அர்ச். ஞானப்பிரகாசியாரை நோக்கி கற்பென்கிற புண்ணியத்தைக் கேட்கும் ஜெபம்

(திருநாள் : ஜு ன் 29)

இவ்வுலகில் சம்மனசைப் போல் பரிசுத்தராய் நடந்த அர்ச். ஞானப்பிரகாசியாரே! உமது அபாத்திர ஊழியனாகிய அடியேன் விசேஷ பயபக்தியோடே என்னுடைய ஆத்தும சரீர கற்பை உமது அடைக்கலத்திலே வைக்கிறேன். அதை உமது பரிசுத்த கற்போடு ஒன்றாகக் கூட்டி செம்மறிக் குட்டியான சேசுக் கிறீஸ்துநாதருக்கும், கன்னிகைகளுக்கு இராக்கினியான பரிசுத்த தேவமாதாவுக்கும் ஏற்ற பாத காணிக்கையாக ஒப்புக் கொடுத் தருளும். அடியேன் சாவான பாவத்திலே விழாத படிக்கும், யாதொரு துர்க்கந்த மோக பாவத்தைக் கட்டிக்கொள்ளாதபடிக்கும் என்னைக் காத்து, நான் சோதனையிலேயும், பாவச் சமயத்திலேயும் இருக்கிறபோது, தேவரீர் என் இருதயத்திலே நின்று அசுசியான நினைவுகளையும், ஆசைகளையும் அகற்றி, நித்திய மோட்ச பாக்கியத்தையும், நரக ஆக்கினைகளையும் எனக்காகச் சிலுவையில் அறையுண்டு மரித்த சேசுக்கிறீஸ்துநாதரையும் நினைப்பூட்டி, தேவபயத்தை என் இருதயத்தில் உறுதியாய்ப் பதியச்செய்து, நான் இவ்வுலகில் உம்மைக் கண்டுபாவித்தபின் உம்மோடுகூட பரகதியில் தேவதரிசனை அடையும்பொருட்டு தேவ சிநேக அக்கினியை என் இருதயத்திலே எரியப் பண்ணியருளும். 

ஆமென். 

பர. அருள். திரி.

(செய்த பாவங்களுக்கு உத்தம மனஸ்தாபப்பட்டு பக்தியோடு இதை செபிக்கும் ஒவ்வொரு விசைக்கும் 100 நாள் பலனை 7‡ம் பத்திநாத ரென்னும் அர்ச். பாப்பானவர் அளித்தருளினார்).