பாத்திமா காட்சிகள்

போர்த்துக்கல் நாட்டில் பாத்திமா என்னும் சிற்றூரில் கோவா தா ஈரியா என்ற மலைச் சாரலில் லூஸியா, பிரான்சிஸ், ஜஸிந்தா என்ற மூன்று சிறுவர்களுக்கும் 1917-ம் ஆண்டு தேவ மாதா 6 முறை காட்சியளித்தார்கள்.  காட்சி அருளுமுன் கடவுள் தம் தூதனை அனுப்பி அக் குழந்தைகளை 1916-ம் ஆண்டு முதலே அதற்குத் தயாரித்துவந்தார்.  தினமும் தவறாமல் ஜெப மாலை செபியுங்கள். பாவிகள் மனந்திரும் பும்படியாக அவர்கள் அதிகமாக செபிக்கவும் கடவுள் அவர்களுக்கு அனுப்பும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளவும் வேண்டுமென்று அறிவுறுத் தினார்.  மாதாவின் மாசற்ற இருதயம் முட்களால் சூழப்பட்டும் குத்தித் துளைக்கப் பட்டும் காணப்பட்டது.  நன்றியற்ற மனிதர்கள் செய்யும் பாவங்களே அவை என்று மாதா கூறினார்கள்.

மூன்றாம் காட்சியில் மாதா நரகத்தைத் திறந்து காண்பித்தார்கள்.  பாவிகளைக் காப்பாற்ற உலகில் தன் மாசற்ற இருதயத்தின் மீது பக்தியை ஏற்படுத்த கடவுள் விரும்புகிறார் என்றும்  ரஷ்யா வைத் தன் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்றும் முதல் சனிக்கிழமைகளில் பரிகார நன்மை வாங்க வேண்டுமென்றும் கேட்டார்கள்.

மாதா வாக்களித்தபடியே 6-ம் காட்சியில் மாபெரும் சூரிய அதிசயத்தை நிகழ்த்தினார்கள். “நான் உங்களிடம் கூறுவதை நீங்கள் செய்தால் அநேக ஆன்மாக்கள் காப்பாற்றப்படுவார்கள். உலகில் சமாதானம் நிலவும்” என்றும் மாதா கூறினார்கள்.