புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கர்ப்ப ஸ்திரீகள் செய்யத்தகும் ஜெபம்

கன்னியும் தாயுமான பரிசுத்த மரியாயே!  நீர் சேசுநாதரை உமது திருவயிற்றில் தாங்கிக் கொண்டிருந்த நாளெல்லாம் ஆனந்த சந்தோ­த்தில் அமிழ்ந்திக் கடைசியாய் பேறுகாலமான போது வாக்குக்கெட்டாத உந்நத பரவசத்தில் பிரவேசித்துத் திவ்விய பாலகனைப் பெற்றீரே!  அந்தப் புத்திக்கெட்டாத ஆனந்தத்தைப் பார்த்து என் பேரில் கிருபையாயிரும்.  நானே பாவத்தில் பிறந்து சகலமான உபத்திரவங்களுக்கும் உள்ளாயிருக்கிறேன். ஏவாளுக்கிட்ட ஆக்கினை என் பேரிலுமிருக்கிறது. ஆகையால் என் நிலைமையைப் பார்த்து என் பலவீனங்களின் பேரில் இரக்கமாயிருந்து, என் வயிற்றிலிருக்கிற சிசுவுக்கு யாதொரு பொல்லாப்பின்றி கொஞ்சம் லேசான வருத்தத் தோடு பிரசவிக்க அனுக்கிரகம் செய்தருளும். மேலும் அந்தப் பாலகனுக்குப் புத்தி சித்தம் மேன் மையுள்ளதாகி, உமது திருக்குமாரனுடையவும், உம்முடையவும் ஊழியத்திலே நிலை கொண்டு பேரின்ப பாக்கியத்தின் வழியிலே நடக்க உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். 

ஆமென்.