மனைவியின் ஜெபம்

அர்ச். தேவமாதாவே!  நீர் சூசையப்பரோடு வாசம் பண்ணும்போது அவரது மனங்கோணா மல் நடந்து கொண்டீரே, ஏவையினுடைய மாசு தங்காத நீர் இப்படி நடக்க, உன் புருஷனுக்குக் கீழாயிருப்பாயயன்று ஏவைக்கு விதித்த நிபந்தனை என் பேரில் இருக்கிறதே. ஆகையால் நான் இராக்கேலைப் போல புருஷன் சிநேகத்துக்குரியவளாகவும் ரெபேக்காளைப் போலச் சமுசார தொந்தரவுகளில் விவேகமுள்ளவளாகவும், சாரா என்பவளைப்போல எல்லாத்திலும் பிரமாணிக்க முள்ளவளாகவுமிருக்க உமது திருக்குமாரனை மன்றாடும். மேலும் என் மாமனார் மாமியார் முதலான பெரியவர்களாலே எனக்கு இப்பூமியில் நேரிடும் துன்ப துரிதங்களைப் பொறுமையோடு சகிக்கவும், பிள்ளைகளாலேயும், உறவின் முறையார்களாலேயும் வரப்பட்ட சஞ்சலங்களை பொறுமையோடு பொறுக்கவும் வேண்டிய வரப்பிரசாதங்களை எனக்கு வாங்கித் தந்தருளும். 

ஆமென்.