத்திரம் சர்வேசுரனால் சிநேகிக் கப்பட்டிருக்கிறீர்! நீர் கேட்கும் மன்றாட்டை அவர் தள்ளிப்போடுகிறதில்லையயன்று அறிந் திருக்கிற நாங்களும் உமது திருப்பாதத்தை அண்டி வருகிறோம். உம்மால் உலகில் நடந்த புதுமைகளுக்குக் கணக் கில்லையே.  வரப்பிரசாதத் தைத் தாராளமாய்க் கொண்ட அர்ச். அன்னையே, நாங்கள் மெய்யான சமுசாரிகளாய் நடந்து நீர் வாய்க்கால் ஓரத்தில் நடப்பட்ட மரம் போலச் சமுசாரத்தில் நற்கனி தந்து எங்கள் துன்பங்களில் ஆறுதலடைந்து பொறுமை கொண்டு எங்களுக்கு ஆண்டவர் தந்த பிள்ளைகளை நன்னெறியில் நடப்பிக்கும் வரத்தை நாங்கள் அடையப் பண்ணியருளும்.  நாங்கள் குடும்ப ஸ்திதியில் ஒருமனப்பட்டு அயல் வீட்டாரோடு சிநேகமாய் வாழப் பண்ணும். சங்கையும் நற்கீர்த்தியும் ஒருமைப்பாடும் சமுசாரத்தில் பயபக்தியும் ஒடுக்க வணக்கமும் நாங்கள் பெறச் செய்தருளும்.  எங்கள் பிள்ளைகள் தேவஸ்துதியைக் கூறவும், நாங்கள் அறிவிலும் தேவ ஆசீர்வாதத்திலும் உயரவும் செய்தருளும். அன்றன்றுள்ள அப்பத்தை நாங்கள் கொண்டு பசாசினாலும் பொல்லாத மனிதராலும் வெல்லப்படாதிருக்கப் பண்ணியருளும்.  எங்கள் வீட்டையும் அதிலுள்ளதையும் அக்கினிக்கும் வெள்ளத்திற்கும் திருடருக்கும் தப்பித்துவிட ஆண்டவரை மன்றாடும்.  கர்த்தர் பட்டணத்தைக் காக்காவிடில் சாமக்காவலன் விருதாவாய் விழித்திருப்பானல்லோ? தேவபக்தியும் உண்மை யும் கீழ்ப்படிதலுமுள்ள ஊழியர்களை நாங்கள் அடையவும் எங்கள் பிள்ளைகளுக்குச் சரியான பலன் சேரவும் மன்றாடும்.  எங்கள் உபத்திரவங்கள் இலேசாகவும், நாங்கள் நித்தியமானவைகளை விரும்பவும், எல்லாத் தீமைக்கும் வேராகிய பண ஆசையில் நின்று நீங்கவும் பண்ணியருளும். மகா உச்சிதமான வரப்பிரசாதங்களை அடைந்த பரிசுத்த அன்னம்மாளே, நாங்கள் தேவ வரத்துக்கே ஏங்கி நிற்கப் பண்ணியருளும்.  நாங்கள் தேவ காரியங்களை விரும்பி மேலான புத்தியைக் கொண்டு வாழ மன்றாடும்.  நன்மை எல்லாம் கொண்ட தேவனை நாங்கள் அண்டி அவரால் கீர்த்தி பெற்று உயரப் பண்ணியருளும். 

ஆமென்.