தேவ இரகசிய ரோஜா மாதாவின் காட்சி

1947-ம் ஆண்டு மோன்டிசியாரியில் மாதா பியயரினாவுக்கு தேவ இரகசிய ரோஜா மாதா வாக 7 முறை காட்சியளித்தார்கள்.  ஜெபம், தவம், பரிகாரம்  ஆகியவற்றின் காரணத்தையும் நோக்கத்தையும் விளக்கினார்கள். கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆன்மாக்கள் பிரமாணிக்கம் தவறி அசமந்தமடைந்து தங்கள் தேவ அழைத்தலைக் கூட கைவிட்டுவிட்டார்கள்.  இதனால் திருச்சபையில் வேத கலாபனையும் தண்டனையையும் கொண்டு வந்தார்கள் என்று கூறினார்கள்.

“ஆண்டுதோறும் ஜூலை 13-ம் தேதியை தேவ இரகசிய ரோஜாவின் மகிமைக்காகக் கொண்டாடுங்கள்” என மாதா கூறினார்கள்.