தேவ இரகசிய ரோஜா மாதா பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ இரகசிய ரோஜாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிறீஸ்துவின் கன்னி மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இஸ்பிரீத்துசாந்துவின் பத்தினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விலையேறப்பெற்ற சீவியத்தின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இழக்கப்பட்ட பிள்ளைகளின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அகதிகளின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இனிய இரக்கத்தின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

துயரத்தின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் ஆத்துமத்துடையவும் மனதினுடை யவும் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முதுமையடைகிறவர்களின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரிக்கிறவர்களின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகா கற்புடைய கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகா தாழ்ச்சியுள்ள கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகா நிலையுள்ள கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மோட்ச பூங்காவின் ரோஜாப்பூவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உதய காலையின் சுகந்த வாசனையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சமாதான காணிக்கைகளின் பலிபீடமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரகாசத்தின் படிகமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சமுத்திரத்தின் முத்தே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தைரியமுடையவர்களின் கேடயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முத்திரையிடப்பட்ட முற்றத்தின் வாசலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

காலத்தின் கண்ணாடியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விடாது பற்றிக்கொள்ளும் அன்பின் சுவாலையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சாந்தத்தின் மென்காற்றே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ வரப்பிரசாதத்தின் ஊற்றே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிநேகத்தின் அர்ச்சிக்கப்பட்ட பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிறீஸ்துநாதருடைய ஆசீர்வதிக்கப்பட்ட தாயாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உள்ளரங்க ஆனந்தத்தின் ஏரியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உறுதியுடைத்தான பர்வதமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உறுதியுள்ள தீர்மானத்தின் முழக்கமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ப்பணித்தலின் ஆழமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நித்தியத்தின் கைகாட்டியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.                                                                                              

சம்மனசுக்களின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மலரினங்களின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியன் கலைகளின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்த திருச்சபையின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்த தேவநற்கருணையின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மாசற்ற இருதய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வார்த்தையானவரின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிருஷ்டிப்பிலேயே அமலோற்பவமாயிருந்து வேதனையால் துளைக்கப்பட்டு அன்பினால் பற்றி எரிகிற மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே! எங்கள் குருக்களுக்காகவும் எல்லாத் துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே! தவறான பாதையில் நடக்கிற எல்லாக் குருக்களுக்காகவும்  துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே! கடவுளுக்குச் செலுத்த வேண்டிய சங்கை மரியாதையை செலுத்தாத எல்லாக் குருக் களுக்காகவும்  துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே! தங்கள் விசுவாசத்தின்படி ஒழுக தைரியமிழந்து விட்ட எல்லாக் குருக்களுக் காகவும்  துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரக சிய ரோஜாவே! மகா பரிசுத்த தேவ நற்கருணைக்கு சங்கை செலுத்தாத எல்லாக் குருக்களுக்காகவும்  துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே! ஏமாற்றமுள்ள உலகத்தின் மாயக் கவர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு கடவுளைத் தேடாத எல்லாக் குருக்களுக்காகவும்  துறவிகளுக் காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

வேதனையால் துளைக்கப்பட்டு அன்பினால் பற்றியயரிகிற மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே! பாவசங்கீர்த்தனம் செய்வதைக் கைவிட்டு பாவகரமான செயல்களை அனுமதிக்கிற எல்லாக் குருக்களுக்காகவும்  துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே! உம்மீது அன்பில்லாமல் துரிதமாய் இருதயத்தில் குளிர்ந்துபோன  எல்லாக் குருக்களுக்காகவும்  துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே! பாப்புவின் கட்டளை களுக்குக் கீழ்ப்படியாத எல்லாக் குருக்களுக் காகவும்  துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரக சிய ரோஜாவே! தப்பறையின் மார்க்கத்தில் சென்று மக்களின் மனங்களைக் கெடுக்கிற எல்லாக் குருக்களுக்காகவும்  துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே! திருச்சபையிலிருந்து விலகிச் சென்றுவிட்ட  எல்லாக் குருக்களுக்காகவும்  துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே!  உம்முடைய மாசற்ற இருதயத்தினிமித்தம் இந்த எல்லாக் குருக்களுக் காகவும்  துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே! உம்முடைய கண்ணீர்களினிமித்தம் எல்லாக் குருக்களுக்காகவும்  துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே! சிலுவையிலே, குருக்களை யயல்லாம் உமது மகன்களாகக் கொடுத்த உம் திருக்குமாரன் நிமித்தம் எல்லாக் குருக்களுக்காகவும் துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே!  எல்லா மக்களையும் அரவணைக்கும் உமது தாய்மையினிமித்தம் எல்லாக் குருக்களுக்காகவும்  துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே!  சேசுக்கிறீஸ்துவின் எல்லா ஊழியர்களுக்கும் முன்மாதிரிகையாக ஆண்டவ ரின் அடிமையான உமது தாழ்ச்சியினால் நீர் துலங்குவதினிமித்தம் எல்லாக் குருக்களுக்காகவும்  துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே! குருக்கள், துறவிகளுக்காக நீர் ஊடுருவப்படும் துயர வாள்களின் நிமித்தம் எல்லாக் குருக்களுக்காகவும்  துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே! நீர் முழு கீழ்ப்படிதலுடன் அனுபவித்த தனிமை, கைவிடப்படுதலின் நிமித்தம் எல்லாக் குருக்களுக்காகவும்  துறவி களுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே!  எங்களுக்காக நீர் செய்யும் வெல்ல முடியாத மன்றாட்டின் நிமித்தம் எல்லாக் குருக்களுக்காகவும்  துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே!  நீர் எல்லாம் வல்ல வரப்பிர சாதங்களின் மத்தியஸ்தியாய் இருப்பதின் நிமித்தம் எல்லாக் குருக்களுக்காகவும்  துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

மரியாயின் மாசற்ற இருதயமே, தேவ இரகசிய ரோஜாவே!  உம்முடைய துயரங்களையும், நீர் சிந்தும் இரத்தக் கண்ணீர்களையும் முன்னிட்டு எல்லாக் குருக்களுக்காகவும்  துறவிகளுக்காகவும் மன்றாடும். அவர்களை இரட்சியும் மாதாவே.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக, சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

பிதாவுடன் எங்கள் மத்தியஸ்தராயிருக்கிற ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவே!  உம்முடைய தாயும் திருச்சபையின் தாயுமாயிருக்கிற தேவ இரகசிய ரோஜாவான ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாயை எங்கள் அன்னையாகவும் உம்முடன் எங்கள் மத்தியஸ்தியாகவும் நியமிக்கச் சித்தமானீரே. ஆசீர்வாதங்களைக் கேட்டு உம்மிடம் வருகிற யாவரும் மரியாயின் மாசற்ற இருதயத்தின் வழியாக அவைகளைப் பெற்று மகிழ கிருபை புரிந்தருளும்.  பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் ஒரே சர்வேசுரனாய் சீவித்து சதாகாலமும் ஆட்சி செய்கிறவரே.  

ஆமென்.