பரிசுத்த லூர்து ஆண்டவளை நோக்கி ஜெபம்

ஓ பரிசுத்த கன்னிகையே, உமது மகிமைப் பிரதாப காலத்தில், இப்பூவுலகின் துன்ப விசாரங் களை மறந்துவிடாதேயும்.  சீவியத்தின் கசப்பான பாத்திரமாகிய இக்கட்டு இடைஞ்சல்களோடு ஓயாது போராடி கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பவர்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும்.

ஒருவர் ஒருவரை நேசித்துப் பிரிந்து போயிருப்பவர்கள் மீது இரக்கமாயிரும்.

அமைதியற்ற எங்கள் இருதயத்தின் மீது இரக்கமாயிரும்.

பலவீனமுள்ள எங்கள் விசுவாசத்தின் மீது இரக்கமாயிரும்.

எங்களால் நேசிக்கப்பட்டவர்கள் மீது இரக்கமாயிரும்.

அழுகிறவர்கள், செபிக்கிறவர்கள், பயப்படுகிறவர்கள் ஆகிய இவர்கள் மீது இரக்கமாயிரும்.

நம்பிக்கையையும், சமாதானத்தையும் சகல மனிதர்களுக்கும் தந்தருளும். 

ஆமென். 

3 அருள்...