பரிசுத்த லூர்து மாதாவின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

திவ்விய இரட்சகரை எங்களுக்கு அளித்த அமலோற்பவ மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ கிருபையின் அதிசயத்திற்குரிய எத்தன மாகிய அமலோற்பவ மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

லூர்துமலை கெபியில் தரிசனமான அமலோற்பவ மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தை வெறுத்தல் அவசியம் என்று காண்பிக்க ஏகாந்த ஸ்தலத்தில் தரிசனமான அமலோற்பவ மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மோட்ச பிரதாபத்தின் மிகுதியைக் காண்பிக்க பூங்கதிர்கள் அணிந்த திருமேனியுடன் தரிசன மான அமலோற்பவ மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஞான செளந்தரியத்துக்கு மிஞ்சிய செளந்தரி யம் இல்லையயன்று காண்பிக்க அழகின் அவதாரம் போல் தரிசனமான அமலோற்பவ மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆத்தும சுத்தத்துக்கு மேலான சுத்தம் இல்லை யயன்று காண்பிக்க சுத்த வெண்ணாடையை உடுத்தினவர்களாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கற்பென்பது வானோருக்கு அடுத்த புண்ணி யம் என்று காண்பிக்க மேகமற்ற வானம் போன்ற நீலக்கச்சையைக் கட்டிக் கொண்டவர்களாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கற்புக்குக்காவல் அடக்க ஒடுக்கம் என்று காண்பிக்க நெடு முக்காட்டைப் போர்த்திக் கொண்டவர்களாய் தரிசனமான அமலோற்பவ மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நாங்கள் நாடவேண்டிய கதி மோட்சம் என்று காண்பிக்க வானத்தை அண்ணார்ந்தவர்களாய் தரிசனமான அமலோற்பவ மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஐம்பத்து மூன்று மணி செபத்தை அடிக்கடி சொல்லுதல் உத்தம பக்திக் கிருத்தியம் என்று காண்பிக்க செபமாலையைத் திருக்கரத்தில் ஏந்தினவர்களாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கல்லும் முள்ளும் நிறைந்த வனமாகிய இந்த உலகத்தில் தேவரீரே எங்களுக்குத் துணை என்று காண்பிக்க கற்பாறையில் படர்ந்த முள்ளு ரோஜா செடியைக் காலாலே மிதிக் கிறவர்களாய்த் தரிசனமான அமலோற்பவ மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாழ்ச்சியும் தரித்திரமும் உள்ளவர்கள் பேரில் தேவரீர் மிகுந்த பட்சமாயிருக்கிறீர் என்று காண்பிக்க ஓர் ஏழையான சிறு பெண்ணுக்குத் தரிசனமான அமலோற்பவ மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவரீரை நேசித்து நம்பிக் கொண்டிருப்பவர் களுக்கு அசாத்தியமானது ஒன்றுமில்லை என்று காண்பிக்க அந்த சிறு பெண் மூலமாக ஒரு நீரூற்றைப் பிறப்பித்தருளிய அமலோற்பவ மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவரீருடைய வல்லமையுங் கிருபையும் அளவிட்டுச் சொல்ல முடியாது என்று காண்பிக்க அந்த நீரூற்று தாராளமாய்ச் சுரந்து வழிந்தோடவும் கணக்கற்ற வியாதியஸ்தருக்கு ஆரோக்கியத்தை அளிக்கவும் செய்தருளிய அமலோற்பவ மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவிகளை நன்னெறியில் திருப்புகின்ற லூர்து நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நீதிமான்களை ஸ்திரப்படுத்துகின்ற லூர்து நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செத்தவர்களுக்கு உயிரைக் கொடுக்கின்ற லூர்து நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குருடருக்குப் பார்வை அளிக்கின்ற லூர்து நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செவிடருக்குச் செவியைத் தருகின்ற லூர்து நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சப்பாணிகளை நடக்கச் செய்கின்ற லூர்து நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நோயாளிகளைக் குணமாக்குகின்ற லூர்து நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கஸ்தியாயிருக்கிறவர்களைத் தேற்றுகின்ற லூர்து நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல அவசரங்களிலும் உதவியாயிருக்கின்ற லூர்து நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மென்மேலும் மன்றாடப்படுகின்ற லூர்து நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

லூர்தென்னும் திரு ஸ்தலத்திற்குக் கணக்கற்ற ஜனங்களை வரச் செய்கின்ற லூர்து நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் தாயாகிய திருச்சபைக்காக உம்மை மன்றாடுகிறோம் லூர்துமலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். பாப்பானவருக்காகவும் உம்மை மன்றாடுகிறோம் லூர்துமலை மாதாவே,  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பல தண்டனைகளுக்குப் பாத்திரமாயிருக்கிற எங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம் லூர்து மலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் உற்றார், பெற்றார், புத்திரர், நண்பர்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம் லூர்து மலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் விரோதிகளுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம் லூர்துமலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல பாவிகள், பதிதர், துலுக்கர், அஞ்ஞானி களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம் லூர்து மலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களா யிருக்கத்தக்கதாக, பரிசுத்த லூர்துமலை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! முழு மனதோடே தெண்டனாக விழுந்து கிடக்கிற எங்களைப் பார்த்து, அமலோற்பவ லூர்து நாயகியுடைய வேண்டுதலினாலே எங்கள் பாவ வழியை விட்டுப் புண்ணிய நெறியைப் பற்றிக்கொள்ளவும், தேவ இஷ்டப்பிர சாதத்தோடே மரணித்து, மோட்ச பேரின்பத்தை அடையவும், எங்கள் ஆண்டவரான சேசுநாத ருடைய திருமுகத்தைப் பார்த்து தயை செய்தருளும்.  

ஆமென்.